SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சிபுரம் பட்டில் என்னோட டிரென்ட் - Easy to Choose

2021-11-09@ 17:40:00

நன்றி குங்குமம் தோழி

டிசைனர் ப்ரியா

பட்டு வாங்குவதற்காக பெரிய பெரிய ஷோரூம்களில் ஏறி இறங்கினால் ஒரு டிசைன்ல 10 எடுத்துப் போடுவாங்க. அந்தப் பத்தில் மூன்று கலர்தான் நமக்கு ரொம்ப பிடிச்சதா இருக்கும். மீதி இருக்கும் கலரை எல்லாம் நாம ரிஜெக்ட் செய்துருவோம். அப்படி நீங்க அல்டிமேட்டா விரும்புற அந்த 3 கலரை மட்டுமே நான் செலக்டிவ்வா என்னோட பொட்டிக்ல வச்சுருப்பேன் என நம்மிடம் பேசத் தொடங்கிய ப்ரியா, பி.காம் முடித்து டிப்ளமோ இன் ஃபேஷன் டிசைனிங் படித்திருக்கிறார்.

கொஞ்சநாள் ஃபேஷன் டிசைனிங் துறையில் வேலை செய்துகொண்டிருந்தேன். திருமணம், குடும்பம், குழந்தை என்றான பிறகு எனக்காக சொந்தமாக பொட்டிக் ஒன்றை சென்னை தியாகராய நகரில் உருவாக்கிக் கொண்டேன் என்றவர், நேரடி ஒரிஜினல் காஞ்சிபுரம் பட்டுச் சேலை விற்பனை பிஸினஸில் தன்னை எப்போதும் பிஸியாகவே வைத்திருக்கிறார்.கசமுசாவென கலர்களை அதிகம் வைத்துக்கொண்டு கஸ்டமர்களை எப்போதும் நான் குழப்பும் ரகம் கிடையாது. தெளிவா.. மிகத் தெளிவா “ஈஸி டூ சூஸ்” என்பதே என்னோட பிஸினஸ் மந்திரம் என்றவரின் பொட்டிக்கில் இருக்கும் அத்தனை பட்டுச் சேலைகளும் மனதைக் கொள்ளைகொள்`ளும் ரகம்.

எங்களோடது பாரம்பரிய காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள். குறிப்பாக கைத்தறி பட்டுச் சேலைகள். மூன்று தலைமுறையாகவே எங்களுக்கு இதுதான் குடும்பத் தொழில். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் எங்கள் குடும்பமே இருக்கு. முதலில் தாத்தா.. பிறகு அம்மா.. இப்போது நான் என, காஞ்சிபுரம் புகழ் கைத்தறி பட்டுச்சேலை உற்பத்தித் தொழிலை விடாமல் தொடர்கிறோம் என்கிறார் இவர்.

2014ல் இருந்தே நான் பட்டுச் சேலைக்கான பிரத்யேக பொட்டிக்கை   டிசைன் செய்து நடத்த ஆரம்பித்து விட்டேன். சின்னத்திரை முதல் வெள்ளித் திரை பிரபலங்கள்வரை பலரும் இப்போது என்னோட ரெகுலர் கஸ்டமர்ஸ் என்றவர், பல சின்னத்திரை தொடர்களில் எங்கள் தயாரிப்பு புடவைகளையே திரை நட்சத்திரங்கள் பெரும்பாலும் உடுத்தி நடிக்கின்றனர் என புன்னகைக்கிறார். குறிப்பாக நடிகை நளினி என்னோட ரெகுலர் கஷ்டமர். அவர் உடுத்தும் எங்கள் தயாரிப்பு பட்டுப் புடவைகளைப் பார்த்து பிரபலங்கள் பலரும் எங்கள் ரெகுலர் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். தவிர இன்ஸ்டா, யு டியூப் என சமூக வலைத்தளங்களிலும் என் பொட்டிக் ரொம்பவே பிரபலம்.

காஞ்சிபுரத்தில் எங்களுக்கென சொந்தமாகத் தறி இருக்கிறது. எங்கள் தறியில் தயாராகும் பட்டுச் சேலைகள் நேரடியாக என் பொட்டிக் நோக்கி விற்பனைக்கு வந்து விடுவதால், சேலைகள் பார்க்க ரொம்பவே ஃபிரஷ்ஷா லுக்காக இருக்கும். மேலும் நேரடி விற்பனை என்பதால் இடைத்தரகர்கள் ஏமாற்று இதில் துளியும் இல்லை. விலையும் எங்களிடம் குறைவுதான்.

பட்டுச் சேலை எடுக்க வரும் வாடிக்கையாளர்களிடம் முன்கூட்டியே கைத்தறி பட்டா, மெஷின் தயாரிப்பா என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுவேன் என்றவர், வியாபாரத்தில் நம்பிக்கை ரொம்பவே முக்கியம் என்பதை தொழில் மந்திரமாக மனதில் பதிய வைத்திருப்பதையும் நம்மிடத்தில் தெரிவிக்கிறார் குறைந்தது 3500ல் தொடங்கி என்னிடம் ஒரிஜினல் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் விற்பனைக்கு உள்ளது.

எங்கள் தயாரிப்பின் தரம் உணர்ந்தவர்கள் கண்டிப்பாக என்னைவிட்டு போகமாட்டார்கள் என்றவர் வாடிக்கையாளர் விரும்பும் கலர் காம்பினேஷன், டிசைன் என கஸ்டமைஸ்ட் பட்டுச் சேலைகளையும் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கித் தருவதையும் தெரிவிக்கிறார். அதேபோல் ஜரிகையிலும் ஒரிஜினல் மற்றும் டூப்ளிகேட் உண்டு. ஜரியில் சில்வர் ஜரி, டெஸ்டெட் ஜரி, காப்பர் ஜரி, கோல்டன் ஜரி, 1 கிராம் கோல்ட் ஜரி, 2 கிராம் கோல்ட் ஜரி போன்ற ஜரிகை போட்ட பட்டுப் புடவைகளும் எங்களிடம் விற்பனைக்கு உள்ளது.

காஞ்சிபுரம் ஒரிஜினல் பட்டுச் சேலை களைத் தாண்டி செமி சில்க் ஸாரிகள், லைட் வெயிட்டெட் பனாரஸ் சேலைகள் மற்றும் சில்க் காட்டன் ஸாரிகள்,  செந்தேரி சில்க், ஷிஃபான் சேலைகள், சிந்தடிக் சேலைகள், மடிசார் புடவைகள், கோரா ஆர்கன்ஷா சேலைகள் மட்டுமல்லாது ஈரோடு, சேலம், கோவை, காரைக்குடி காட்ட`ன் சேலைகளும் விற்பனைக்கு தயாராக உள்ளன. வடமாநிலங்களான கல்கத்தா, சூரத் போன்ற இடங்களில் இருந்து வரும் சிந்தடிக் பூனம் சேலைகளும் என் பொட்டிக்கில் நியாயமான விலையில் உள்ளது. இந்த தீபாவளி பண்டிகைக்கான புதிய வரவாக ஷாப்ட் சில்க் ஸாரிகள் பல வண்ணங்களில் நிறைய டிசைன்களில் இருக்கிறது என விடைபெற்றார்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்