SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

நகமெனும் கேடயம்!

2021-07-26@ 17:21:10

நன்றி குங்குமம் தோழி

நாம் நினைப்பதுபோல நகம் வெறும் உயிரற்ற பொருள் அல்ல. அது நம் விரலுக்கு மிக முக்கியமான அங்கமாகும். விரல் நுனி நரம்பு முடிச்சுகளையும், எலும்பையும், ரத்தக் குழாயையும் கேடயம்போல் எந்நேரமும் காக்கிறது. அவ்வளவு முக்கியமான நகம், நம் உள் உறுப்புகளில் ஏற்படும் மாற்றத்தைக் காட்டக்கூடியவை.

* நகமென்பது இயல்பாக வெளிர் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும். உதாரணமாக நகத்தில் மஞ்சள் நிறம் தோன்றினால் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய்க்கான அறிகுறியாக இருக்கும்.

* நகத்தில் வெள்ளை நிறத்திட்டு காணப்பட்டால் வைட்டமின் B-2 குறைபாடு உள்ளது என தெரிந்துகொள்ளலாம்.

* நகத்தில் நீலநிறம் தோன்றினால் இருதய நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

* நகத்தின் கருப்பு நிறம் புகை பிடிக்கும் பழக்கத்தாலே அல்லது  லைக்கன்பிளேனஸ் எனும் நோயின் அறிகுறியாக இருக்கும்.

* நகம் பச்சையானால் சூடாமோனாஸ் என்னும் அறிகுறி (அல்லது) பூஞ்சையால் ஏற்படும் நக சொத்தைக்கான அறிகுறி என உணரலாம்.

* வெளிறிய குழி போன்ற ஸ்பூன் நகங்கள் ரத்த சோகைகளுக்கான மிக முக்கியமான அறிகுறி.

* கிளி மூக்கு போன்ற மடங்கிய நகங்கள் (Clubbing) இருந்தால், அவை இருதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம்.

* சிறு புள்ளிகள், குழி போன்றவை பல சமயங்களில் இயல்பானது என்று தோன்றலாம். ஆனால் சில சமயங்களில் நகத்தில் ஏற்படும் சொரியாஸிஸ்க் கான அறிகுறி அது.

* நகத்தில் ஏற்படும் திடீர் தாங்க முடியாத வலி சில சமயங்களில் குளோமஸ் டியூமர் எனும் நரம்பு முடிச்சில் ஏற்பட்ட கட்டியின் வெளிப்பாட்டின் விளைவாக இருக்கலாம்.

* நாம் செய்யும் தவறான பெடிக்யூர், மெனிக்யூர், நகம் வெட்டும் பழக்கத்தால் நகச்சொத்தை ஏற்படுவதோடு HIV, ஹெபடைட்டிஸ் போன்ற வியாதிகள் பரவுவதற்கும், Ingrown Toe Tail எனும் வலி ஏற்பட்டு நகத்தில் அறுவை சிகிச்சை செய்யும் வாய்ப்பு ஏற்படலாம்.

* சரியான தரமான நெயில் பாலீஷ் மற்றும் ரிமூவர் பயன்படுத்தாததால் நக மடிப்புகளில் ஒவ்வாமை ஏற்படும்.

* சில வகை நச்சுப் பொருள்களில் பாதரசம் மற்றும்  Poisoning, ஆர்சனிக் கலக்கப்பட்டு இருக்கும். இதனால் நகத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். சரியான உணவுப் பழக்கத்தால் ஆரோக்கியத்தை கடைபிடித்து கேடயமான நகமெனும் உறுப்பை காத்திடலாம்.

தொகுப்பு: மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்