மாதாந்திர வலி
2021-09-01@ 17:00:42

மாதவிடாய் காலங்களில் வரும் வலிகள் ஒவ்வொரு வயதினருக்கும் மாறுபடும். சிலருக்கு மாதவிடாய் காலங்கள் நெருங்கும்போதே வலி தொடங்கிவிடும், சிலருக்கு மாதவிடாய் காலங்களில் மட்டும் வலி இருக்கும் போன்றவை. மாதவிடாய் கால வலிகளை Dysmenorrhea என்று கூறப்படுகிறது. இந்த டிஸ்மெனோரியாவானது முதன்மை வலி, இரண்டாம் வலி என்று பிரிக்கப்படுகிறது.
முதன்மை வலியானது மிகவும் சாதாரணமானது. இதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. மாதவிடாய் சுழற்சியினால் ஏற்படும் வலி மட்டுமே ஆகும். இது Primary Dysmenorrhea. இரண்டாவது வகையான வலிக்கு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக கருப்பையில் நீர்க்கட்டி, நார்த்திசுக்கட்டி, நோய்த்தொற்று போன்றவற்றாலும் வலி ஏற்படலாம்.
இது Secondary Dysmenorrhea எனப்படுகிறது. இதில் வலிக்கான காரணம் அறிந்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் வலிகள் முற்றிலும் நீங்கி
நிவாரணம் கிடைக்கும். உதாரணமாக நீர்க்கட்டி போன்றவை மாதிரியான வலிகளுக்கு மருத்துவ ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் மூலம் கட்டிகள் கரைக்கப்படும் அல்லது லேப்ராஸ்கோப்பி மூலம் கட்டிகள் அகற்றப்படும். பிறகு வலி முற்றிலும் குறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். இதில் எந்த வகை சிகிச்சை நமக்கு தேவைப்படுமோ அதை மேற்கொண்டால் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
Tags:
மாதாந்திர வலிமேலும் செய்திகள்
பிஎம்எஸ் (Perimenopausal Syndrome-PMS) என்னும் மாதவிடாய் வருவதற்கு முன் வரும் பிரச்சனைகள்
அந்த நாட்களின் அவஸ்தையை தவிர்க்க...
பெண்களுக்கான கருத்தடை சாதனங்கள்
அந்த மூன்று நாட்கள்... ஓட வேண்டாம், ஓய்வெடுங்கள்!
நகமெனும் கேடயம்!
சாம்பலில் பூத்து உயிர் பெற்றவர்கள்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!