ஆபரணங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்
2021-12-21@ 17:29:17

நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
சாதாரணமாக ஒரு விசேஷம் என்றால் பெண்கள் ஆபரணங்கள் அணிவது வழக்கம். அவ்வாறு அணிந்து செல்லும் எந்த வகையான ஆபரணங்களாக இருந்தாலும் அதை முறையாக பராமரிக்க வேண்டும்.
* நகைகளை அணிந்து விசேஷத்துக்கு சென்று வந்த பிறகு அதை காற்றாட கழட்டி வைத்துவிட்டு பிறகு நகைப்பெட்டியில் எடுத்து வைக்கலாம்.
* ஆர்டிபிஷியல் நகைகளை பாலிஷிங் பேட்ஸை கொண்டு மெதுவாகத் தேய்த்தால் பளபளப்பாகும்.
* பழைய கம்பளி துணியால் பித்தளை அல்லது வெள்ளி நகைகளை தேய்த்தால் கருமை நீங்கி பளபளப்பாகும்.
* கிரிஸ்டல் நகைகளை சோப்பைத் தண்ணீரில் சாஃப்ட் டூத் பிரஷால் சுத்தம் செய்யலாம்.
* ஃபேஷன் நகைகளை மேக்கப் பொருட்களான லோஷன், நெயில் பாலிஷ் ரிமூவர், சென்ட், ஹேர் ஸ்பேரே ஆகியவற்றிலிருந்து தள்ளி வைக்க வேண்டும்.
* முத்து நகைகள் வியர்வை படுவதால் மற்றும் சென்ட் பயன்படுத்துவதால் அதன் பளபளப்பை இழக்கும். முத்து மாலையை அணிந்த பிறகு பஞ்சு அல்லது டிஷ்யு
பேப்பரில் சுற்றி வைக்க வேண்டும்.
தொகுப்பு: எஸ். மாரிமுத்து, சிட்லபாக்கம்.
மேலும் செய்திகள்
ஐஸ் வாட்டரால் ஏற்படும் பாதிப்புகள்!
உயிரை பணயம் வைக்கும் செல்ஃபி... சரியா? தவறா?
கோடை காலத்தை குளுமையாக மாற்றுவோம்!
பொலிவான சருமம் பெற!
அலுவலகத்திற்கு திரும்பும் ஐ.டி. ஊழியர்கள், மனதளவில் தயாராவது எப்படி?
அன்றாட சேமிப்பிற்கு என்ன வழி?
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!