SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளிர்கால லைஃப் ஸ்டைல்

2021-12-02@ 17:51:08

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

மழை மேகத்தை வெடித்து பொழிந்த அடுத்த நிமிடம் சுளீரென்று வெயில் மண்டையை பிளக்கிறது. இந்த நிலை அப்படியே மாறி இரவு நேரத்தில் குளிரை ஏற்படுத்துகிறது. இப்படி மாறி மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நம்முடைய வாழ்கை முறையினையும் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.

*சுறுசுறுப்பாக ஓடியாடிக் கொண்டிருப்பவர்களுக்கு சுவாச நோய்த் தொற்றுகள் 25% குறைவாகவே ஏற்படுகின்றன. வாக்கிங், ஜாகிங், உடற்பயிற்சி என தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வியர்வை சிந்துவது நல்லது. உடல் இப்படி இயங்கும்போது ரத்த வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

*காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் அதை தவிர்க்கக் கூடாது. மதிய உணவு ஆரோக்கியமானதாக இருப்பது அவசியம். குறிப்பாக உணவில் புரதசத்து அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறைச்சி, முட்டை, பருப்பு போன்றவற்றில் புரதம் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும். புரதம் இல்லாத உணவை சாப்பிடுகிறவர்களுக்கு, ஜலதோசம், சளி போன்ற பிரச்னை ஏற்படும்.

*மாலையில் காபியோ, டீயோ குடிப்பதையும் கூடவே நொறுக்குற தீனிகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். கிரீன் டீ குடிப்பது இதமும், நலமும் தரும். கிரீன் டீ போன்ற தேயிலைகளில் காணப்படும் ஈ.ஜி.சி.ஜி என்ற வேதிப் பொருள் வைரஸ்கள் உடலில் வளர்வதைத் தடுக்கிறது.

*மழை மற்றும் பனிக்காலத்தில் ஒரே கர்சீப்பை நீண்ட நேரம் பயன்படுத்தக் கூடாது. சாப்பிட்டு விட்டு கை துடைத்து அதே ஈரத்தோடு வைக்கும் கர்சீப், நோய் கிருமிகளையும் சேர்த்தே வைத்திருக்கும். திரும்பவும் அதை எடுத்து முகம் துடைக்கும்போது சுலபமாக நோய் தொற்றிக் கொள்ளும். ஜலதோஷ வைரஸ் தாக்கிய மனிதர்களில் மூன்றில் இரண்டு பேருக்கு அந்த நோய் அறிகுறியே தெரியாது. அதனால் உங்களைச் சுற்றியுள்ள நபர்களில் யாரிடமிருந்து வைரஸ் பரவும் என்பதே மர்மம். எனவே குளிர்காலத்தில் கர்சீப்பை அடிக்கடி மாற்றவும். துவைக்கும்போது கிருமி நாசினியில் ஊற வைத்து உலர்த்துவதும் அயன் செய்து பயன்படுத்துவதும் நோய்களிலிருந்து காக்கும்.

*இந்த எல்லாவற்றையும் போலவே தூக்கமும் முக்கியம். நான்கு மணி நேரம் மட்டுமே ஒரு நாள் தூங்கினால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி ஐம்பது சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. அது முழு சக்தியோடு விழித்திருக்க நீங்கள் போதுமான அளவு தூங்க வேண்டும்.

தொகுப்பு: எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்