SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேஸ் அடுப்பு பராமரிப்பு

2021-02-18@ 17:48:37

நன்றி குங்குமம் தோழி

அன்றாடம் சமையலுக்கு நாம் கேஸ் அடுப்புகளைதான் பயன்படுத்தி வருகிறோம். இரண்டு மற்றும் நான்கு அடுப்பு கொண்ட இந்த கேஸ் அடுப்புகள் பல மாடல்களில் வருகின்றன. எதுவாக இருந்தாலும், அதை நாம் சீராக பராமரித்து வந்தால் அதிக நாட்கள் பழுதாகாமல் இருக்கும்.

*கேஸ் அடுப்பு தரையிலிருந்து குறைந்தது இரண்டு அடி உயரத்தில் மேடையில் இருக்க வேண்டும்.

*ஜன்னல்களில் துணித்திரை பயன்படுத்தாமல் கம்பி வலை பொருத்தினால், கேஸ் அடுப்புக்கு பாதுகாப்பு, தீ விபத்தும் ஏற்படாது.

*சிலிண்டரின் அருகில் ஊதுவத்தி, மெழுகுவர்த்தி, சிம்னி விளக்கு, கெரசின் ஸ்டவ் போன்ற ெபாருட்கள் வைக்கக் கூடாது. சிலிண்டரை நிமிர்த்தியே வைக்க வேண்டும்.

*கூடுதல் சிலிண்டரை சமையல் அறையில் வைப்பதைத் தவிர்த்து வேறிடத்தில் வைக்க வேண்டும்.

*கேஸ் ட்யூப் ஒரு மீட்டர் நீளத்துக்குக் குறைவாய் இருக்க வேண்டும்.

*சூடான பொருட்களை ட்யூபின் அருகில் வைக்கக் கூடாது.

*கேஸ் ட்யூபை தண்ணீரால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். சோப், எண்ணெய் போன்றவற்றால் சுத்தம் செய்தால் குழாயிலிருந்து ட்யூப் வெளியே வந்து கேஸ் லீக்காகும் வாய்ப்புஉள்ளது.

*ட்யூப், ஸ்டவ், சிலிண்டரின் குழாயில் அழுந்தப் பொருத்தியிருக்க வேண்டும்.

*மேடை, கேஸ் அடுப்பு  கழுவும்போது சோப்பு பவுடருடன் சிறிது ஷாம்பு கலந்து தேய்த்து துடைத்தால் சுத்தமாக இருக்கும்.

*தினமும் இரவு சாப்பிட்டு முடித்ததும், கேஸ் அடுப்பை வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் துடைத்துவிட வேண்டும்.

*கேஸ் அடுப்பு மீதோ, பர்னர் மீதோ உணவுப் பண்டங்கள் சிந்தி விட்டால், உடனே  ஒரு துணியால் துடைத்துவிட்டால், கறை, காய்ந்து போகாது, சுத்தம் செய்வதும் எளிது.

*கேஸ் அடுப்பு மிதமான சூட்டில் இருக்கும்போதே துடைத்துவிட்டால் பிசுக்கு, கறை, அழுக்கு போன்றவை நீங்கி சுத்தமாக இருக்கும்.

*பாலோ, சாம்பார்  போன்றவையோ பொங்கி வழியாமல் அருகிலிருந்து கவனித்துக்கொண்டால் கேஸ் அடுப்பு, பர்னர், பிசுக்கு, கறை, அழுக்கு படியாமல் இருக்கும். சுத்தம் செய்வதும் சுலபம்

தொகுப்பு: எஸ்.ராஜம், திருச்சி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • military-helicopter5

    துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!

  • 05-03-2021

    05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 100farmmmm

    100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

  • train4

    கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

  • mars-4

    செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்