SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2022-03-03@ 17:49:15

நன்றி குங்குமம் தோழி

* கோதுமை மாவில் உப்பு சேர்த்து லேசாக சுட வைத்த நீர் விட்டுப் பிசைந்து கெட்டியாக அதனுடன் துருவிய கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி அடை செய்தால் சத்தான சுவையான அடை ரெடி.

* வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு முதல்நாள் இரவே ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் காலையில் நறுக்கும்போது கண்ணீர் வராது சுலபமாக உரிக்கலாம்.

* ஆரஞ்சு பழத்தோலை பொடியாக்கி ரசத்தில் போட்டு கொதிக்க வைத்தால் மணமும் சுவையும் கூடும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

* வெண்டைக்காயை துணியால் சுற்றி அதனை பாலிதீன் கவரில் வைத்து ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்டநாட்களுக்குக் கெடாது.

* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்தமல்லி இலைகள் வாடாமல் இருக்க அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

- எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.

* ரிப்பன் பக்கோடா செய்யும் போது நறுக்கிய வெங்காயத்துடன் மூன்று காய்ந்த மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, மாவுடன் ேசர்த்துப் பிசைந்து பொரித்தால் வித்தியாசமான சுவையுடன் பக்கோடா தயார்.

*கொதிக்கும் எண்ணெயில் நனைத்த துணியால் ஊறுகாய் ஜாடியின் உட்புறத்தை துடைத்து, பின் ஊறுகாயை அதில் போட்டு மூடி வைத்தால் ஊறுகாய் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.

* தயிர் வடை செய்யும் போது உளுத்தம் பருப்புடன் ஐந்தாறு முந்திரி பருப்பையும் ஊற வைத்துச் செய்தால் வடை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

- ஜானகிரங்கநாதன், சென்னை.

* பிஞ்சு பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி, தயிர், உப்பு சேர்த்து பிசிறி 2 நாள் வைத்திருந்து 3ம் நாள் மோர் சாதத்துக்கு தொட்டுக் கொண்டால் சுவை அருமையாய் இருக்கும். விட்டமின் ‘சி’ நிறைந்தது.

* சதைப் பற்றுள்ள மாங்காயை துருவி வெல்லப்பாகில் சேர்த்து 2 ஸ்பூன் நெய் ஊற்றிக் கிளறினால் சுவையான சத்தான ‘மேங்கோ ஜெல்லி’ ரெடி.

* நார்த்தங்காயைப் பொடியாக நறுக்கி, அதோடு இஞ்சி சிறு துண்டு, பச்சை மிளகாய் 2, உப்பு சேர்த்து இரண்டு நாட்கள் கிளறி விட்டு மூன்றாம் நாள் 1 ஸ்பூன் எண்ணெயில் கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள் தாளித்து கலந்து மோர் சாதத்துக்கு தொட்டுக் கொண்டால், சுவையோ சுவை.

- கே.சாயிநாதன், உள்ளகரம்.

* மிக்ஸியில் துவையல் நன்றாக அரைபட அதை முதலில் ட்ரையாக அரைத்துப் பிறகு தண்ணீர் சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும்.

* புட்டு தயாரிக்கும் போது தேங்காய் துருவலை வாணலியில் வறுத்து பிறகு சேர்த்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.

* காபி பொடியை பாக்கெட்டுடன் வைத்து உபயோகித்தால் மணம் குறையாமல் இருக்கும்.

* சாதத்தை குக்கரில் வைப்பதற்கு முன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால் பொல பொல வென்று இருக்கும்.

- ஜி.இந்திரா, திருச்சி.

* பண்டிகை நாட்களில் திடீர் விருந்தினர் வந்துவிட்டால், கொதிக்கும் நீரில் 2 கரண்டி ஓட்ஸ் சேர்த்து நன்கு வெந்தபின் வெல்லம் (அ) சர்க்கரை, பால் சேர்த்து ஏலப்பொடி தூவ சூப்பர் பாயசம் கிடைக்கும்.

*வடைக்கு உளுந்து அரைத்து விட்டு கடைசியில் ஒரு ஸ்பூன் பச்சரிசி சேர்த்து அரைத்து எடுத்து துருவிய இஞ்சி ஒரு ஸ்பூன் கலந்து வடை தட்டினால் எண்ணெய் குடிக்காது. மொறு மொறுப்பாக இருக்கும்.

* மிக்சி பிளேடுகள் சுழலாமல் இறுக்கமாக இருந்தால், கொதிக்கும் வெந்நீரை மிக்சியில் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து அரைத்தால் பிளேடுகள் எளிதாக சுழலும்.

* எந்த ஊறுகாய் போடுவதாக இருந்தாலும் கண்ணாடி பாட்டில், பீங்கான் கிண்ணம், ஜாடியில் போட்டால் நீண்டநாள் கெடாது. ப்ளாஸ்டிக் பாட்டில்களில் போட்டால் ஊறுகாயின் உப்பும், புளிப்பும் பாலிதீனுடன் கலந்து வயிற்றுக்கு மிகவும் கேடு விளைவிக்கும்.

- எஸ்.வெண்மதி, சென்னை.

*புளித்த மோரை குக்கரில் ஊற்றி மூடி வைத்து, காலையில் எடுத்து துலக்கினால் குக்கர் பளிச் சென்று இருக்கும்.

* கறிவேப்பிலை துவையல் அரைக்கும் போது, உளுத்தம் பருப்புக்கு பதில் வேர்க்கடலையை வறுத்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

* உருளைக்  கிழங்கை உப்பு கரைத்த வென்னீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு எடுத்து  வைத்தால் பல நாட்கள் வரை கெடாமல் புதியதாக இருக்கும்.

- சுஜிதா, மதுரை.

ரவை அல்வா

தேவையானவை:

வெள்ளை ரவை - 2 கப்,
சர்க்கரை- 1½ கப்,
தேங்காய்- பெரியது 1,
நெய்- 3 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் பொடி- சிறிதளவு,
முந்திரிப்பருப்பு- 10.

செய்முறை:

தேங்காயை துருவி பால் பிழியவும். வாணலியில் சிறிது நெய்விட்டு ரவையை சிவக்க வறுக்கவும். நல்ல வாசனை வரும்போது தேங்காய்ப்பாலை விட்டு கிளறவும். கெட்டியானதும் சர்க்கரை சேர்த்து சிறிது நெய் விட்டுக் கிளறவும். அல்வா பதம் வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும். ஆறியதும் வில்லைகள் போடவும்.

தொகுப்பு: எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

 • ukrainmaalll11

  உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்