எனக்குப் பிடித்தவை! 1: நடிகர் இளவரசு
2022-01-24@ 17:49:53

நன்றி குங்குமம் தோழி
நடிகர் இளவரசு
ருசியாக இருக்கிற உணவு எனக்கு பிடிக்கும். இட்லிய கூட நான் அப்படித்தான் ருசிச்சு சாப்பிடுவேன்’’ என்கிறார் நடிகர் இளவரசு. அம்மாவின் மீன் குழம்பு சுவைக்கு ஈடு இணையே கிடையாது. ஹாஸ்டலில் படிச்சதால், வீட்டுக்கு வரும் போது எனக்காக மீன் குழம்பு செய்வாங்க. திண்டுக்கல்லில் படிச்சேன். அங்க மைதீன் பரோட்டா கடைபொரிச்ச பரோட்டா சால்னா அவ்வளவு ருசியா இருக்கும். அப்புறம் தலப்பாகட்டி பிரியாணி. மாலை ஆறு மணிக்கு ஒரு பீங்கான் கப்பில் பிரியாணி எடுத்துக் கொடுப்பார். அவ்வளவு மணமா இருக்கும். மதுரையில் கணேஷ்ராம் மெஸ்சில் சாம்பாருக்கு இணையில்லை.
ஒருமுறை சுவிட்சர்லாந்து போனபோது, அங்கு ஒரு ஓட்டலில் சாப்பிட்டேன். மொழி தெரியாததால் படத்தைப் பார்த்து ஆர்டர் செய்தேன். பிரட் மேல காராபூந்தியை தூவியது போன்ற உணவு.செம டேஸ்ட். மறுபடியும் ஆர்டர் செய்தேன். செஃப்பிடம் கேட்ட போது அது குதிரை கறின்னு தெரிஞ்சது. ஆடிட்டேன். மங்களூரில் இளந்தோசை புளிக்குழம்பு பெஸ்ட் காம்பினேஷன். பல ஊர் உணவுகளை சுவைத்தாலும் என் மனைவின் விறால் மீன் குழம்புக்கு நான் அடிமை. சைவம், அசைவம் இரண்டிலும் அவங்க எக்ஸ்பர்ட்’’ என்றவருக்கு இட்லி, தோசை, சட்னி, சாம்பார் தான் எப்போதும் விரும்பி சாப்பிடும் உணவாம்.
தொகுப்பு: நிஷா
மேலும் செய்திகள்
திரைகடல் ஓடியும் தீராத தமிழ்ப்பற்று!
பல தடைகளை உடைத்துதான் வெளிவந்தேன்!
கூட்டுக்குடும்ப கிச்சன் மூலம் என் அப்பாவை பார்க்கிறேன்!
12 வயதில் பேக்கரி தொழில்முனைவோர்!
அக்கா கடை-தொழிலாளர்களுக்காகவே நள்ளிரவு மட்டுமே இயங்கும் உணவகம்!
உங்கள் குழந்தை வெஜிடபிள் மாதிரி... ஒரே இடத்தில்தான் இருப்பான்!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!