SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிறிஸ் துமஸ் & நியூ இயர் அலங்காரம்

2021-12-21@ 17:45:04

நன்றி குங்குமம் தோழி

ஸ்டோன் பேப்பர் பந்து

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் ஆரம்பமாயிடுச்சு. கடைகளில் வண்ண வண்ண நட்சத்திரங்கள், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் அதில் அலங்கரிக்க மாட்டப்படும் வண்ண பந்து மற்றும் ஸ்டார் என அனைத்தும் விற்பனையில் உள்ளது. கிறிஸ்துமஸ் மரத்தில் மாட்டப்படும் வண்ண பந்துக்களை நாமே வீட்டில் செய்து அதனை அலங்கரிக்கலாம் என்று கூறுகிறார் கிராப்ட் கலைஞர் சுதா செல்வக்குமார். அவர் ஸ்டோன் பந்துக்களை எவ்வாறு செய்யலாம் என்று தோழியருக்கு விளக்கம் அளிக்கிறார்.

தேவையான பொருட்கள்

* ஏ4 கலர் ஷீட் (விரும்பிய நிறங்களை தேர்வு செய்து கொள்ளலாம்) & 4 ஷீட்
* ஒட்டுவதற்கு பசை
* அலங்கரிக்க & செயற்கை கற்கள்
* தொங்க விட & மணிசரம் அல்லது சாட்டின் ரிப்பன்.

செய்முறை

காகிதத்தை வட்ட வட்ட வடிவமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சுமார் 20 வட்ட வடிவங்கள் வரும் மாதிரி வெட்டிக் கொள்ளவும். சரியான மற்றும் ஒரே அளவான வட்ட வடிவத்திற்கு வளையல் கொண்டு  அவுட் லைன் பென்சிலில் வரைந்து பிறகு கத்தரித்துக் கொள்ளலாம். அப்போது தான் ஒரே அளவில் பந்துக்கள் கிடைக்கும். இதில் மீடியம் சைஸ் பந்துக்களை உருவாக்கலாம். பெரிய அளவு பந்து வேண்டும் என்றால் பெரிய பிளாஸ்டிக் மூடி அளவில் கத்தரித்துக் கொள்ளலாம். வட்டத்தின் அளவை கொஞ்சம் சிறியதாக கத்தரித்தால், பந்தும் சிறிய அளவில் கிடைக்கும். அதனால் உங்ளின் விருப்பத்தின் அளவிற்கு ஏற்ப பந்துக்களை வடிவமைத்துக் கொள்ளலாம்.

விரும்பிய வட்ட வடிவத்தில் பேப்பரை கத்தரித்த பிறகு அவை அனைத்திலும் ஒரு முக்கோணம் வரைய வேண்டும். காரணம் அந்த முக்கோண பகுதியை தான் மடித்து ஒட்ட வேண்டும் என்பதால், சரியான அளவில் முக்கோணம் வரைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு முக்கோணம் வரைந்துள்ள பகுதியை மடித்துக் கொள்ளுங்கள். இதுபோல் ஐந்து முக்கோணத்தையும் ஒன்றோடு ஒன்றாக வட்ட வடிவத்தில் ஒட்டிக் கொள்ளுங்கள். இது பந்தின் மேல் பகுதி. அதன் கீழ்ப் பகுதிக்கும் இதே போல் வட்டத்தில் முக்கோணம் வரைந்து மடித்து ஐந்து முக்கோணத்தின் இதழ்களை ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொள்ளவும். இப்போது பந்தின் மேல் மற்றும் கீழ்ப் பகுதி ரெடி. இந்த இரண்டு பகுதியையும் இணைக்கக் கூடிய துண்டுகளை அடுத்து செய்ய வேண்டும்.

இப்போது பத்து வட்ட வடிவங்கள் பந்தின் மேல் மற்றும் கீழ்ப் பகுதி செய்ய பயன்படுத்திவிட்டோம். மீதம் இருக்கும் பத்து முக்கோண துண்டுகளை படத்தில் இருப்பது போல் வரிசைப்படுத்தி ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொள்ளுங்கள். இரண்டு வடிவங்களும் நன்கு காய வேண்டும். அப்போது தான் பந்து திடமாக இருக்கும்.

வரிசையாக ஒட்டிய முக்ககோண துண்டுகளை பந்தின் மேல் பகுதி மற்றும் கீழ்ப் பகுதிக்கு நடுவே நீளமாக ஒட்டிக் கொள்ளவும். பிறகு மேல் மற்றும் கீழ்ப் பகுதியை இணைத்தால் அழகான பந்து ரெடி. இதில் சம்கி அல்லது செயற்கை கற்கள் ஒட்டினால் பார்க்க அழகாக இருக்கும். இதனை கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்க விடலாம் அல்லது சுவற்றில் மாட்டியும் அலங்கரிக்கலாம். தேவைப்பட்டால் இந்த பந்தினுள் சின்ன வண்ண விளக்குகள் பொருத்தினால் பார்க்க மேலும் அழகாக இருக்கும்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shortest-man-world-25

  மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

 • canata-storm-24

  வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

 • north111s

  உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்