கிறிஸ்துமஸ் துளிகள்!
2021-12-20@ 17:34:09

நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
*பைபிள் என்பது பிபினாஸ் என்ற யூத மொழி சொல்லில் இருந்து வந்தது. பிபினாஸ் என்றால் புனித நூல் என்று பொருள்.
*பெத்லேகம் இயேசு பிறந்த ஊர். பெத்லேகம் என்றால் உணவின் இல்லம் என்று பொருள்.
*கிறிஸ்துமஸின் போது, பசுமையான மரத்தில் சிறு சிறு பொம்மைகள் வைத்து அலங்கரிப்பது வழக்கம். இந்த வழக்கம் ஜெர்மனியில் தோன்றியது. அரசன் ஆல்பர்ட் மூலமாக இங்கிலாந்துக்குப் பரவியது. முதன் முதலில் தேவதாரு மரத்தின் கிளையில்தான் அலங்கரித்தனர்.
*முதல் கிறிஸ்துமஸ் மரம் பெண் வாத்து, இறக்கைகளை சாயம் பூசி அதனால் உருவாக்கப்பட்டது.
*பொலிவியர்கள் கிறிஸ்துமஸின் போது ‘மாஸ்’ க்கு செல்லும்போது பலர் கூடவே சேவலையும் எடுத்துச் செல்வர். காரணம் இயேசு பிறப்பை ஒரு சேவல்தான் முன்முதலில் அறிவித்ததாம்.
*இங்கிலாந்தியர்களின் கிறிஸ்துமஸ் மரத்தில் சிலந்தி மற்றும் சிலந்தி வலை இருக்கும். ஏனென்றால் குழந்தை இயேசுவுக்கு முதல் சமுக்கானத்தை சிலந்திதான் பின்னித் தந்ததாம்.
*கிறிஸ்துமஸ் பண்டிகையை அமெரிக்க மாநிலமான அலபாமாதான் முதலாவதாக அதிகாரபூர்வ பண்டிகையாக 1836ல் அங்கீகரித்தது.
*18-ம் நூற்றாண்டில் தான் மெழுகுவர்த்திகள் கிறிஸ்துமஸ் மரங்களில் வைத்து ஏற்றப்பட்டன.
*சான்டாக்ளாஸ் வரும் பனி வண்டியை ஓட்டி வருவது 8 மான்கள். இவை அனைத்துமே பெண்களாம்.
*உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கி.பி. 386-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்பட்டது.
*ஐரோப்பாவிலுள்ள சில நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கர்த்தர் கொண்டாட்டம் என்கின்றனர். கிறிஸ்துமஸ் என்ற சொல் கி.பி.1181 ல் இருந்து வழக்கத்திற்கு வந்தது.
*கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை முதன் முதலில் ஜோஸப் கண்டால் என்ற ஓவியர் தயாரித்தார். 19-ம் நூற்றாண்டில் பிரிட்டன் இளவரசர் ஆல்பர்ட்தான் முதன் முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை வைத்தார்.
*கோடையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் நாடு ஆஸ்திரேலியா.
*1823-ம் ஆண்டு ‘இளமண்ட் முரே’ என்ற பெண்மணி கிறிஸ்துமஸ் தாத்தா படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
*போப் ஆண்டவர் கையில் அணிந்திருக்கும் புனித மோதிரத்திற்கு பிஷர்மேன் ரிங் எனப் பெயர்.
*போப் ஆண்டவருக்கென தனியாக வானொலி நிலையம் உள்ளது. இதை அமைத்து தந்தவர் மார்கோனா.
- மகாலஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
Tags:
கிறிஸ்துமஸ் துளிகள்!மேலும் செய்திகள்
சிறுகதை-காதலோடு விளையாடு
எது பாலியல் துன்புறுத்தல்?: சட்டங்கள் அறிவாய் பெண்ணே!வழக்கறிஞர் அதா
ஆட்டிசம் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ரோபோ!
நியூஸ் பைட்ஸ்: கட்டணமில்லா பயணத்தில் 91.85 கோடி பெண்கள் பயன்
சட்டங்கள் அறிவாய் பெண்ணே!
சிறுகதை-பரிமாற்றம்!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!