SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் மற்றும் புத்தாண்டு தகவல்கள்

2022-01-11@ 17:38:39

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

*உத்தரப்பிரதேசத்தில் பொங்கல் திருநாளன்று வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு, வெற்றிலை பாக்குடன் கரும்புத் துண்டும் தருவது வழக்கம்.

*மேற்கு வங்கத்தில் பொங்கல் பண்டிகையை ‘சா சாகர் மேளா’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். சாகர் என்றால் கடல். சாசாகர் என்றால் வற்றாத கடல். அன்று கங்கை நதியில் நீராடி கும்மியடித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

*குஜராத்தில் பொங்கல் திருநாளை புனித தினமாகக் கொண்டாடுகிறார்கள். புதுப் பாத்திரங்கள் வாங்கி அன்று பயன்படுத்துவார்கள்.

*மகாராஷ்டிரத்தில் சர்க்கரைப் பொங்கலில் பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட் கலந்து இறைவனுக்கு நைவேத்யம் செய்வது வழக்கம்.

*கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் ‘சங்கராந்தி’ என்று கொண்டாடப்படுகிறது.

*புத்தாண்டு தினத்தை கிறிஸ்துவ தேவாலயங்களில் கொண்டாடுவது கி.பி.487ம் ஆண்டில்தான் அறிமுகமானது.

*நைல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை அடிப்படையாக வைத்தே ஆரம்பத்தில் அதாவது சுமார் 6000 வருடங்களுக்கு முன் நாட்கள் கணக்கிடப்பட்டன. அதுவே காலண்டர் உருவாகக் காரணமானது.

*ஜூலியஸ் சீஸர் கி.மு.46ல் ஜனவரியை முதல் மாதமாகக் கொண்டு காலண்டர் முறையை ஆரம்பித்தார்.

*இந்தியாவில் தபால் அலுவலகங்களில் மணியார்டர் செய்யும் முறை 1880 ஜனவரி முதல் தேதி தொடங்கியது.

*இந்தியாவில் சக ஆண்டை அடிப்படையாகக் கொண்டே நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

*ரோமானியர்கள் புத்தாண்டு அன்று வீடுகளை அலங்கரித்து விருந்துண்டு மகிழ்வார்கள். ரோமானியரின் காலத்தில் காலண்டரை ‘காலெண்ட்ஸி’ என்று அழைத்து வந்தார்கள்.

*விஸ்வாமித்ர முனிவரால் காயத்ரி மந்திரம் உருவாக்கப்பட்டது மகரசங்கராந்தி(பொங்கல் திருநாள்) அன்றுதான்.

*இங்கிலாந்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் திறந்த வெளியில் கூடி சூரிய வழிபாடு செய்கின்றனர்.

*கர்நாடக மாநிலம் ரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் சங்கராந்தி நாளன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

*ஜப்பானிலும், சீனாவிலும் சூரியனைப் பெண் தெய்வமாக வழிபடுகின்றனர். அவர்களின் மதமான ஷிண்டோ, சூரிய வழிபாடு செய்வதால் பாவங்களை போக்குகிறது,  சூரியனே உலகின் ஆதாரம் என்று புகழ்கிறது. இங்கு ரோட்ஸ் தீவில் 105 அடி உயரத்தில் சூரிய பகவானுக்கு பிரமாண்ட சிலை உள்ளது.

- எஸ்.ராஜம், திருச்சி.

தொகுப்பு: கே. நாகலட்சுமி

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

 • ruto-wins-presidency

  கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்