SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோழி சாய்ஸ்

2020-10-13@ 17:06:38

நன்றி குங்குமம் தோழி

ஆன்டிக் வெள்ளி ‘ஆடி  போயி  ஆவணி  வந்தாலே எப்போதும் டாப்தான்’… எங்கும்  கல்யாணப்  பேச்சு, பத்திரிகைகள், அழைப்புகள் என தூள் பறக்கும். கல்யாணம் என்றாலே மணமகன், மணமகள் உடைகள், நகைகள் தவிர்த்து அடுத்த பார்வை கல்யாண சீர்வரிசைதான். என்னதான் மாப்பிள்ளை வீட்டார் வேண்டாம் என்றாலும் எங்களால் முடிந்ததையேனும் கொடுத்தேத் தீருவோம் என்னும் அன்புக்கு எப்போதும் அடையாளம் இந்தக் கல்யாண சீர்வரிசைகள்தான். சரி, இந்த சீர்வரிசைகளில் இப்போது என்ன டிரெண்ட்.

‘‘பெண்கள் எல்லோரும் படிப்பு, வேலை என எங்கேயோ செல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்ப நாங்களும் அவர்களைக் கஷ்டப்படுத்தாத ஆன்டிக் வெள்ளிப் பூஜை பொருட்களை அதிகம் களமிறக்கி இருக்கோம்’’ என்கிறார் சென்னை தி.நகரில் அமைந்துள்ள சல்லானி ஹவுஸ் ஆஃப் சில்வர் (Challani House of Silver) உரிமையாளர் ஜெயந்திலால் சல்லானி.

‘‘ஆன்டிக் வெள்ளியின் ஸ்பெஷல் எப்படி வாங்குறோமோ அப்படியே பாலிஷ் செய்தது போல் புதுசா இருக்கும். மேலும் எண்ணெய் பிசிக்குக்கும், தீபம் ஏத்தி உண்டாகுற கருப்புக்கும் மட்டும் ஏதேனும்  சோப் போட்டு தேய்த்தால் போதும். சுத்தம் செய்ய அதிகம் மெனெக்கெட அவசியமில்லை. பெரும்பாலும் பித்தளைப் பொருட்களை இப்போதைய பெண்கள் சம்பிரதாயத்திற்குத்தான் வாங்குறாங்க. நாளடைவில் சின்னச் சின்ன பொருட்களாவது ஒவ்வொண்ணா வெள்ளியில் மாத்திடுறாங்க. காரணம், கொஞ்சம் திருநீர் அல்லது சோப் தேய்த்தால் போதும் பளிச்சுன்னு ஆகிடும். மேலும் வெள்ளியில் விளக்கேத்துறது விசேஷம்.

இப்போதைய தீம்களில் அதிகம் விற்பனையாகுறது அஷ்டலட்சுமி தீம்கள்தான். தாம்பூலம், விளக்கு, குத்து விளக்கு, விநாயகர் சிலை, ஒரு கோமாதா சிலை, சங்கு துவங்கி மொத்தம் 17 ஐட்டங்கள் சுமாராக 14 கிலோ வெள்ளி. இந்த பூஜை செட் விலை ரூ. 12,45,100. இந்த ஆன்டிக் பூஜை பொருட்கள் ரூ.1,00,000 முதல் அவரவர் வசதிக்கேத்த மாதிரி கோடிகள் வரை கூட வாங்கிட்டுப் போறாங்க. சிலர் குத்து விளக்கு மட்டும் நிலக்கதவு அளவிற்கு வாங்குறவங்களும் இருக்காங்க.

இதோ இன்னொரு செட் எப்போதுமான சாதாரண வெள்ளி பூஜை ஐட்டங்கள். மிடில் கிளாஸ் மக்களும் வாங்கலாம். இந்த சேம்பிள் அஸெம்பிள் பூஜா செட் ஒரு கிலோ. இதன் விலை அன்றைக்கு ரேட் பொருத்து ரூ.80,000 முதல் கிடைக்கும். இது இல்லாம வசதியானவங்க வெள்ளி தொட்டில், பெரிய சாமி சிலைகள், சாமிக்கான மண்டபம், விளக்கு மேடை எல்லாமே சேர்த்து வாங்குற பழக்கமும் உண்டு’’ என்றார்.

கல்யாண சீர் பாத்திரங்கள்

கல்யாண சீர் வரிசைகளில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், பீரோ கூட நெக்ஸ்ட்தான். முதலில் சாப்பாடு என பாத்திரங்களில்தான் அனைவரின் மனதும் செல்லும். எங்க கிட்ட ஸ்பெஷலே இந்த ‘கல்யாண சீர்வரிசை’ செட்தான் என தேவையான அத்தனையும் அடங்கிய கிச்சன் பாத்திர செட்டாகவே காட்டுகிறார்கள் சென்னை, தி.நகரில் அமைந்துள்ள ஜெயச்சந்திரன் பாத்திரக்கடை விற்பனையாளர்கள்.‘‘ஏழையானாலும் , பணக்காரங்கன்னாலும் ஒரு வீட்டுக்கு சீர்வரிசை பாத்திரமா இந்த செட்தான் அதிகம் எடுக்குறாங்க. வாடிக்கையாளர்களுக்கு சிரமம் கொடுக்காம மொத்தமும் நாங்களே ஒண்ணு சேர்த்து 80 பொருட்கள் அடங்கிய முழு செட் ரூ.18,000த்தில் விற்பனை செய்யறோம்.

தேடி ஓடி எடுத்து ஒண்ணு ஒண்ணா சேர்த்து எது விட்டோம், எதை மறந்தோம்னு இந்தப் பாத்திர செட்டுக்கு மட்டும் ஒரு நாள் முழுசா எடுத்துப்பாங்க. அதான் யோசிக்காம சுலபமாக்கி நேரத்தை மிச்சப்படுத்திட்டோம். குக்கரில் துவங்கி பால் குக்கர், அண்டா, சில்வர் குடங்கள், பானைகள், டம்ளர் இப்படி ஒரு மூணு, நாலு பேர் கொண்ட வீட்டுக்கு தேவையான அத்தனையும் இருக்கும். இது கூட இண்டக்‌ஷன், நான்ஸ்டிக் தவா செட், மிக்ஸி, கிரைண்டர், எலெக்ட்ரிக் குக்கர்னு அவங்கவங்க வசதி பொருத்து வாங்குவாங்க.

இப்போ ஸ்மார்ட் கிச்சன் கான்செப்ட் அதிகரிச்சதால கிச்சனை அழகா காட்ட சிலர் தவா செட் மட்டும் இல்லாம அத்தனையும் நான்ஸ்டிக், செராமிக் பாத்திரங்களா வாங்குறாங்க. அவங்களுக்கு ஏத்த மாதிரியும் பணியார சட்டி துவங்கி, பெரிய பிரியாணி அண்டா வரை கூட நான்ஸ்டிக்ல விற்பனைக்கு இருக்கு. தாளிக்கற சின்ன கரண்டி ஸ்டைல் சட்டி ரூ.100 ஆரம்பிச்சு சைஸ் பொருத்து, பிராண்ட் பொருத்து நிறைய வெரைட்டிகள்ல இருக்கு’’ என்கிறார்கள்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள் :ஆ.வின்சென்ட்பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்