SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூஸ் பைட்ஸ்: 100% சைக்கிள் நகரமாக மாறப்போகும் பாரிஸ்

2021-12-01@ 17:51:37

நன்றி குங்குமம் தோழி

எளிமையாக திருமணம் செய்து கொண்ட மலாலா

பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடி தாலிபான்களால் சுடப்பட்டு இங்கிலாந்தில் குடிபெயர்ந்த மலாலா, அவரது தொடர் சேவைக்காக அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளார். இவர் தனது இல்லத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பொது மேலாளராகப் பணி புரியும் அசர் மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் இவருக்கு பல உலக தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காதலுக்காக அரசு பட்டத்தை துறந்த இளவரசி

ஜப்பானின் அரச குடும்பத்தினர் சாமானியர்களை மணமுடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறினால் அவர்கள் தங்கள் பட்டத்தை துறந்து, சொத்துக்களை இழந்து அரச குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டும். ஜப்பான் இளவரசி மகோ தனது கல்லூரி காலம் முதல் அரச குடும்பத்தை சேராத சக மாணவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அவரது குடும்பம் பெரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இருப்பினும் சமீபத்தில் இவர் தனது காதலனை எளிமையான முறையில் திருமணம் முடித்து அரச குடும்பத்தை விட்டு வெளியேறினார். தன் காதலனை கைப்பிடிப்பதற்காக இவர் அரசு சொத்துக்களை இழந்து, திருமணத்திற்கு வழங்கப்பட்ட 1.2 மில்லியன் டாலர்  பரிசையும் வாங்க மறுத்துள்ளார்.

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட முதல் பெண்

கனடாவில் 70 வயதாகும் பெண் ஒருவர், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட முதல் பெண் என அறிவிக்கப்பட்டுள்ளார். வெப்ப சலனம் காரணமாக அப்பெண்ணின் உடல்நிலை மோசமடைந்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவர், இதைக் காலநிலை மாற்றத்தின் காரணம் எனக் குறிப்பிடாதவரை, உண்மையான காரணத்துக்கு தீர்வு காணாமல் நாம் வெறும் அறிகுறிகளுக்கு மட்டுமே தீர்வு காணுவோம் எனக் கூறியுள்ளார்.

100% சைக்கிள் நகரமாக மாறப்போகும் பாரிஸ்

காதலின் தலைநகரமான பாரிஸில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசலும் மாசுபாடும் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கில் பாரிஸ் மீண்டும் பச்சைப் பசேலென காட்சியளிப்பதாக கூறுகின்றனர். இதனால் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க 2026க்குள் பாரிஸ் நகரில் 180 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் ஓட்டுவதற்கான பிரத்யேக வழித்தடங்கள், சாலையில் 450 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதைகளுடன் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு 1,30,000 வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் குழந்தைக்கு பாலியல் மிரட்டல்

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி வெளியேறியதையடுத்து பல ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். போட்டியில் பந்துவீச்சாளர் முகமது ஷமி சரியாக விளையாடவில்லை என மத ரீதியாக அவரை சிலர் விமர்சித்தனர். அதை எதிர்த்து இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, முகமது ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். விராட் கோலியின் கருத்துக்கு எதிராக பல பதிவுகள் போடப்பட்ட நிலையில், அவரது 10 மாத பெண் குழந்தைக்கு எதிராக பாலியல் மிரட்டல் விடுத்த பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது அது ஹைதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, காவலர்கள் குற்றவாளியை கைது செய்தனர்.

விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண்

சீனா விண்வெளியில் ஒரு நிலையத்தை அமைத்து வருகிறது. அதற்கான இறுதிக் கட்ட பணிகளை முடிப்பதற்காக, ஜாய் ஜிகாங், யே குவாங்பு மற்றும் வாங் யாப்பிங் என்கிற பெண் வீராங்கனையும் விண்ணுக்குச் சென்றனர். விண்வெளி நிலையத்தை செயல்படுத்தும் பணியின் ஒரு கட்டமாக, வீரர் ஜாய் ஜிகாங்குடன் இணைந்து வீராங்கனை வாங் யாப்பிங்  சுமார் ஆறு மணி நேரம் விண்வெளி நடைப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் விண்வெளி நடைப்பயணம் மேற்கொண்ட முதல் சீன பெண் எனும் பெருமையைப் பெற்றுள்ளார் வாங் யாப்பிங்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்