SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாடித்தோட்டம் அமைக்கப் போறீங்களா... இதை கவனிங்க...

2021-03-01@ 17:58:22

தனி வீடு இருந்தா தான் தோட்டம் அமைக்க முடியும் என்றெல்லாம் இல்லை... அடுக்குமாடி குடியிருப்புகளில் அழகாக மாடித் தோட்டம் அமைக்கலாம். இப்போது பலரும் மாடி தோட்டம் அமைப்பதில் தான் அதிக ஆர்வம் அளித்து வருகின்றனர். இருந்தாலும், மாடி தோட்டம் அமைக்கும்போது... சில விஷயங்களை
கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

* மாடி தோட்டம் வைக்க போகும் ஆர்வத்தில் தொட்டியில் மண்ணை நிரப்பி செடியினை நட்டு வைத்திடுவோம். அப்படி செய்யக்கூடாது. மண்ணில் இயற்கை கலவைகளை சேர்க்க வேண்டும். மண்ணில் மக்கக்கூடிய பொருட்களான, காய்ந்த இலை, சமையலறை கழிவுகள், காகிதங்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 15 நாட்கள் வரை மண்ணை மூடி வைக்கவும். பின்பு 15 நாட்கள் கழித்து அந்த மண்ணை தொட்டியில் நிரப்பவும். அதன் பிறகு, விதைகளை விதைக்கலாம் அல்லது செடிகளை நடலாம். செடிகள் நன்றாக செழிப்புடன் வளரும்.

* செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது சிலர் தொட்டிகள் தழும்ப தழும்ப தண்ணீர் ஊற்று வாங்க. அப்படி செய்யக்கூடாது. சிறிதளவு ஊற்றினால் போதும். அதிகமாக ஊற்றினால் செடியின் வேர்ப்பகுதி அழுகிவிடும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றினாலே செடிகள் நன்றாக வளரும்.

* செடிகளுக்கு காலை மற்றும் மாலை இரண்டு வேளை தண்ணீர் ஊற்ற வேண்டும். பகல் நேரங்களில் தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்க்கவும். அவ்வாறு செய்தால், சூரிய ஒளியின் வெப்பத்தால் செடி விரைவில் கருகிவிடும்.

* மாடித் தோட்டத்தை அமைத்தால் மட்டும் போதாது, ஒழுங்காக பராமரிக்க வேண்டும். செடிகளை பூஞ்சை நோய்கள் தாக்கும். அதில் இருந்து செடிகளை பாதுகாக்க முறையான இயற்கை உரம் மற்றும் மருந்துக்களை தெளிக்க வேண்டும். ரசாயன மருந்துக்களை என்றுமே பயன்படுத்தக்கூடாது.

* வாரத்தில் ஒரு முறை செடிகளுக்கு வேப்பம் பிண்ணாக்கு கரைசல் அல்லது இஞ்சி பூண்டு விழுதுகளை அரைத்து செடிகளின் மீது தெளித்தால் பூஞ்சை நோய் தாக்காது. செடிகளின் தன்மைக்கு ஏற்ப சரியான தட்பவெப்ப நிலை உள்ள இடத்தில் வைக்க வேண்டும். சில தாவரங்கள் வறட்சியை தாங்கக்கூடியதாக இருக்கும். ஒரு சில தாவரங்கள் குறைந்த வெப்பத்தில் வளரும். அதற்கு ஏற்ப செடிகளை பராமரிக்க வேண்டும். தேவைப்பட்டால் செடிகளை வெயில் அதிக அளவு தாக்காமல் இருக்க வலை அமைத்துக் கொள்ளலாம். வெயில் பனி மற்றும் மழையில் அதிக  பாதிப்பு ஏற்படாது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2021

    23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • oxygen-22

    ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

  • oxyyge11

    ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

  • koronaasadaaa1

    குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

  • black-girl22

    அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்