SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேக்கப் பாக்ஸ்: மஸ்காரா

2021-12-10@ 17:49:40

நன்றி குங்குமம் தோழி

‘மஸ்காரா போட்டு மயக்குறியே’… இந்தப் பாட்டு வரிகள் வெறுமனே வரிகள் அல்ல, உண்மையாகவே சாதாரண இமைகளை கூட மயக்கும் இமைகளாக மாற்றும் மாயம் மஸ்காராவுக்கு உண்டு. மஸ்காராவில் பெரிய அளவில் வெரைட்டிகள் இல்லை. அதே சமயம் இதனை மாடலிங் மற்றும் கலைத்துறை சார்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் யாரும் பொதுவாக பயன்படுத்துவதில்லை. மேக்கப் ஐட்டங்களில் மஸ்காரா கொஞ்சம் ஆடம்பர வகையறாக்களாக பார்க்கப்பட்டாலும் ரூ.50ல் இருந்து ரூ.3500 வரை என பிராண்டுக்கு ஏற்ப பலதரப்பட்ட விலையில் இது மார்க்கெட்டில் கிடைக்கிறது. மஸ்காரா மேக்கப் குறித்து முழுமையாக விளக்குகிறார் மேக்கப் ஆர்டிஸ்ட் இலங்கேஸ்வரி.

‘‘மஸ்காராவுடைய முக்கிய வேலை நம் இமைகளை அடர்த்தியா, நீளமா காட்றது. ஒருகாலத்தில் ஆண்கள் தங்களின் மீசைய சீராக்கதான் இந்த மஸ்காரா பயன்
படுத்தினாங்க. அதாவது இதனை பெண்கள் பயன்படுத்துவதற்கு முன் ஆண்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு தான் பெண்களின் இமைகளை அழகாக்க அதை மஸ்காரா என்று மாற்றிக் கொண்டோம்.

* மஸ்காரா எப்படி போடணும்?

வழக்கமா மஸ்காராவின் பிரஷை எடுத்து இமைகளில் தேய்த்துக் கொள்வோம். இப்படித்தான் காலம் காலமாக நாம் மஸ்காராவை பயன்படுத்தி வந்தோம். அது அவசரத்தில் செய்யும் முறை. உண்மையாவே மஸ்காராவுடைய வேலையே இமை முடிகளை தனித் தனியா மாற்றி அடர்த்தியா காட்டுவது தான். முதலில் லேஷ் கர்லர் கொண்டு  இமைகளை மேல் நோக்கி தூக்கிவிடணும். அப்பதான் இமைகள் மஸ்காரா போடும் போது எடுப்பாக தெரியும்.

அடுத்து புது மஸ்காராவாக இருந்தால், முதலில் மஸ்காரா பிரஷை ஒரு டிஷ்யு பேப்பரில் நன்றாக அழுத்திப் பிடிச்சு துடைக்கணும். மஸ்காரா பிரஷ்களில் இங்க் திட்டுதிட்டாக ஒட்டி இருக்கும். இவ்வாறு செய்யும் போது அது சீராகி மேலும் மஸ்காரா பிரஷில் உள்ள முடிகள் தனித்தனியாக பிரியும். பின் இமைகளின் அடிப்பகுதியில் துவங்கி மேல் நோக்கி பிரஷ் வெச்சு மஸ்காரா போடணும்.

மேல் இமைகளில் போட்டது போல் கீழுள்ள இமைகளிலும் அதே போல் போடணும். மஸ்காரா போடும் போது சில சமயம் கண்களுக்கு கீழ் அதன் கறைபடும். அதை அழுத்தி துடைக்காமல், உங்க சரும நிறத்திற்கு ஏற்ற ஐஷேடோ கொண்டு சரி செய்யலாம், அல்லது ஹைலைட்டர் மூலம் கறைகளை துடைக்கலாம். மஸ்காரா போட்ட பிறகு தான் ஐலைனர் போடணும். அப்போதான் லைனரை கண்களுக்கு மேல் எவ்வாறு வரையலாம் என்று திட்டமிட முடியும்’’ என்னும் இலங்கேஸ்வரி மஸ்காரா வெரைட்டிகள் குறித்து பேசினார்.

‘‘ஐலைனர் மாதிரி மஸ்காராக்களிலும் பெரிதா வெரைட்டிகள் கிடையாது. கிரீம், லிக்விட், பவுடர் அவ்வளவே. அப்பறம் திக்கெனிங் மஸ்காரா ஒரு பக்கம் வெள்ளை, இன்னொரு பக்கம் கருப்பு ஷேட்களில் வரும். அவை இமைகளை அடர்த்தியா எடுத்துக் காட்டும். மேலும் தக்கனிங் மஸ்காரா மேல் சாதாரண மஸ்காரா போடும் போது செயற்கையான இமைகள் பொருத்தியது போல இமை முடிகளை அடர்த்தியாக எடுத்துக்காட்டும். கருப்பு தவிர கலர் மஸ்காராக்களை மேக்கப் ஆர்டிஸ்டுகள் ஃபேஷன் ஷோ அல்லது பார்ட்டி போன்ற நேரங்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.
 
* மஸ்காரா பிரஷ்கள்  

மஸ்காரா பிரஷ் வகைகள் பல இருந்தாலும் இதில் மிகவும் முக்கியமான ஆறு வகைகளைப் பற்றி பார்க்கலாம்.

* பால் பிரஷ் (Ball Brush): சிலருக்கு கண்கள் ரொம்ப உள்ளே இருக்கும். அந்த மாதிரி வடிவக் கண்களுக்கு பால் பிரஷ் பயன்படுத்தலாம். கண்கள் உள்ளே இருப்பதால், இமைகளும் வெளியே தெரியாமல் இருக்கும். இந்த பிரஷ் கண்களுக்குள் சுலபமா நுழையும் என்பதால் மஸ்காரா போடுவதும் எளிது.

* வளைந்த பிரஷ் (Curved Brush): கண் இமைகள் பொம்மை மாதிரி வளைஞ்சு இருந்தால். அதற்கு அழகான ஷேப் கொடுக்கும் இந்த வளைந்த பிரஷ். இமைகளை அடிப்பகுதியிலே இருந்து தூக்கி அடர்த்தியா காட்ட வளைந்த பிரஷ் உதவும்.

*  ஹவர்கிளாஸ் பிரஷ் (Hourglass Brush): பெரும்பாலும் கண்கள் இமைகள் நடுவிலே வளைவாகவும், ரெண்டு ஓரங்களிலும் குறுகியும் கண்கள் இருக்கும். அந்த ஷேப் அப்படியே கொடுக்கக் கூடிய பிரஷ்தான் ஹவர்கிளாஸ் வடிவ பிரஷ்.

* கோன் பிரஷ் (Cone Brush) : கண்களுடைய உள் பகுதி மூக்கு ஆரம்பத்திலே இருக்கக் கூடிய சின்ன இமை முடிகள் துவங்கி ஓரத்தில் இருக்கும் நீண்ட இமை முடிகள் வரைக்கும் கோன் பிரஷ் கொண்டு சுலபமாக மஸ்காரா போடலாம். மஸ்காரா போடவே தெரியாத மக்கள் கூட கோன் பிரஷ் மூலமா சுலபமா போட்டுக் கொள்ள முடியும்.

*அறுங்கோணம் பிரஷ் (Rectangle Brush): எளிதாகவும் அதே சமயம் அவசரமாகவும் மஸ்காரா போட நினைப்பவர்களுக்கு இந்த பிரஷ் சரியான சாய்ஸ்.

*கோம்ப் பிரஷ் (Comb Brush): ஒரு சிலருக்கு இமை முடிகள் அடிக்கடி ஒட்டிக்கும். அவங்களுக்கான பிரத்யேக பிரஷ். ஒவ்வொரு இமைகளையும் தனித்தனியாக எடுத்துக்காட்டும்.
மஸ்காரா பொறுத்தவரை மென்மையான இமைகள்ல பயன்படுத்துறதால கூடுமானவரை தரமான பிரஷ்களை கொண்ட நல்ல பிராண்ட்களை பயன்படுத்துவது நல்லது. அதே போல் மஸ்காராவை மேக்கப் ரீமூவர் அல்லது தேங்காய் எண்ணை கொண்டு நீக்கினால் இமைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்