SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2022-03-10@ 17:31:21

நன்றி குங்குமம் தோழி

*கட்டிப் பெருங்காயத்தில் ஒரு பச்சை மிளகாயை அழுத்தி பதித்து வைத்தால் இளகும். சுலபமாக வேண்டிய அளவு பிய்த்துக் கொள்ளலாம்.

*குருமா போன்ற கிரேவி அயிட்டங்களில் காரம் அதிகமானால் ஒரு ஸ்பூன் வெண்ணெய் போட்டு கொதிக்க வைத்தால் போதும். காரம் மட்டுப்படும்.

*வதக்கிய காய்கறியில் எண்ணெய் அதிகமிருக்கிறதா! டோன்ட் வொர்ரி. கொஞ்சம் கொள்ளு மாவை தூவுங்கள். கொள்ளு எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும்.


- யாழினி பர்வதம், சென்னை.

*சூடான சப்பாத்திகளை பாத்திரத்தில் போட்டு மூடினால், நீர் விட்டு ஈரப்பதமாகும். இதை தவிர்க்க சூடான சப்பாத்திகளை கனமான வெள்ளைத் துணியில் சுற்றி பாத்திரத்திற்குள் வைக்கவும்.

*சுண்டைக்காய், பாகற்காய் போன்ற கசப்பான காய்கறிகளை சமைக்கும் முன்பு அரிசி களைந்த நீரில் ஊறவைத்தால் கசப்பு நீங்கும்.

*வெண்ணெயை காய்ச்சி இறக்கும்போது முருங்கைக் கீரை இல்லை என்றால், அரை தேக்கரண்டி வெந்தயத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும்.

*பூரி நீண்ட நேரம் கரகரப்பாக இருக்க, சிறிது அரிசி மாவு அல்லது சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து மாவு பிசையவும்.

- மல்லிகா அன்பழகன், சென்னை.

*சப்பாத்தி மாவில் சிறிது அருகம்புல் சாறு கலந்து பயன்படுத்தினால் மிருதுவாகவும், தாது உப்புகள், வைட்டமின்கள் சத்துகளும் கிடைக்கும்.

*பூரி மாவை தடிமனாக உருட்டி பயன்படுத்தினால் பூரி நன்றாக உப்பி வரும்.

*மாவு டப்பாக்களில் பிரியாணி இலையை போட்டு வைத்தால் மாவு ஈரமாகாமலும், கட்டியாகாமலும், புதிது போலவே இருக்கும்.

*சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வாங்கும் போது கெட்டியான கிழங்காக வாங்கினால் மட்டுமே இனிக்கும்.

- அனிதா நரசிம்மராஜ், மதுரை.

*அலுமினிய பாத்திரத்தை விறகு அடுப்பில் வைத்து சமைக்கும்போது பாத்திரத்தின் வெளிப்புறத்தில் சிறிதளவு சமையல் எண்ணெய் தேய்த்து சமைத்தால், தேய்க்கும் போது பளிச்சென்று சுத்தமாகிவிடும்.


*முட்டை ஆம்லெட் போடும்போது, வெங்காயம், மிளகாயுடன் சிறிதளவு முருங்கை கீரை சேர்த்தால் பார்ப்பதற்கு அழகாகவும், ருசியாகவும், சத்துள்ளதாகவும் இருக்கும்.

*ஏலக்காய் பொடி செய்யும் போது அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் நன்கு பொடியாக கிடைக்கும்.

- சாந்தி நடராஜன், புத்தன் துறை.

*இட்லி பொடி செய்யும் போது சிறிது கறிவேப்பிலையையும் போட்டு மிக்ஸியில் அரைத்தால் மணமாக இருக்கும்.

*வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

*கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கியவுடன் வாழைபட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

- கே.ராகவி, தி.மலை.

*சப்பாத்தி மாவில் சிறிது சர்க்கரையும், கால் கப் பாலும் விட்டு, வெதுவெதுப்பான நீரை விட்டுப் பிசைந்த பிறகு ஒரு மத்தினால் மாவின் மீது அடித்து (மாவு முழுவதும் நன்றாக அடிக்கவும்). பிறகு சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்.

*சிகப்பு மிளகாய் அரைக்கும் போது நன்றாக அரைபட அவற்றை வெந்நீரில் ஊறவைத்துப் பிறகு அரைத்தால் நன்றாக மசியும்.

*தோசை மாவு அதிகம் புளிக்காமல் இருக்க வாழை இலைத் துண்டை மாவில் போட்டு வைக்கவும்.

*தேங்காய் சாதம் செய்யும் போது ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளை எள்ளை வறுத்து பொடி செய்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.

- இந்திரா கோபாலன், திருச்சி.

*குழம்பில் உப்பு கூடி விட்டால் ஒரு சிறு வாழைத்தண்டு அல்லது எலுமிச்சம் பழ அளவு சாதத்தை உருட்டிப் போட்டு சிறிது கொதித்ததும் எடுத்து விட சகஜ நிலைக்கு வந்து விடும்.

*கேக் வேக வைக்கும் போது அதன் மேல் ஒரு பிரவுன் பேப்பர் போட்டு மூடினால் வெந்த பின் கேக்கின் மேல் ஆடைகட்டாமலிருக்கும்.

*தயிர் புளித்து விடுமோ என அஞ்சத் தேவையில்லை. ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

*முட்டைக் கோஸ் சமைக்கும் போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமலிருக்கும்.

- கே.எல். புனிதவதி, கோவை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்