பார்லரில் மங்கு ஃபேஷியல்
2021-03-02@ 17:17:05

ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது
அழகுப் பெட்டகம் 16
இந்த வாரம் மங்குவை நீக்க, பார்லர்களில் செய்யப்படும் மங்கு ஃபேஷியலை புகைப்பட விளக்கத்துடன் காண்போம். தொடக்க நிலை மங்கு எனில் இரண்டு அல்லது மூன்று சிட்டிங் ஃபேஷியல் எடுத்தாலே போதுமானது. நீண்டநாள் கவனிக்கப்படாமல் விடப்பட்ட மங்கு எனில், மங்கு தோலிற்கு கீழ் வேறூன்றி பரவி இருக்கும். இவர்கள், குறைந்தது ஆறு அல்லது ஏழு சிட்டிங்காவது அமர்ந்தால்தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெறத் துவங்கும். ஒவ்வொரு சிட்டிங்கும் 20 முதல் 30 நாள் இடைவெளி கட்டாயம் தேவைப்படும். கொடுக்கப்பட்ட இடைவெளியில் அவர் தொடர்ச்சியாக வந்து ஃபேஷியலை எடுக்க வேண்டும்.
பிக்மென்ட் கிட்டால் செய்யப்படும்
மங்கு ஃபேஷியல்:
1. சாதாரண நீரால் முகத்தை துடைத்து சுத்தம் செய்து, கிட்டில் இருக்கும் கிளன்சிங் க்ரீமை அப்ளை செய்து, முகத்தை டீப்பாக கிளன்சிங் செய்தல் வேண்டும். இதற்கு இரண்டு முதல் மூன்று நிமிட இடைவெளி தேவைப்படும்.
2. கிட்டில் உள்ள அரோமா ஸ்ஃக்ரப் பவுடருடன் (இதில் ஓட்ஸ் மிக்ஸாகி இருக்கும்) கிட்டில் இருக்கும் ஆன்டி பிக்மென்டேஷன் சீரத்தினை மூன்று அல்லது நான்கு துளிகள் இணைத்து பேஸ்டாக்கி, முகத்தில் அப்ளை செய்து ஏழு நிமிடங்கள் விட வேண்டும்.
3. தடிமனான சருமம் எனில் ஓட்ஸ் மற்றும் அரோமா பவுடர் காய்ந்த நிலையில் முகத்திற்கு மசாஜ் கொடுக்கலாம். சென்ஸிட்டிவ் சருமம் எனில், காய்ந்த அரோமா திட்டுக்களை நீக்கிவிட்டு மசாஜ் செய்தல் வேண்டும்.
4. ஸ்க்ரப் செய்யும் போதும் முகத்தில் உள்ள சிறு துளைகள் திறந்த நிலையில் இருக்கும். எனவே முகத்திற்கு ஸ்டீமிங் கொடுக்க வேண்டும்.
5. அடுத்ததாக ஸ்கின் டோனிங் ஜெல்லை முகத்தில் அப்ளை செய்தல் வேண்டும்.
6. முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் நீக்கிவிட்டு, டோனர் அல்லது ஆஸ்ட்ரிஜன்ட்(astrgent) இவற்றில் ஏதாவது ஒன்றை அப்ளை செய்ய வேண்டும்.
7. அடுத்து பிக்மென்டேசன் சீரத்தை முகத்தில் தடவி ஹை பீரிகொயன்சி மெஷின் மூலமாக மங்கு இருக்கும் இடத்தில் வைப்ரேஷன் லேசர் கொடுத்தல் வேண்டும். இதில் அந்த சீரம் எளிதில் சருமத்திற்கு கீழுள்ள மங்குவை உருவாக்கும் செல்கள் பரவாமல் தடை செய்யும்.
8. பின் 20 நிமிடங்களுக்கு முகத்தை மசாஜ் செய்தல் வேண்டும்.
9. இறுதியாக ஸ்கின் பிக்மென்ட் ஃபீல் ஆஃப் மாஸ்க்கை முகத்தில் தடவி, 10 நிமிட இடைவெளிக்குப்பின் நீக்குதல் வேண்டும்.
10. ஆன்டி பிக்மென்டேஷன் க்ரீமை இரவில் முகத்தில் தடவ வேண்டும்.
அடுத்த இதழில்…
* பரு வந்து நீங்கிய முகத்தில் குழி தோன்றுவது எதனால்?
* முகத்தில் மேடு பள்ளங்கள் தோன்றக் காரணம்?
* மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை வீட்டிலும், பார்லர் மூலமாகவும் சரி செய்வது எப்படி?
(ஒப்பனைகள் தொடரும்..)
Tags:
பார்லரில் மங்கு ஃபேஷியல்மேலும் செய்திகள்
விருப்பம் போல் முடியினை நீளமாக்கலாம்... அடர்த்தியாக்கலாம்!
சேலையில வீடு கட்டவா..?
‘மஞ்சள்’ மகிமை!
மணப்பெண்ணா நீங்கள்... இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!
பனிக்கால குளியல் பவுடர்
முக அழகு கூட்டும் புருவங்கள்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!