SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேக்கப் பாக்ஸ் லிப்ஸ்டிக்

2021-11-16@ 17:52:04

நன்றி குங்குமம் தோழி

முகத்தைக் கழுவி ஒரு பிரைட் நிற லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டாலே போதுமானது. முகம் மேக்கப் போட்டது போல் செம ஷைனிங் ஆகி விடும். மேக்கப்பே வேண்டாம் என்னும் பெண்கள் கூட லிப்ஸ்டிக், லிப் கிளாஸ், குறைந்தபட்சம் லிப் பாம் கூட பயன்படுத்தாத பெண்கள் மிக மிகக் குறைவு. அந்த அளவிற்கு மேக்கப் உலகில் லிப் மேக்கப்பிற்கு தனி அந்தஸ்து உண்டு. என்ன சரும நிறத்திற்கு என்ன லிப்ஸ்டிக், தேர்வு, விலை என முழுமையான லிப்ஸ்டிக் ஆலோசனைகள் சொல்கிறார் மேக்கப் ஆர்டிஸ்ட் சங்கீதா மோகன்.

லிப்ஸ்டிக் வெரைட்டிகள்

லிப்ஸ்டிக் பொறுத்தவரை இரண்டு டைப்தான். ஒன்று மேட் மற்றொன்று கிளாஸ். இதிலேதான் ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன. இங்கே முக்கியமான சில வகை மட்டும் பார்ப்போம். ஷியர் அல்லது சாட்டின் லிப்ஸ்டிக்இரண்டுமே ஒரே மாதிரியான வெரைட்டி கள்தான். ரெண்டு வெரைட்டியும் வறண்ட சருமத்துக்கான ஸ்பெஷல். ஆனால் ஷியர் லிப்ஸ்டிக் பொறுத்தவரை ஆன்லைனில் வாங்கும் போது பார்த்து வாங்கணும். ஷேட் எப்போதும் ஆர்டர் செய்த ஷேடை விட சற்றே டார்க் நிறம்தான் கிடைக்கும். எனவே பார்த்து வாங்குவது நல்லது. சாட்டின் அதீத ஷைனிங் ஆயில் கொண்டது. ஆயில் சருமம் உள்ளவங்க தவிர்க்கணும். அதே சமயம் இரவு நேர பார்ட்டிகளுக்கு செம சாய்ஸ் இந்த சாட்டின் லிப்ஸ்டிக்.

கிரீம் லிப்ஸ்டிக்

அதிக ஷைனிங் கூடாது, ஆயில் லுக் வேண்டாம். ஆனாலும் லிப்ஸ் முழுக்க சரிசமமா பரவியிருக்கணும்னு நினைக்கறவங்க கிரீம் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். கிரீம் லிப்ஸ்டிக்கில் இருக்கும் வேக்ஸ் லிப்ஸ் கவர் போலவும் செயல்படும்.

கிளாஸ் லிப்ஸ்டிக்

கிளாஸ் லிப்ஸ்டிக் பொதுவாகவே உதட்டின் அளவை கொஞ்சம் பெரிதாக காட்டும். மெல்லிய உதடுகள் கொண்ட பெண்கள் இந்த கிளாஸ் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். மேலும் மாலை நேர பார்ட்டி, ரிசப்ஷன்களுக்கு ஜொலிக்கும் லிப்ஸ் கொடுக்கலாம்.

பேர்ல் லிப்ஸ்டிக்

பெயரிலேயே முத்துப் போல் ஜொலிக்கும் எனத் தெரிகிறது. கிளாஸ் லிப்ஸ்டிக் ஜொலிக்கும், ஆனால் பேர்ல் லிப்ஸ்டிக் வெளிச்சம் பட்டாலே மினுமினுக்கும். வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும்.

மேட் லிப்ஸ்டிக்

ரெண்டு வேளை சாப்பிட்டாலும் என் லிப்ஸ்டிக் போகக்கூடாது என்னும் பெண்களின் சாய்ஸ்ல பெரும்பாலும் மேட் லிப்ஸ்டிக்தான். மேலும் மாடர்ன் லுக், பிரைட் மற்றும் ஃபேஷன் கேர்ள் கெத்து காட்ட வைக்கும் மேட் லிப்ஸ்டிக்.

லிப் இன்க் மற்றும் லிப் பெயின்ட்

பேஸிக்கலி நான் ஒரு சோம்பேறி எனக்கு திரும்ப திரும்ப போட்டுக்கொள்ள நேரமில்லை என்போருக்கான பிரத்யேக தயாரிப்பு. பெயின்ட் போல் அப்படியே போட்டுக்கொள்ளலாம். காலை முதல் மாலை வரை கலையாமல் அப்படியே இருக்கும் வகை இவை.இவை தவிர்த்து லிப் டின்ட் , மாய்ச்சுரைஸர் லிப்ஸ்டிக், கிரேயான் லிப்ஸ்டிக், லிப்ச் ஸ்கெட்ச் என இன்னும் பல வெரைட்டிகள் உள்ளன.

லிப்ஸ்டிக் டெஸ்ட்

முதல்ல நம்ம லிப்ஸ் என்ன வடிவம், எப்படிப்பட்ட சருமம்ன்னு புரிஞ்சுகிட்டு லிப்ஸ்டிக் தேர்வு செய்யணும். சிலர் கைகளுடைய பின்பக்கம் அல்லது விரல் நுனி இப்படி பயன்படுத்தி டெஸ்ட் செய்துக்குவாங்க. ஆக்சுவலா உதட்டுல லிப்ஸ்டிக் போட்டுதான் டெஸ்ட் பண்ணணும். காரணம், நம் கைகளுடைய கலரும், லிப் கலரும் வேற வேற. இப்போது கொரோனா காலம் என்பதால், லிப்ஸ்டிக்கினை டெஸ்ட் செய்யும் போது, அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் லிப்ஸ்டிக் பிரஷ் பயன்படுத்தி போடணும். பொதுவாக டெஸ்டிங் செய்யும் அனைத்து இடங்களிலும் லிப் பிரஷ் இருக்கும்.

அவ்வாறு இல்லாத போது, isopropyl என்கிற திரவத்தில் லிப்ஸ்டிக்கை நனைச்சிட்டு நேரடியா போட்டுக்கலாம். காரணம் டெஸ்டர் லிப்ஸ்டிக்கை பலர் பயன்படுத்தி பார்த்து இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்று ஏற்படாமல் இருக்க இதனை கடைப்பிடிப்பது அவசியம். ஆன்லைனில் வாங்கும் போது ஏற்கனவே நம்மிடம் இருக்கும் லிப் ஷேட்களை அடிப்படையாக கொண்டு தான் லிப்ஸ்டிக் வாங்கணும்.

என்ன கலர் எந்த ஸ்டைல்

டிரெடிஷனல் உடைகள், அதாவது பட்டுச் சேலைகளுக்கும், தென்னிந்திய பார்ட்டி உடைகளுக்கும் கொஞ்சம் அடர் நிறத்தில் கோல்டன் கலர் கலந்த டபுள் ஷேட்கள் பயன்படுத்தலாம். அதுவே இந்திய வெஸ்டர்ன், அதாவது பலாஸோ, சல்வார் மாதிரியான உடைகளுக்கு பிங்க் ஷேட்ஸ் நல்ல சாய்ஸ். வெஸ்டர்ன் உடைகள்னா தோல் நிறம், நியூட்ரலைஸ்ட் வண்ணம் ஓகே. இந்த நியூட்ரலைஸ்ட் ஸ்டைல் லிப்ஸ்டிக் தினந்தோறும் பயன்பாட்டுக்குக் கூட நல்ல தேர்வா இருக்கும். ஆனால் கொஞ்சம் டஸ்கி கேர்ள்ஸ் இந்தக் கலரைத் தவிர்க்கறது நல்லது.

அடர்நிற லிப்ஸ்டிக் பயன்பாட்டின் போது கண்கள்ல மேக்கப் கொஞ்சம் குறைவா போட்டுக்கணும். இரண்டுமே ஹெவி மேக்கப்னா பார்க்கிறவங்க ‘பவுடர் மூஞ்சி’னு கலாய்ப்பாங்க. அதுவே கண்கள்ல மேக்கப் குறைவா போட்டால், அடர் நிற லிப்ஸ்டிக்குக்கு போகலாம். சும்மா முகம் கழுவி சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டாலே மேக்கப் செய்த மாதிரி தெரியும். அந்த அளவுக்கு டார்க் லிப்ஸ்டிக் ஸ்பெஷல்.  கொஞ்சம் டஸ்கி நிறம் கொண்ட பெண்கள் அடர் நிற லிப்ஸ்டிக் அல்லது நேரடி கலர்கள் பயன்படுத்தலாம். ஃபேர் ஸ்கின்னுக்கு எந்தக் கலரும் பொருந்தும். ஆனாலும் அடர் சிவப்பு, அடர் ப்ரவுன் கலர்களைத் தவிர்ப்பது நல்லது. உதடு கொஞ்சம் கருப்பா இருந்தால் டார்க் கலர்ஸ் பயன்படுத்தணும். குறைந்தபட்சம் ரூ.250 விலையேனும் செலவிட தயார்னா மட்டுமே லிப்ஸ்டிக் பயன்படுத்துங்க. தரம் குறைந்த, மட்டமான பிராண்ட் வேண்டாம். லிப்ஸ்டிக்குகள் ரூ.10ல் கூட கிடைக்கும். ஆனால் தரமான லிப்ஸ்டிக் ரூ. 250 துவங்கி நல்ல பிராண்டுகளில் லேக்மே, சுகர் என மிடில் கிளாஸ் பிராண்டுகளில் ஆரம்பித்து ரூ. 10,000 வரையில் கூட உலக டாப் பிராண்டுகள் உள்ளன.  

லிப் லைனர்

என்ன கலர் லிப்ஸ்டிக்கோ அதே ஷேட்லதான் லிப் லைனர் போடணும். சிலர் அடர் நிறத்தில் லிப் லைனர் பயன்படுத்துவாங்க. அவ்வாறு அவுட் லைன் போடும் போது, உதட்டை சுற்றி ஸ்கெட்ச் பேனாவில் அவுட்லைன் வரைந்த மாதிரி இருக்கும். போட்ட மாதிரி பயன்படுத்துவாங்க. அந்த ஸ்டைல் ஒரு சிலருக்குதான் பொருந்தும். கடைசியாக உதட்டை விட பெரியதா லிப்ஸ்டிக் போடக்கூடாது. முடிந்தவரை இதழ்களோட இரு பக்க ஓரங்கள்லயும் லிப்ஸ்டிக் போடாமல் தவிர்ப்பது நல்லது.

மேக்கப் ஆர்டிஸ்ட் சங்கீதா மோகன்

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

 • turist_world

  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

 • noru-philippines

  பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்