SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2021-07-14@ 17:49:38

நன்றி குங்குமம் தோழி

*வீட்டில் திராட்சை அதிகமாக இருந்தால், ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சிறிதளவு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, திராட்சைப் பழத்தை விதை நீக்கி சேர்த்து வதக்க வேண்டும். பின் மஞ்சள்தூள், வெந்தயப் பொடி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்தால் சுவையான திராட்சைத் தொக்குத் தயார்.

*சப்பாத்தி மாவுடன் இரண்டு வாழைப்பழங்களை சேர்த்து பிசைந்து, சப்பாத்தி செய்துப் பாருங்கள். சப்பாத்தி சாப்ட்டாகவும், சுவையாகவும் இருக்கும்.

*மோர்க்குழம்பில், தயிருடன் ஒரு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல், கரைத்து ஊற்றிக் கொதிக்கவிட்டால், மோர்க்குழம்பு திரிந்து போகாது.

*சேமியாவை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியவுடன், ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். உப்புமா செய்யும்போது  ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

- ஏ.எஸ். கோவிந்தராஜன், சென்னை.

*எலுமிச்சை ஜூஸ் மற்றும் மோர் கலந்து அருந்தும்போது சிறிதளவு சோம்பு பவுடரை கலந்து குடிக்க, வாசனை தூக்கலாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

*தேங்காய்ப்பால் எடுக்கும்போது தண்ணீருக்குப் பதில் வெதுவெதுப்பான பாலை சேர்த்து, பால் எடுக்க, திக்காக இருக்கும்.

*வெண்ணெய் காய்ச்சும் போது, அதில் 1/2 டீஸ்பூன் உப்பைப் போட்டுத் தீயைச் சிறியதாக வைத்துக் காய்ச்சினால் பொங்காது.

-மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

*கோதுமை அல்வா செய்யும்போது, வெந்நீர் தெளித்து, தெளித்து கலந்து நெய் சேர்த்தால் அல்வா கண்ணாடிபோல மின்னும்.

*அதிரசம் மாவை சலிக்கும்போது வரும் கப்பியை வீணாக்காமல் தட்டை அல்லது தேன்குழல் செய்யும் மாவிலோ கலந்துவிட்டால் கரகரவென்று நன்றாக இருக்கும்.

*மிஷினில் அரிசி அரைக்கும் போது, முதலில் சாதா பச்சரிசியை அரைத்த பிறகு, பட்சணத்துக்காக அரைத்தால், மாவு கலப்படம் இல்லாமல் வெள்ளையாக இருக்கும்.

- வத்சலா சதாசிவன், சென்னை.

*இடியாப்ப மாவு பிசையும்போது கொதிக்கும் பாலை கொஞ்சம் ஊற்றி கிளறினால் வெண்மையாக இருக்கும்.

*பாதாம்பருப்பு உள்ள டப்பாவில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை போட்டு வைத்தால் பாதாம்பருப்பு நீண்ட நாட்கள் இருக்கும்.

*காலிஃப்ளவரை வேக வைக்கும்போது சிறிது எலுமிச்சைப்பழச்சாற்றை பிழிந்து வேக வைத்தால் காலிஃப்ளவரின் நிறம் மாறாதிருக்கும்

- கே.ஆர்.இரவீந்திரன், சென்னை.

*குழம்பு கொதிக்கும்போது உப்பு சேர்க்க வேண்டும். அதிகமாக தண்ணீர் இருக்கும்போது உப்பு சேர்த்தால், சுண்டியதும் உப்பு உறைய வாய்ப்புள்ளது.

*கீரை, வெண்டைக்காய் போன்றவை முழுவதுமாக வதங்கிய பிறகு உப்பு சேர்த்தால் தான் அதன் உண்மையான அளவு தெரியும்.

*உப்புமாவிற்கு தண்ணீர் கொதிக்க வைக்கும்போதே ரவையின் அளவிற்கு ஏற்ப உப்பு சேர்த்துவிட வேண்டும். அப்போது தான் உப்புமாவில் சமமாக உப்பு சுவை இருக்கும்.

- ச.லெட்சுமி, செங்கோட்டை.

*மோர் மீதமாகி விட்டால், அதில் ஒரு பிரட் துண்டுகளை போட்டு, ஊற வைத்து, தாளித்து சாப்பிட்டால் உப்புமா போன்று சுவையாக இருக்கும்.

*மோர் குழம்பு தயாரிக்க பச்சை மிளகாய் அரைக்கும்போது, மிளகாயை நன்கு வதக்கி, பின்பு அரைத்தால் குழம்பு வெண்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.

*அரை கிலோ அரிசிக்கு உளுத்தம் பருப்புக்கு பதில் நான்கு பெரிய தக்காளிப்பழங்களை சேர்த்து அரைத்தால் இன்ஸ்டன்ட் தக்காளி தோசை தயார்.

- எஸ். பாரதி, மதுரை.

*அரிசியோடு ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து வடித்தால் சாதம் உதிரி உதிரியாக வரும்.

*பாஸ்மதி அரிசியை ஒரு கை ஊற வைத்து, நெய்யில் வறுத்து ஆறியபின் மிக்ஸியில் ரவையாக உடைத்து அதில் பால் பாயசம் தயாரித்தால் சுவையாக இருக்கும்.

- ஜி.இந்திரா, திருச்சி.

*தோல் உரித்த உருளைக்கிழங்கு கெடாமல் இருக்க அதில் சிறிது வினிகரை தெளித்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

*பால் காய்ச்சும்போது சில ஏலக்காய்களைப் போட்டால் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும்.

- எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.

*கோதுமை மாவில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து பக்கோடா தயாரித்தால் சுவையாக இருக்கும்.
*உருளைக்கிழங்கு நன்றாக வேக வேண்டும் என்றால் கொதி நீரில் சிறிதளவு வினிகரை சேர்த்தால் போதும்.
*பூரி பொரிப்பதற்கு முன் மாவைத் தொடுவதற்கு பதில், வெண்ணெயைத் தொட்டுக்கொண்டு பொரித்தால் எண்ணெய்
குடிக்காது, கசடும் தங்காது.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*சர்க்கரைப் பொங்கல் செய்தபின் ஏலம், திராட்சை, முந்திரியோடு சிறிதளவு ஜாதிக்காய் பொடிைய தாளித்து பரிமாறினால் வாசனையும், சுவையும் ஓஹோ என்றிருக்கும்.
*பருப்பு பாயசம் செய்யும் போது, அதில் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொரித்துப் போட்டால் சுவையும், மணமும் பிரமாதம்தான்.
*கத்தரிக்காய் ரஸவங்கி செய்ய கடலைப்பருப்புக்குப் பதிலாக மொச்சைக் கொட்டை அல்லது முழு கொண்டைக்கடலை வேக விட்டு சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

- கே.சாயிநாதன், சென்னை.

*சாம்பார், மோர்க்குழம்பு செய்யும்போது பருப்பு உருண்டை செய்து ஒரு டீஸ்பூன் அரிசி மாவைக் கலந்து உருட்டினால் பருப்பு உருண்டை கரைந்து போகாமல் இருக்கும்.
*தேங்காயைத் துருவியவுடன் மிக்ஸியில் போட்டு அரைக்காமல், தேங்காயை லேசாக சூடாக்கி விட்டு அரைத்தால் சீக்கிரமாக அரைபட்டிருக்கும்.
*உருளைக்கிழங்கை பொரியல் செய்யும்போது அதில் அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித்தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.
*கத்தரிக்காயைக் கூட்டு செய்யும்போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி 5 நிமிடம் கழித்து இறக்கினால் மணமாக இருக்கும்.

- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

*நெய் பழையதாகி விட்டால் அதில் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு காய்ச்சுங்கள். அது புது நெய் போல் மணக்கும்.
*புளி வைக்கும் பாத்திரத்தின் அடியில் கொஞ்சம் உப்பைப் போட்டு வைத்தால் புளி நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
*மீன் வாடை கையில் ஏற்பட்டால் எலுமிச்சை பழத்தோலை தேய்த்துக் கழுவினால் உடனடியாக நீங்கி விடும்.

- கே.விஜயலட்சுமி, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tngovt05

  சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 250 வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.

 • Chennai 05

  சென்னையில் அதிக பனி பொழிவில் செல்லும் வாகனங்கள்

 • Governer

  கடற்படை தினத்தையொட்டி சென்னை தீவுத்திடல் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை

 • planet Vaikundam

  ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

 • 04-12-2021

  04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்