அம்பிகா IPS
2021-03-03@ 17:40:26

நன்றி குங்குமம் தோழி
14 வயதில் குழந்தைத் திருமணம்...
18 வயதில் இரு குழந்தைகளின் தாய்...
35 வயதில் மும்பை மாநகர கமிஷனர்!
அம்பிகா IPS ஆயிரக்கணக்கான பெண்களுக்கு முன்னுதாரணம். எப்படி இது சாத்தியம்? 14 வயதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கு அம்பிகாவை பால்ய திருமணம் செய்து வைத்தனர் அவரின் பெற்றோர். திருமணம் நடந்தபோது வெளி உலகம் தெரியா சிறு பெண்.
ஒரு நாள் குடியரசு தின போலீஸ் அணிவகுப்பைக் காண்பதற்கு தன் கணவருடன் சென்றார் அம்பிகா. அங்கு நடந்த பேரணியில் சிறப்பு விருந்தினருக்கு அடுத்தபடியாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி), துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி) ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அன்றைய இரவு கணவரிடத்தில் யார் இவர்கள்? எதற்காக இவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது என்று கேட்டார்.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு காவல் துறையில் வழங்கப்படும் சிறப்பு மரியாதை என்று அம்பிகாவுக்கு விளக்கினார் கணவர். அதைக்கேட்ட நொடி முதல் தானும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்ற ஆசை அம்பிகாவுக்குள் பிறந்தது.அவருக்கு நடந்தது பால்ய மணம் என்பதால் 10ம் வகுப்பைக் கூட அவர் அப்போது முடித்திருக்கவில்லை. தன் விருப்பத்தை கணவரிடத்தில் தெரிவித்து படிப்பை தொடர அனுமதி கேட்டார். அவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அம்பிகாவுக்கு உறுதுணையாக இருந்தார்.
கணவர் ஒத்துழைப்போடு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர், தொடர்ந்து பட்டப் படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார். பிறகு தன் கனவு பணிக்காக, ஐபிஎஸ் தேர்வு பயிற்சியில் இணைய சென்னைக்கு பயணித்தார். ஐபிஎஸ் பொதுப்பணித் தேர்வை எழுதியவர் அடுத்தடுத்து இரண்டு முறையும் தோல்வியை தழுவினாலும், மனம் தளரவில்லை.
ஆனால் மூன்றாவது முறையும் தோல்வி அடைந்த நிலையில், மனமுடைந்த அம்பிகாவுக்கு அவர் கணவர் ஆறுதல் கூறி பக்கபலமாய் இருந்து தேற்றினார். கடைசியாக மீண்டும் ஒருமுறை முயற்சி செய்வதாக தன் கணவரிடம் அனுமதி கோரியவர், இந்த முறையும் தோல்வி அடைந்தால் ஊருக்கு திரும்பி அங்கு ஆசிரியர் வேலை செய்து கணவருக்கு உறுதுணையாக இருக்க முடிவெடுத்தார். நான்காவது முறை நம்பிக்கையுடன் தேர்வெழுதியதில் வெற்றி கிடைத்தது. ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார் அம்பிகா.
குழந்தைத் திருமணத்தின் சாட்சியாய் இருந்தவர், தன் நிலைக்கு யாரையும் குற்றம் சாட்டாமல், மனம் தளராமல், நம்பிக்கையோடு கடின உழைப்பால், விடா முயற்சியால் தனது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிக் காட்டினார். நம்பிக்கை மனுஷி அம்பிகா ஐபிஎஸ்க்கு தோழியர் சார்பாக ஒரு சல்யூட் !
தொகுப்பு: மணிமகள்
படங்கள்: ஜி.சிவக்குமார்
Tags:
அம்பிகா IPSமேலும் செய்திகள்
ஆளுமைப் பெண்கள்
நியூஸ் பைட்ஸ்
பக்லைட்
தாதியர்களின் தாதி..!! ‘சூலகிட்டி நரசம்மா’
SACA (Stand against child abuse)
நம்பிக்கை
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!