SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவராத்திரி ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்

2020-10-28@ 16:54:47

நன்றி குங்குமம் தோழி

என்னதான் தீம், டிரெண்டி கல்யாணங்கள் என்றாலும், அதிலும் சில பழக்க வழக்கங்களை ஒவ்வொர் குடும்பமும் கடைபிடிக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பில் குடை, செருப்பு கொடுத்து அழைத்து வருவது, மாப்பிள்ளை பெண்ணின் தங்கைக்கு உடைகள் கொடுப்பது, இதெல்லாம் இன்றும் பழங்கால வாசம் மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டுதான் வருகிறது. அதை மையமாக வைத்தே திருமணத்திற்கு தேவையான ஆரத்தி தட்டுகள், காசியாத்திரை செட், பச்சபுடி செட், விளையாடல் செட் என அனைத்தையும் விற்பனை செய்கிறார்கள் ஜேபீ கிரியேஷன்ஸ் (JayBee Creations) .
‘இப்போ நவராத்திரி ஸ்பெஷல் கலெக்‌ஷன்ஸ்தான் சிறப்பாக களமிறக்கியிருக்கிறோம்’  என்னும் ஜேபீ கிரியேஷன்ஸ் உரிமையாளர் ஜெயஸ்ரீ சமீபத்திய டிரெண்ட் குறித்து பேசினார்.

நவராத்திரி ஸ்பெஷலாக கற்கள் பதித்த ஆரத்தி தட்டுகள், குங்குமம், மஞ்சள் வைப்பதற்கு ஹேண்டி கிராஃப்ட் கப்புகள், எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளக் கூடிய கோலங்கள், கீ செயின்கள் என பல வெரைட்டிகள் கொண்டு வந்திருக்கோம். குறிப்பாக கோலங்களை அலங்கரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கார்டுகள் போல் எங்கும் வைத்துக்கொள்ளலாம் பாணியில் இருக்கும். அதே போல் தீபாவளி சிறப்பாக எலெக்ட்ரிக் லைட்டுகள் பொருத்தப்பட்ட விளக்குகள் அதிலேயே நிறைய ஹேண்ட்மேட் டெக்ரேஷன்கள் சகிதமாக இறக்கியிருக்கிறோம்.

நவராத்திரி கீ செயின்கள் எங்களின் அடுத்த வரவு. விநாயகர், லஷ்மி என கடவுள்களின் சிலைகள் தாங்கிய இந்தக் கீ செயின்களை தோரணமாக, அன்பளிப்பாக, காரில் கண்ணாடியுடன் அலங்காரமாக, சாவிகளில் என எப்படியும் உபயோகிக்கலாம். மேலும் விருந்தினர்களுக்கு பழம், பாக்குடன் இந்தக் கீ செயின்களையும் சேர்த்துக் கொடுத்தால் மறக்க முடியாத அன்பளிப்பாக இருக்கும்.

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்