SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரு ஸ்ப்ரே செய்தால்... ஷூக்கள் பளிச் பளிச்...

2021-03-01@ 17:55:11

பெரும்பாலான இளம் பெண்கள் விரும்பும் காலணிகளில் ஸ்னீக்கர் வகை காலணிகளும் ஒன்று. கல்லூரிக்கு செல்லும் பெண்கள் மத்தியின் மிகவும் பிரபலம். ஜீன்ஸ், கவுன் மற்றும் ஸ்கர்ட் போன்ற மார்டர்ன் உடைகளுக்கு இந்த காலணிகளில் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும். பல நிறங்களில் வரும் இந்த ஸ்னிக்கர் ஷுக்களை சுத்தம் செய்வதற்காகவே ‘ஸ்னீக் ஈசி’ என்ற பெயரில் ஸ்பிரேக்களை கண்டுபிடித்துள்ளனர் மும்பையை சேர்ந்த இரண்டு இளம் மாணவிகள்.
மும்பையில் திருப்பாய் அம்பானி சர்வதேசப் பள்ளியின் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள் பரி நஹேதா மற்றும் சன்யா ஷா. கடந்த ஆண்டு ‘ஸ்னீக் ஈஸி’ என்ற பெயரில் தாங்கள் தயாரித்த ஸ்ப்ரேக்களை அறிமுகம் செய்துள்ளனர்.

‘‘பரிக்கும் சரி எனக்கும் சரி விளையாட்டு நடனம் என்றால் ரொம்ப பிடிக்கும். அது மட்டுமில்லை நாங்க இருவருமே ஸ்னீக்கர் ஷு விரும்பிகள்’’ என்று பேச துவங்கினார் சன்யா. ‘‘நடனம் ஆடுவதற்கும் விளையாட்டு பயிற்சி எடுக்கவும்... இந்த ஸ்னீக்கர் ஷுக்கள் மிகவும் வசதியாக இருக்கும். அதுவும் மும்பை போன்ற மாசு தூசு உள்ள நகரத்தில் இந்த ஷுக்களை மெயின்டெயின் செய்வது ரொம்பவே கஷ்டம். ஒரு நாள் போட்டு நடந்தாலே ஷு அழுக்காயிடும். இதை சுத்தம் செய்ய எந்த ஒரு பொருளும் கிடையாது. துவைத்துத் தான் போடணும்.

அதனாலேயே இதை சுத்தம் செய்ய ஏதாவது செய்யணும்ன்னு நானும் பரியும் யோசித்தேபாதுதான் ஒரு ஸ்ப்ரே போல இருந்தால்... நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு’’ என்ற சன்யா இளம் தொழில்முனைவோர் அகாடமியில் ஸ்னீக்கர் ஷுக்களை சுத்தம் செய்யும் ஸ்ப்ரே உருவாக்குவது குறித்த ஐடியாவை இருவரும்
வெளிப்படுத்தியுள்ளனர். அகாடமியின் வழிகாட்டுதல் உதவியுடன் ஸ்னீக் ஈசி என்ற பெயரில் ஷூவை சுத்தம் செய்யும் ஸ்ப்ரேக்கான ஃபார்முலாவைக் பல ஆய்வுகளுக்கு பிறகு கண்டறிந்தனர். சிறப்பாகவும் அதே சமயம் வேகமாகவும் சுத்தம் செய்யும் ஸ்ப்ரே என்று இரு தோழிகளும் உறுதியளிக்கின்றனர். ‘‘ஸ்னீக் ஈசி முழுக்க முழுக்க இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரித்து இருக்கிறோம்.

எலுமிச்சை மற்றும் இயற்கை எண்ணெய்கள் போன்ற கறைகளை அகற்றும் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு இருப்பதால், இது கறைகளை எளிதாக அகற்றி விடும். ஷூவும் பாதிப்படையாது” என்கின்றனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் தங்கள் வீடுகளில் சிறிய ஆய்வுக் கூடம் அமைத்து இந்த ஸ்பிரேவினை தயாரித்து வருகின்றனர். ‘‘தற்போது சிறிய அளவில்தான் செய்து வருகிறோம். அடுத்த கட்டமாக பெரிய அளவில் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். அவ்வாறு செய்யும் போது தான் லாபம் பார்க்க முடியும்’’ என்ற சன்யா ஸ்னீக்ஈஸியைப் பயன்படுத்துவது குறித்து விவரித்தார்.

‘‘இதன் பயன்பாடு மிகவும் சுலபமானது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்கள் சுத்தம் செய்ய விரும்பும் ஷூவின் பகுதிகளில் ஸ்பிரே செய்யணும். அதன் பிறகு சுத்தமான துணியைக் கொண்டு துடைத்தால் போதும், அழுக்கு நீங்கி சுத்தமாயிடும். ரசாயனமற்றது மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. எங்கு வர்த்தக கண்காட்சி மற்றும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் நாங்க ஒரு ஸ்டால் போட்டுடுவோம். இது வரை 500 பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்து இருக்கோம். கடந்த ஆண்டு கொரோனா என்பதால் விற்பனை பெரிய அளவில் இல்லை. மேலும் சமூக வளைத்தளம் மூலம் விற்பனை செய்ய இருக்கிறோம். சரியான குழு, மார்க்கெட்டிங் என்று அமைந்த பிறகு பெரிய அளவில் விரிவுபடுத்தும் எண்ணம் உள்ளது’’ என்றனர் இரு தோழிகளும் கோரசாக.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-04-2021

  23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்