SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காடுகளின் களஞ்சியம் துளசி கவுடா

2021-12-01@ 17:45:05

நன்றி குங்குமம் தோழி

மத்திய அரசால் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ  விருதைப் பெற தங்கள் பாரம்பரிய உடையில், வெறும் காலுடன் வந்து கவனம் ஈர்த்தார் கர்நாடகாவைச் சேர்ந்த 72 வயது பழங்குடியின மூதாட்டி துளசி கவுடா. சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் கடந்த 60 ஆண்டுகளாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை தனியொரு ஆளாக நட்டுவைத்து ஒரு காட்டையே உருவாக்கி இருக்கிறார்.

கர்நாடகாவில் உள்ள ஹலக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் துளசி கவுடா. பெரிதாக கல்வியறிவு இல்லையென்றாலும், காடுகளும் மலைகளும் இவருக்கு அத்துப்படி. அதைவிட காடுகளின் மீது அதீத பிரியம் கொண்டவர். 12 வயதில் இருந்தே வனத்துறையில் தன்னை தன்னார்வலராக இணைத்துக்கொண்டவர் குறைந்த காலத்திலேயே ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு பராமரித்து வந்திருக்கிறார்.

வாழ்நாள் முழுமையும் இயற்கையை பாதுகாப்பதற்காகவே அர்ப்பணித்தவர், தனது ஊதியத்தையும் ஓய்வுதியத்தையும் இதற்காகவே வெகுவாகச் செலவிட்டுள்ளார். இவரின் அர்ப்பணிப்பு உணர்வைப் பார்த்த அரசு, துளசி கவுடாவை நிரந்தரப்பணியாளராக நியமிக்க, கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் வனத்துறையில் நிரந்தர பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார் இந்த மூதாட்டி. காடுகளில் இருக்கும் அரிய வகை தாவரங்களும் மூலிகைகளும் கொடுக்கும் பலன்கள் துளசி கவுடாவுக்கு அத்துப்படி. அவரின் காடு தொடர்பான அறிவை கண்டு பலமுறை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வியந்துள்ளனர். இந்த அறிவின் காரணமாகவே வன ஆர்வலர்கள் மத்தியில்  ‘காடுகளின் களஞ்சியம்’ (Encyclopedia of Forest) என்று துளசி கவுடா அழைக்கப்படுகிறார்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி என பல துறைகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி 2020-21ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதியிடம் இருந்து பத்ம விருதுகள் தமிழ் பட்டிமன்றத் தலைவர் சாலமன் பாப்பையா, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பின்னணி பாடகி சித்ரா, இயற்கை விவசாயி பாப்பம்மாள், தடகள வீராங்கனை சுதாசிங், விளையாட்டு வீராங்கனை அனிதா ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்