SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது

2021-02-15@ 17:43:54

அழகுப் பெட்டகம் 14

முகப்பரு நீங்க

பசி, தாகம், தூக்கம், உடல் உபாதைகள், கழிவுகளை வெளியேற்றுதல் என உடல் இயல்பாகவே ஒவ்வொன்றையும் நமக்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கும். எப்போதெல்லாம் நமக்கு தண்ணீர் அருந்துவதற்கான உணர்வு ஏற்படுகிறேதா அப்போதெல்லாம் கட்டாயமாகத் தண்ணீர் குடித்தல் வேண்டும். தண்ணீர் குடிக்காமலே இருப்பது முற்றிலும் தவறான செயல்.  தண்ணீர் குடிப்பது நமது சருமத்திற்கு மிகவும் நல்லது. நம் அருகில் எப்போதும் தண்ணீர் பாட்டில் இருத்தல் வேண்டும். முறையாகத் தண்ணீர் அருந்தாத நிலையில், உடலின் உள் மற்றும் வெளியுறுப்புக்களில் பிரச்னைகள் தோன்றத் துவங்கும். தண்ணீர் தவிர்த்து பழம், காய்கறி, பழச்சாறுகளை உண்பதும் சருமப் பொலிவிற்கு மிகவும் நல்லது.

பாக்டீரியா வழியாக தோலில் வரும் வீக்கம்தான் பரு. முகம், நெற்றி, கழுத்து இந்த மூன்று இடங்களிலும் பரு அதிகமாக வரும். சரியான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் பருவைக் கட்டுப்படுத்தலாம். பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள டெட் ஸ்கின்னை நீக்கும்போது சருமத்தில் புதியதாக உயிரணுக்கள் உருவாகும். நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் சுலபமாய் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே, முகப்பருவை நீக்கும் முறை, முகப் பரு வராமல் தடுப்பது, முகப்பரு மூலமாக நிரந்தரமாகிவிட்ட தழும்புகளை நீக்கும் முறைகளை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா.

பரு உள்ளவர்கள் சுயமாகப் ஃபேசியல் எடுக்க நினைத்தால்..

* முகத்தை ஸ்ஃக்ரப் செய்யக் கூடாது.
* அதிகமாக அழுத்தி மசாஜ் கொடுத்தல் கூடாது.
* ஸ்க்ரப் க்ரீம், மசாஜ் க்ரீம் அதிகம் பயன்படுத்துதல் கூடாது.
* அழுத்துவது, உள்ளிருக்கும் சீழை எடுக்க முயற்சிக்கும் செயல் தவறானது.

ஆலோவேரா

ஆலோவேராவில் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகம் இருக்கும். இதில் தோலிற்குத் தேவையான சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, இதிலுள்ள என்சைம் தோலிற்கு நெகிழ்வுத் தன்மையினைக் கொடுத்து, பாக்டீரியா, பங்கஸ், அழுக்கு போன்றவற்றை நீக்கி சருமத்தை சுத்தமாக்கும். தோலின் நச்சு, முகத்தில் தோன்றும் வெள்ளைத் தன்மையை நீக்குவதோடு, தோல் வறட்சி அடையாமல் சமநிலையில் வைத்துக்கொள்ளும். முகப்பருவால் வரும் வீக்கத்தையும் குறைக்கும்.

ஆலோவேராவின் மேல் உள்ள தோலை நீக்கி உள்ளிருக்கும் ஜெல்லை நன்றாகத் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து, அத்துடன் தரமான மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் இணைத்து மிக்ஸியில் அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி இருபது நிமிடத்திற்குப் பின் முகத்தைக் சுத்தம் செய்தல் வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை இதை தொடர்ந்து செய்தால், உடலின் சூட்டைத் தணிப்பதுடன், பரு வருவதைக் கட்டுப்படுத்தி, பருவால் ஏற்பட்ட தளும்பையும் நீங்கும்.
ஜாதிக்காய்பழங்காலத்தில் பெண்கள் பரு வந்தால் ஜாதிக்காயினைத்தான் பயன்படுத்துவார்கள்.

சாதிக்காய் சருமத்திற்கு மிகவும் நல்லது. நாட்டு மருத்துக் கடைகளில் கிடைக்கும், முழு சாதிக்காய் அல்லது சாதிக்காய் பவுடரை காய்ச்சாத பாலில் ஊற வைத்து கல்லில் நன்றாக இளைக்க உரசி முகம் முழுதும் போடுவதால், முகம் பொலிவாகி, முகப்பரு நீங்கி, பரு வந்த இடத்தில் இருந்த தளும்புகள் நீக்கும்.

வால் மிளகு

வால் மிளகை பொடியாக்கி, பரு இருக்கும் இடத்தில் போட்டாலும் பருக்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நலங்கு மாவில் சாதிக்காய், வால் மிளகு போன்றவை கட்டாயம் சேர்க்கப்பட்டு இருக்கும். இது சருமத்திற்கு மிகவும் நல்லது. பரு இருந்தால்தான் இதை முகத்தில் போட வேண்டும் என்றில்லை. சாதாரணமாக பயன்படுத்தினாலே சருமப் பிரச்சனைகள் தோன்றாமல் தோல் பாதுகாப்பாய் இருக்கும்.

இளநீர் மற்றும் நுங்கு

முகப்பருவுக்கு சிறந்த தீர்வு இளநீர் நுங்கு. நுங்கு சுளையை வேர்க்குரு வந்த இடத்தில் தடவினால் சரியாகிவிடும். அதேபோல் முகத்தில் வரும் முகப்
பருவுக்கு இளநீர் தண்ணீரை காட்டனில் நனைத்து முகத்தில் தடவ வேண்டும். இளநீர் உலர்ந்து சருமத்தை உள்நோக்கி இழுக்கும் உணர்வைத் தரும். தோல் இளநீரை நன்றாக உள் வாங்கிய பிறகு, முகத்தை சாதாரண நீரில் கழுவி, பின் தொட்டுப் பார்த்தால் நெகிழ்வான தன்மையுடன் தோல் இருக்கும்.

டீ ட்ரீ ஆயில்

தேயிலை மர எண்ணெய்யே டீ ட்ரி ஆயில் என அழைக்கப்படுகிறது. முகப்பரு மற்றும் பருவால் வரும் தளும்பை குறைப்பதற்கு சரியான தீர்விது. அனைத்து காஸ்மெட்டிக் கடைகளிலும் கிடைக்கும். ஒரிஜினலாக எடுத்துக்கொண்டால் சருமத்திற்கு மிகவும் நல்லது. இரவில் நல்லெண்ணெயுடன் டீ ட்ரீ ஆயில் கலந்து பரு உள்ள இடத்தில் தடவி, காலையில் சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ச்சியாகச் செய்தால் முகப்பரு வந்த தளும்பு சுத்தமாக நீங்குவதோடு, பருவும் வராது. தோலில் இருக்கும் பங்கஸ்களை சுத்தமாக்கி பருவைக் கட்டுப்படுத்தும்.

அடுத்த இதழில்…

மங்கு வருவதற்கான காரணம்?

(ஒப்பனைகள் தொடரும்..)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்