SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சருமத்தை பளபளப்பாக்கும் ஃபேஷியல்!

2022-03-01@ 17:44:22

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

வெயில், மழை , பனி எந்த கால மாக இருந்தாலும், அந்தந்த காலத்திற்கு ஏற்ப சருமத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாக சுரக்கும் என்றால் பனிக்காலத்தில் சருமம் வறண்டு போய் பொலிவிழந்து காணப்படும். இந்த நிலையிலும் உங்கள் முகம் பட்டுபோல் மின்ன வீட்டிலேயே உள்ள இயற்கைப் பொருட்களைக் கொண்டு ஃபேஷியல் செய்து கொள்ளலாம். அவை என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

பாதாம் ஃபேஷியல்:
பாதாம் பருப்பை தண்ணீரில் நன்றாக ஊற வைத்து தோலை நீக்கி அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் சிறிது கடலை மாவு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முகத்தில் பூசி வந்தால், நீங்கள் பியூட்டி பார்லருக்குப் போக வேண்டிய அவசியமே இருக்காது. மேலும் தினமும் இரண்டு பாதாமினை சாப்பிட்டு வந்தாலும், நாளடைவில் உங்கள் சருமத்தில் மாற்றங்கள் ஏற்படும்.

மஞ்சள் ஃபேஷியல்: மஞ்சள் தூள், சந்தனம், பால், பாதாம் எண்ணெய், எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். உங்கள் சருமம் அடைந்திருக்கும் அழகான மாற்றத்தை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.

தேன் ஃபேஷியல்: 1 ஸ்பூன் பால் பவுடர், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை நன்றாகக் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் வைத்தால் வறண்ட சருமம் மிருதுவாக மாறும். தேன் பயன்படுத்தும் போது, புருவ முடிகளில் படாமல் தடவ வேண்டும். சில தேன்கள் முடிகளை செம்பட்டையாக மாற்றும் தன்மை கொண்டது. ஓட்ஸ் ஃபேஷியல்:  ஓட்ஸ், தயிர், தக்காளி பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக மிக்சியில் அரைத்து கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் உங்களின் சரும நிறம் பொலிவடைந்திருப்பதை உணரலாம்.

எலுமிச்சை ஃபேஷியல்: 1/2 கப் பாதாம் எண்ணெய் இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தை நன்றாக கழுவி, காய்ந்தவுடன் இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவவும். நன்றாக தேய்த்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் சருமத்தில் உள்ள டெட்செல்கள் நீங்கி பொலிவடையும்.

தொகுப்பு - கவிதா சரவணன், ஸ்ரீ ரங்கம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்