SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்றாட வாழ்வின் அடுக்களை குறிப்புகள்!

2022-03-08@ 17:08:21

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

வேலைக்கு போகும் பெண்களாக இருந்தாலும் சரி வீட்டின் இல்லத்தரசியாக இருந்தாலும் சரி பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் அதிக நேரம் இருக்கும் சமையல் அறை சுத்தமாகவும் அங்குள்ள பொருட்கள் எந்த பாதிப்பு அடையாமலும் இருக்க வேண்டும். அதற்கு சின்னச் சின்ன எளிய டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும்.

*உப்பு கொட்டி வைக்கும் ஜாடியில், ஈரம் சேர்ந்து கட்டி கட்டியாக ஆகிவிடுகிறதா? அதில் சிறிதளவு அரிசியைப் போட்டு விடவும். கட்டி கட்டிகளாக இருக்கும் உப்பு, முன்பிருந்த மாதிரி உதிரி உதிரியாக மாறிவிடும். அதுவும் இந்த குளிர் மாதங்களில் இதைப் பின்பற்றுவது அவசியம்.

* உப்பை ஜாடியில் கொட்டும்போது ஒரு டீஸ்பூன் மக்காச்சோள மாவைக் கலந்து வைத்தால் உப்பில் ஈரத்தன்மை ஏற்படாது. இந்த மாவை உப்போடு கலந்து சாப்பிட்டாலும் பாதிப்பு ஏற்படாது.

*அப்பளம், வடாம் போன்றவை வைத்திருக்கும் டப்பாவில் சிறிது பெருங்காயத்தை போட்டு வைத்தால், அவை நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

*பெருங்காயம் கல் போன்று இருந்தால், வெறும் கடாயை அடுப்பில் வைத்து, காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். லேசான சூடு இருக்கும்போதே அதைக்கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்துப் போட்டால், துளித் துளியாக உதிர்ந்துவிடும். ஆறியதும் டப்பாவில் போட்டு வைத்துப் பயன்படுத்தலாம்.

*அப்பளம், வடகம் பொரிப்பதற்கு முன் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூளை தூவி, பிறகு பொரித்துப் பாருங்கள். நிறம், மணம் சுவையுடன் சூப்பராக இருக்கும்.

*வீட்டிலுள்ளவர்கள் பயன்படுத்தும் மாஸ்க் ஒரே நிறத்தில் இருந்தால் குழப்பம் தான் வரும். எந்தவித மாஸ்க் வாங்கினாலும், அப்பாவுக்கு சிவப்பு, அம்மாவுக்கு நீலம், அக்காவுக்கு ரோஸ் என்று நிறத்தை தீர்மானித்துக்கொண்டு வாங்கினால்  மாஸ்க் மாறிப்போக ‘வாய்ப்பே இருக்காது.’ இது டூத் பிரெஷ்ஷுக்கும் பொருந்தும்.

*கத்தரிக்காயை முழுசான தணலில் சுட்டு துவையல், பச்சடி செய்வது வழக்கம். இப்படிச்் செய்யும்போது சமயங்களில் காய் தீய்ந்து போவதும், சில இடங்கள் வேகாமல் இருப்பதும் உண்டு. அதைத் தவிர்க்க… ேதாசைக்கல் அல்லது வாணலியில் லேசாக எண்ணெய் தடவி, முழு கத்தரிக்காய்களை கல்லின் மீது வைத்து மூடி விடவும். ஒரு நிமிடம் கழித்துத் திருப்பிப் போட்டு மூடி, ஒரு நிமிடம் வைக்கவும். இப்படி ஒரு நிமிட இடைவேளைக்கு திருப்பிப் போட்டு எடுத்தால் கத்தரிக்காய் நன்றாக வெந்திருக்கும். தடிமனான தோல் எளிதில் உரிந்து, சமைக்க ஏதுவாகி விடும்.

*பிஸ்கெட்டுகளை அடைத்து வைக்கும் டப்பாவுக்குள் டிஷ்யூ பேப்பரை பரப்பி, அதன்மீது பிஸ்கெட்டுகளை வைத்தால், நீண்ட நாட்களுக்கு ஃப்ரஷ்ஷாக இருக்கும்.

தொகுப்பு: இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

 • ukrainmaalll11

  உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்