மணப்பெண்ணின் குட்ட புசுலு!
2021-12-13@ 17:40:13

நன்றி குங்குமம் தோழி
பொதுவாகவே போட்டி என்றால் நம் நினைவில் வருவது விளையாட்டுப் போட்டி, சமையல் போட்டி, கோலப்போட்டி தான். ஆனால் இந்தாண்டு அக்டோபர் மாதம் கோவாவில் தேசிய அளவிலான சிறந்த நகை மற்றும் ஆபரண நிறுவனங்களுக்கான போட்டி நடைபெற்றது. இந்தியாவில் உள்ள பல பிரபல நகை மற்றும் ஆபரண நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. அதில் சென்னையை சேர்ந்த VBJ நிறுவனம் சிறந்த நகை மற்றும் ஆபரண நிறுவனம் என்ற விருதினை தட்டிச் சென்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆல் இந்தியா ஜெம் மற்றும் ஜூவல்லரி டொமெஸ்டிக் கவுன்சிலால் இந்த தேசிய நகை விருதுகள் நடத்தப்படுகிறது. பல பிரிவுகளில் நடத்தப்படும் இந்த விருதில் நகை வடிவமைப்பாளர், கைவினை கலைஞர், நகையினை வடிவமைக்கும் மாணவர்கள் என பல பிரிவுகள் உள்ளன. அதில் நகை நிறுவனம் தங்களின் சிறப்பு பிரிவினை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கென சிறப்பு நடுவர்கள் பலதரப்பட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள். இந்த ஆண்டும் தேசிய நகை விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 800 நிறுவனங்கள் பதிவு செய்திருந்தன. அதில் VBJ நிறுவனம் இந்தாண்டு சிறந்த மாணவன், கேட் டிசைனர், கைவினைக் கலைஞர் மற்றும் மணப்பெண் வைர நகை என நான்கு விருதுகளை வென்றுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் இந்நிறுவனம் தங்களின் சிறப்பான நகையினை வடிவமைத்திருந்தது. அதன் அடிப்படையில் மிதுன் கலிபடா ஜனா, தமிழ்நாட்டின் பாரம்பரிய நடன வடிவமான பரதநாட்டிய கலைஞர்கள் அணியும் மோதிரத்தை வடிவமைத்ததற்காக சிறந்த கேட் டிசைனர் விருதை ெபற்றார். ஸ்வரூப்பால் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நான்கு மணி நேரத்திற்குள் சுழலும் நகையை உருவாக்கி சிறந்த கைவினை கலைஞர் விருதைப் பெற்றார்.
அன்னபக்ஷி வடிவத்தில் வைரத்தால் வடிவமைக்கப்பட்ட மணப்பெண் நகைகளான சோக்கர்ஸ், செமி சோக்கர்ஸ், மாட்டல், ஜிமிக்கி கம்மல், ஒட்டியாணம், வளையல்கள், மோதிரம் மற்றும் வங்கி இவற்றுக்கு சிறந்த மணப்பெண் வைர நகைக்கான விருதினை பெற்றுள்ளது. இவர்களின் லேட்டெஸ்ட் டிசைன் குட்டபுசுலு... மணப்பெண்களுக்கான அலங்கார நகைகள். குட்ட புசுலு என்றால் மணிகளால் கோர்க்கப்பட்டவை என்று அர்த்தம்.
இது பாரம்பரிய தென்னிந்திய திருமண நகைகளின் முக்கியமான ஒன்றாகும். தங்கம், மாணிக்கம் மற்றும் மரகதங்கள் கொண்டு ஆபரணத்தின் ஒவ்வொரு விளிம்புகளிலும் முத்துக்களால் கொத்து கொத்தாக அலங்கரிக்கப்பட்டு சிறந்த கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. குட்ட புசுலு நகைகள் கோரமண்டல் கடற்கரை பகுதியின் வழித்தோன்றலாகும். 100க்கும் மேற்பட்ட டிசைன்களுடன், 50 முதல் 60 கிராம் வரை எடையுள்ள, நூற்றுக்கணக்கான சிறந்த முத்துக்களால் நேர்த்தியான முறையில் குட்ட புசுலு நகைகள் வடிவமைக்கப்படுகிறது. இதில் ராக்கோடி, பின்னலை அலங்கரிக்கும் பில்லை மற்றும் ஜடாவு ஸ்டைல் போன்ற பலவிதமான தீம்களைக் கொண்டு குட்ட புசுலு நகைகள் உருவாக உள்ளன.
தொகுப்பு: ப்ரியா மோகன்
மேலும் செய்திகள்
சிறுகதை-காதலோடு விளையாடு
எது பாலியல் துன்புறுத்தல்?: சட்டங்கள் அறிவாய் பெண்ணே!வழக்கறிஞர் அதா
ஆட்டிசம் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ரோபோ!
நியூஸ் பைட்ஸ்: கட்டணமில்லா பயணத்தில் 91.85 கோடி பெண்கள் பயன்
சட்டங்கள் அறிவாய் பெண்ணே!
சிறுகதை-பரிமாற்றம்!
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!