SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காய்கறி தோட்டமா... இதை பின்பற்றலாமே!

2021-07-26@ 17:22:21

நன்றி குங்குமம் தோழி

தனி வீடாக இருந்தால்தான் காய்கறி தோட்டம் போட முடியும் என்ற காலம் மாறி இப்போது பலர் மொட்டை மாடியிலும் காய்கறிகளை பயிர் செய்ய ஆரம்பித்துள்ளனர். தோட்டம் எங்கு அமைத்தாலும் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

*பொதுவாக காய்கறித் தோட்டத்தை வீட்டின் பின்புறத்தில் அமைப்பது வழக்கம். இதனை நீளம் சதுரமாக அமைக்கலாம்.

*வருடத்தில் ஒவ்வொரு பருவ காலத்தில் ஒவ்வொரு வித காய்கறிகள் விளையக்கூடும். அதனால் இடத்தை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து நடுவே பாதை அமைத்து பாத்தி கட்ட வேண்டும்.

*கோவைக்காய், பீன்ஸ், அவரை போன்ற கொடிகளாக விளையும் செடிகளை, நூல் அல்லது சணல் மூலம் அழகான முறையில் வேலிகள் மீது படர விடலாம். மொட்டை மாடி என்றால் கூரைபோல் அமைத்து அதில் படரவிடலாம்.

*முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கத்தரிக்காய் போன்றவை சற்று நாள்பட வளரும் காய்கறிகள். இந்தச் செடிகளின் இடையே வேகமாக வளரக்கூடிய முள்ளங்கி, டர்னிப், பசலைக்கீரை, பாலக் மற்றும் அனைத்துக்கீரை வகைகளையும் நடலாம்.

*தோட்டம் போட இடம் இல்லாதவர்கள் செடிகளைத் தொட்டிகளிலோ, பெட்டிகளிலோ, மூங்கில் கூடைகளிலோ, சிமென்ட் தொட்டிகளிலோ, பழைய பிளாஸ்டிக் பக்கெட்டுகளிலோ போட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கலாம்.

*செடிகளை விடியத்தொடங்கும் காலை நேரங்களில் நடுவது நல்லது. செடிக்கு விடப்படும் தண்ணீர் மிகவும் உப்புத்தண்ணீராக இருக்கக் கூடாது.

*தோட்டம் போடப்படும் பகுதியிலுள்ள மண் அதிக அளவு ஆசிட், அக்கலைன் பகுதிகளாக இருக்கிறதா? என்பதைச் சோதித்து ஜிப்சம் மற்றும் சுண்ணாம்புக் கல்லைத் தேவைக்கு ஏற்ப சேர்த்துப் பதப்படுத்திக் கொள்ளலாம்.

*களிமண்ணாக இருந்தால் செடிக்கு விடப்படும் தண்ணீர் வடியாமல் தங்கி நிற்கும். இதற்கு மணலையும் இயற்கை உரத்தையும் சேர்த்து நிலத்தைச் சரிப்படுத்த வேண்டும்.

*பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, முளைக்கீரை, வல்லாரை, புதினா போன்ற கீரை வகைகளையும் இலைகளை மட்டும் பறித்துவிட்டு, தண்டுகளை அப்படியே நட்டு வைத்தால் வளர்ந்துவிடும்.

*பூச்செடிகளும் நடலாம். கேந்தி, கோழிக்கொண்டை, வாடாமல்லி, கனகாம்பரம் இவற்றின் விதைகளைப் போட்டும் வளர்க்கலாம்.

*வெங்காயம், வெந்தயம், கடுகு, மல்லி இவைகளின் விதைகளைப் போட்டாலே நன்கு செடி வளரும். இஞ்சியை மணலுக்கு அடியில் புதைத்துச் சிறிது நீர் தெளித்து வந்தால் முளைத்துவிடும். பிறகு வேண்டியவற்றை வெட்டி விட்டு மீண்டும் புதைத்து வைத்தால் முளைத்துவிடும்.

*தொட்டிகளில் செடியை வளர்ப்பவர்கள் குறிப்பாக ஒன்று முதல் ஒன்றரை அடி ஆழமான சிமென்ட் தொட்டிகளைப் பயன்படுத்தினால் திரும்பத்திரும்ப செடிகளை நடுவதற்கு வசதியாக இருக்கும். தொட்டியில் செம்மண், மணல், கார்டன் ப்ளூம் உரத்தை 3: 2: 1 என்ற விகிதத்தில் கலக்கவும். கீரை வகைகளைச் சாதாரண பிளாஸ்டிக் தட்டுகளில்கூட வளர்க்கலாம்.

தொகுப்பு: ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்