SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருமை போக்கும் டிப்ஸ்!

2020-10-06@ 16:46:08

நன்றி குங்குமம் தோழி

இறுக்கமான ஆடைகள், டியோரண்ட் போன்ற பல காரணங்களால் நம் அக்குள் பகுதி கருத்துப் போகலாம். அதைப் போக்க வீட்டிலேயே செய்ய சில எளிய தீர்வுகள்..

தேங்காய் எண்ணெய்

இதில் இருக்கும் ‘விட்டமின் ஈ’ கருமையான அக்குளை சரி செய்ய எளிய தீர்வு. தேங்காய் எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்து பதினைந்து நிமிடம் கழித்து பாசிப்பருப்பு மாவு கொண்டு இளஞ்சூடான நீரில் கழுவி வர, கருமை மறையும்.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய்க்கும் பிளீச்சிங் குணங்கள் உண்டு. வெள்ளரிக்காயின் சாறை எடுத்து காட்டனில் தொட்டு லேசாக அக்குள் பகுதியில் அப்ளை செய்து, காய்ந்தவுடன் கழுவலாம். இதே வெள்ளரிச்சாறுடன் கொஞ்சம் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு கலந்து பூசி பின் கழுவ கருமை நீங்கும்.

எலுமிச்சை:

எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு மூடியைக்கொண்டு அக்குள் பகுதியில் தேய்க்கலாம். டெட் செல்கள் போக இதனுடன் சர்க்கரை சேர்த்து ஸ்கிரப் செய்யலாம். பதினைந்து நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் தண்ணீரால் கழுவவும். எலுமிச்சை சாறுடன் கொஞ்சம் மஞ்சள் தூள், தேன் அல்லது தயிர் கலந்து பேக் போலவும் அக்குளில் அப்ளை செய்யலாம். வாரத்தில் 3 முறை செய்துவர கருமை மறைந்து சருமம் பளிச்சென மாறும்.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு ஒரு பிளீச்சிங் ஏஜெண்ட். உருளைக்கிழங்கைத் துருவி சாறு எடுத்து அக்குள் பகுதியில் தடவி பதினைந்து நிமிடங்கள் காய்ந்த உடன் இளஞ்சூடான நீரால் கழுவவும். தினமும் செய்து வந்தால் கருமை மறைய ஆரம்பிக்கும்.ஆரஞ்சு தோல்: ஆரஞ்சு தோல் பவுடருக்கு ஸ்கின் லைட்னிங் மற்றும் இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும் தன்மை உள்ளது. ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து பவுடர் போல் அரைத்துக்கொள்ளவும். இந்தப் பவுடர் 1 டீஸ்பூனுடன் பன்னீர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி அக்குள் பகுதியில் தடவி, காய்ந்ததும் கழுவ, கருமை நீங்க ஆரம்பிக்கும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடாவுடன் லேசாக தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போலாக்கி, அதை கருமை பகுதியில் தடவி லேசாக மசாஜ் செய்யவும். பதினைந்து நிமிடங்கள் மசாஜ் செய்தவுடன் தண்ணீரால் கழுவி விடவும். வாரத்தில் 2, 3 தடவை இவற்றில் ஏதாவது ஒன்றை அப்ளை செய்து கழுவி வர, அக்குள் பகுதி கருமை மறைந்து சருமம் பளிச்சென்றாகும்.

தொகுப்பு: மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

அட்டைப்படம்:  ஸ்ருதி ரெட்டி

மேலும் செய்திகள்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்