SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது

2020-12-03@ 17:07:34

அழகுப் பெட்டகம் - 3

ஆண்-பெண் இருபாலருமே கூந்தலின் கருமை நிறத்திற்கு எடுக்கும் சிரத்தைகள் அதிகம்தான். என்றாலும் நவீன வாழ்க்கை தரும் வேகத்தில், கூந்தலைப் பராமரிக்க முடியாமலும், விளம்பரம் தரும் மோகத்திற்கு அடிமையாகி, அழகு நிலையங்களை அணுகியும், இயற்கைக்கு மாறாய் கூந்தலின் வடிவத்தையும், தன்மையையும் மாற்ற எத்தனிக்கும் ஒவ்வொரு செயலும் கூந்தல் அழிவின் ஆரம்பமே…

எந்த ஒரு இயற்கை மாற்றமும் உடனடியாக நிகழாதுதான். இருப்பினும் நம்மைச் சுற்றி எளிதாய் கிடைக்கும், இயற்கைப் பொருட்களைக் கொண்டு நாமாகவே, முடியில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சரி செய்வது, கறுப்பு நிற முடி வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் விளக்குகிறார் அழகுக் கலை நிபுணர் ஹேமலதா.

* சுருள்முடி(curly hair)
* நீள்முடி(straight hair)
* பரட்டை முடி (wavy hair)
என முடியில் மூன்று விதம் உண்டு.

தலையில் தடவப்படும் அதிகப்படியான எண்ணெயால் முடி பிசுபிசுப்பாகி அழுக்கு படிவது, ஈரப்பசையற்று வறண்டு இருப்பது, அதிகமாக வேர்வை சுரப்பால் முடிக்கால்களின் துளைகள் அடைபடுதல், பொடுகுப் பிரச்சனை போன்றவை வராமல் முடியினை பாதுகாக்க வேண்டும். இதில் பொடுகு, முடிகொட்டுதல், நரைமுடி, முடி படியாமல் பறப்பது, பேன் தொல்லை போன்றவை மிக முக்கிய பிரச்சனைகள்.

* முடியில் ஏற்படும் வறட்டுத் தன்மைக்கு

நம் முடிக்கால்களுக்கு இடையில் உள்ள ஸ்கால்ப்பில் எண்ணெய் போன்ற ஒரு திரவம் சுரக்கும். அதற்குப் பெயர் சீபம். சீபம் சுரப்பது குறைவாக இருந்தால் முடி வறட்டுத்தன்மை அடையும். அடிக்கடி சீப்பு கொண்டு தலை சீவுவதால் ஸ்கால்பில் சுரக்கும் சீபம் சீப்பின் வழியே நுனி முடிவரை பரவும். தலையின் ரத்த ஓட்டம் சீராகும். வறட்சித் தன்மை நீங்க, அவக்கெடா பழத்தின்(butter fruit) சதைப்பகுதியினை தலையில் தடவினால் அது முடிக்கு நல்ல மாய்ச்சரைசர் தரும். தயிரை தலையில் தடவினாலும் நல்லது. அதேபோல் பியரை ஒரு ஸ்ஃப்ரே பாட்டிலில் போட்டு முடியில் அடித்து பிறகு தலைக்கு குளித்தால் அதுவும் முடிக்கால்களுக்கு மாய்ச்சரைசரை கொடுக்கும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது முடிந்தால் இரண்டு முறை எண்ணெய் குளியல் செய்தால் முடியின் வறட்டுத்தன்மை சுலபமாக நீங்கும்.

* நுனி முடியை வெட்டுவது சரியா?

நுனி முடியினை வெட்டுவது முடிக்கு மிகவும் நல்லது. இதில் நுனியில் ஏற்படும் பிளவு தன்மை குறையும். சத்துக் குறைவான நுனி முடிகளை, நீளமுடிக்காரர்கள் இரண்டு மாதத்திற்கொரு முறையும், சுருள்முடி உள்ளவர்கள் மூன்று மாதத்திற்கொரு முறையும் வெட்டிச் சீராக்கலாம்.

* வெள்ளை முடியை நீக்கினால், அருகில் நிறைய வெள்ளைமுடி தோன்றும் என்பது உண்மையா?

இது முற்றிலும் தவறான கருத்து. வலுக்கட்டாயமாக பறித்தால் முடியின் அமைப்பான ஃபாலிக்கல் பாதிப்படையும். சுற்றி இருக்கும் முடியையும்
பாதிப்படைய வைக்கும் அவ்வளவே.

* முடியின் பாதுகாப்பிற்கு என்ன செய்ய வேண்டும்?

சூரியனில் இருந்துவரும் புறஊதாக் கதிர்கள் (UV race) நேரடியாக தலையில் படக்கூடாது. தரமான ஷாம்புவை வாரம் இருமுறை பயன்படுத்தலாம்.
அதிகம் சூடான நீரில் முடி அலசுவதை தவிர்க்க வேண்டும். முடி அழகிற்காக ஹேர் ஸ்ப்ரே போன்றவைகளையும் பயன்படுத்துதல் கூடாது.

* முடியினை ஸ்டிரெய்ட்டனிங் செய்வது சரியா?

கண்டிப்பாக கெடுதல். ஸ்டிரெய்ட்டெனிங் செய்ய அதிகமான கெமிக்கல் பொருட்கள் முடியில் செலுத்தப்படும். இதில் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு நிறைய உள்ளது. மேலும் முடி உடையும் தன்மையும், வறட்டுத் தன்மையும் உருவாகி, முடி கொட்டத் தொடங்கும். ஸ்டிரெய்ட்டனிங் செய்தே ஆக வேண்டும் என்றால் அதற்கென முறையான பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணரை அணுகுவதே நல்லது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • icvator25

  3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!

 • sheep25

  ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!

 • 25-02-2021

  25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • jayyaaaa_bdaayy

  73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

 • golfer-woods

  அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்