SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடியலின் கிக்ஸ்டார்ட்!

2022-01-24@ 17:56:22

நன்றி குங்குமம் தோழி

காலை எழுந்தவுடன் காபி பில்டரில் இருந்து வௌியாகும் அந்த காபி நறுமணத்திற்கு நம்மில் பலர் அடிமை என்றுதான் சொல்லணும். நாம் அனைவரும் அன்றைய தினத்தில் முதலில் உச்சரிக்கும் பிடித்த சொல் என்றால் அது காபிதான். பிடித்த பானமும் கூட. உங்களின் நாளை கிக்ஸ்டார்ட் செய்வதும் காபிதான். காபி குடித்த பிறகுதான் அன்றைய தினத்தின் அன்றாட பணியே துவங்கும். இதில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்  ஊட்டச்சத்துக்கள் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக இயங்க செய்யும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது.அப்படிப்பட்ட காபி பானத்திற்கு வரலாற்றுப் பின்னணியும் உண்டு. வருடம்தோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச காபி தினமாக கொண்டாடப்படும் காபியின் வரலாறு பற்றிய சுறுக்கம்.

14ம் நூற்றாண்டின் மத்தியில், எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்து வந்த கல்டி என்ற மனிதர் தன்னுடைய ஆடுகள் ஒருவகையான பழத்தைத் தின்ற பின் இரவு முழுவதும் தூங்காமல் புத்துணர்வுடன் இருப்பதைக் கவனித்தார். அதுதான் காபிக் கொட்டையாக இருக்கலாம் என்றும் அங்கிருந்துதான் காபியின் கதை தொடங்கி இருக்கும் என்று நம்பப்படுகிறது. உலகம் முழுக்க  பலரால் விரும்பப்படும் காபியினை 70 ஆண்டுகளாக சுவை மாறாமல் கொடுத்து வருகிறார்கள் மூன்றாம் தலைமுறையினரான கோத்தாஸ் காபி உரிமையாளர் நித்தின். ‘‘இதனை என்னுடைய தாத்தா கிருஷ்ணைய்யா செட்டி 1949ம் ஆண்டுதான் ஆரம்பித்தார்.

அவருக்கு பிறகு நானும் என் அப்பா நாதன் அவர்களும் நிர்வகித்து வருகிறோம். முதலில் பெங்களூரில் ஒரு சிறிய கடையாகத்தான் தாத்தா ஆரம்பித்தார். அதன் பிறகு அங்கேயே மூன்று கிளைகளை தாத்தா துவங்கினார். தாத்தாவிற்கு பிறகு அப்பாவின் தலைமையில் 8000 சதுர அடியில் ெதாழிற்சாலையாக எங்களின் நிறுவனம் உருமாறியது. அதன் பிறகு ஐந்து வருடத்தில் அதையே அதிநவீன தொழிற்சாலையாக மாற்றி அமைத்தோம். இங்கு எல்லாமே இயந்திர மயம் என்பதால், காபிக் கொட்டையை வறுப்பது முதல் அதை பொடியாக்கி பேக்கிங் செய்வது என அனைத்திற்கும் பிரத்யேக இயந்திரங்களை நிறுவி இருக்கிறோம். காபிக் கொட்டையினை சமமாகவும் அதே சமயம் ஒரு மணி நேரத்தில் 1250 கிலோ காபிக் கொட்டையினை வறுப்பதற்காகவே ஐரோப்பிய தொழில்நுட்பம் அடங்கிய இயந்திரத்தை எங்கள் தொழிற்சாலையில் நிறுவி இருக்கிறோம்’’ என்று கூறும் நித்தின் தங்களின் நிறுவனத்தை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு எடுத்து சென்றதில் மிகவும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

‘‘இது எங்களின் குடும்பத் தொழில். தாத்தாவைத் தொடர்ந்து அப்பா கடந்த நாற்பது வருடமாக இதில் ஈடுபட்டு வருகிறார். தரமான காபிக் கொட்டையை தேர்வு ெசய்வதில் அவர் திறமையானவர். எங்கள் நிறுவனத்தில் பலதரப்பட்ட காபிப் பொடிகள் உள்ளன. அதற்கு தேவையான அனைத்து காபிக் கொட்டைகளை அப்பாதான் தேர்வு செய்வார். அவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நிறுவனத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் மாற்றி அமைத்திருந்தாலும், அவருக்கு உதவியாக நானும் இந்த துறையில் என்னால் முடிந்த வளர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறேன்.

 தொழில்துறையில் பொறியியல் மற்றும் சிகாகோவில் முதுநிலை வணிக நிர்வாகத்தில் ேதர்ச்சிப் பெற்றிருந்தாலும், காபி தயாரிப்பு குறித்து இரண்டு வருடம் பிரத்யேகமாக படிச்சேன். இந்த தொழில் குறித்து முழுமையாக தெரிந்துகொண்டுதான் நான் அப்பாவுடன் கைகோர்த்தேன். அதன் பிறகு எங்களின் தயாரிப்பினை எவ்வாறு இரட்டிப்பாக்கலாம்னு யோசித்து பெருநகரங்களில் கால் பதிக்க ஆரம்பித்தோம். இந்த வளர்ச்சி காரணமாக எங்களின் தொழிற்சாலையை மேலும் நவீனமாக மாற்றி அமைத்தோம். எங்களின் பிரத்யேக கடைகளில் மட்டுமில்லாமல் மற்ற வணிகங்களில் எங்களின் காபிப் பொடியினை விற்பனைக்கு அளித்தோம். தற்போது எங்களின் நேரடி விற்பனை நிலையங்கள் தென்னிந்தியா முழுதும் 40 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு  வீட்டிலும் ஒரு நபராவது கண்டிப்பாக காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். வீட்டில் மட்டுமில்லாமல் அலுவலகத்திலும் அவர்கள் புத்துணர்ச்சியோடு செயல்பட காபி வெண்டிங் இயந்திரங்களை 2016ல் அறிமுகம் செய்தோம். இதில் காபி மட்டுமில்லாமல் டீ, மசாலா டீ, சூடான பால் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்திருக்கிறோம். பெரும்பாலான காபி வெண்டிங் இயந்திரத்தில் பால் பவுடரைதான் பயன்படுத்துவார்கள். நான் பாக்கெட் பால் மட்டுமே பயன்படுத்துவதால், ஃப்ரெஷ்ஷாகவும் வீட்டில் சாப்பிடும் சுவையினை உணர முடியும். ஒரு சிலருக்கு காபி சுவை பிடிக்கும்.

ஆனால் அவர்கள் மற்றவர்கள் விரும்பும் பில்டர் காபியினை அருந்தமாட்டார்கள். காபியின் சுவையினை அவர்களுக்கு வேறு மாதிரி கொடுக்க விரும்பினோம். காபி, பால் மற்றும் பழங்களைக் கொண்டு ஷேக் போன்ற பானங்களை அறிமுகம் செய்தோம். இது இளைய தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அழகான பாட்டில்களில் பேக் செய்யப்பட்டு வருவதால், பருகுவதும் எளிது.

எங்களின் இப்போதைய லேட்டஸ்ட் அறிமுகம் பில்டர் காபி டிகாக் ஷன். பில்டர்களில் பல வகை உள்ளது. சாதாரண பித்தளை பில்டர், எலெக்ட்ரிக் பில்டர், டிரிப்பிரூயர் மற்றும் மோக்கா பாட். அனைத்திலும் காபிப் பொடியினை சேர்த்து சுடுதண்ணீரை சேர்த்தால் டிகாக்‌ஷன் கிடைக்கும். ஆனால் இதற்கு சரியான அளவு காபிப்பொடி மற்றும் தண்ணீரின் அளவு அவசியம். சிலருக்கு பில்டர் காபி விருப்பமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு போதிய நேரம் மற்றும் பில்டர் உபகரணம் இருக்காது. அவர்களுக்காகவே பிரத்யேகமாக காபி டிகாக்‌ஷனை அறிமுகம் செய்திருக்கோம். சிக்கரியின் அளவிற்கு ஏற்ப இரண்டு வகையில் அறிமுகம் செய்திருக்கிறோம்’’ என்றார் நித்தின்.

தொகுப்பு: ரித்திகா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

 • nepallumbii

  நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

 • ooty-rose-exhi-14

  50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

 • odisha_park

  இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்