பறிக்கப்படும் மொபைல்கள்... தீர்வு என்ன?
2021-03-04@ 17:59:52

நன்றி குங்குமம் தோழி
செல்போன் திருட்டு, நகைப் பறிப்பு போன்ற செய்திகளை நாம் அன்றாடம் படித்து வருகிறோம். குறிப்பாக மொபைல் திருட்டு போனால் அதை நம்மால் மறுபடியும் மீட்க முடியாமல் தான் ேபாகிறது. அவ்வாறு திருடப்படும் ெசல்போன்கள் மீட்க முடியாமல் போவதற்கு என்ன காரணங்கள்...
*மொபைலைத் திருடும் கும்பல், அவற்றை உடனே திருட்டு பொருட்களை வாங்கும் கடை ஏஜென்சிகளிடம் விற்று விடுகின்றனர். அவ்வாறு விற்கப்படும் மொபைலில் உள்ள IMEI எண்கள் மாற்றப்பட்டு புதிய போன்போல் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.
*IMEI நம்பர் உள்ள போன்கள், போலீசாரிடம் சிக்கினால் மட்டுமே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
*அதிகாலையில் வாக்கிங் போகிறவர்கள் மற்றும் பெண்களிடம் தான் பறிக்கப்படுகிறது.
*கூட்டம் நிறைந்த இடங்களான ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்டை ஒட்டிய சாலைகளிலும் வழிப்பறி நடப்பது சகஜம்.
*இந்த வழிப்பறி திருட்டில் பெரும்பாலும் 16-20 வயதினரே ஈடுபடுகின்றனர். இதில் படித்தவர்களும் உண்டு என்பதுதான் கொடுமை. வழிப்பறி முடிந்ததும், எளிதாக தப்பும் வாய்ப்பு உள்ள இடங்களில் மட்டுமே ஈடுபடுகின்றனர். ஒரே நாளில் பல மொபைல்களை, பல இடங்களில் வழிப்பறி செய்து, பறிகொடுத்தவர் நிம்மதியை கெடுத்து, இவர்கள் சகட்டுமேனி விலைக்கு விற்று விட்டு நண்பர்களுடன் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர்.
*பெண்கள் வெளியில் வாக்கிங் மற்றும் கடைகளுக்கு செல்லும்போது, முடிந்தவரை செல்போனை தவிர்க்க வேண்டும். அல்லது ஹேண்ட் பேக்கினுள் வைத்துக்கொள்ள வேண்டும்.
*முடிந்தவரை அதிக நடமாட்டம் உள்ள நேரங்களிலேயே, உங்களுடைய நடமாட்டங்களும் இருப்பது நல்லது!
*சிலர் வாக்கிங் போவதே போனில் பேசிக்கொண்டு போகத்தான் என்பதுபோல் செயல்படுவர். மேலும் சிலர் எப்பவும் கையிலேயே செல்போனை வைத்திருப்பர். அதை தவிர்ப்பது நல்லது.
- ராஜி ராதா, பெங்களூர்.
அட்டைப்படம்: சுமா பூஜாரி
மேலும் செய்திகள்
பெண்கள் ஏன் கால் மீது கால் போட்டு உட்கார கூடாது தெரியுமா ?
தலைமுறைகளை உருவாக்கும் பெண்ணை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்!
டிஜிட்டல் கடன் செயலிகள் எச்சரிக்கை!
பேரப் பிள்ளைகளால் அம்மாவுக்கு கஷ்டம்!
பாத்திரங்கள் பளபளக்க...
வீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து வருகிறானாம்!
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!