SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவள் கழிவறை

2020-09-16@ 15:19:41

நன்றி குங்குமம் தோழி

நகர்ப்புறங்களில் வாழும் குடிசை வாழ் பெண்களுக்கு கழிவறை என்பது எட்டாக்கனியாகவே இன்றும் உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் தான் இந்த நிலை என நினைத்து விடாதீர்கள். மகாராஷ்டிராவின் புனேயிலும் பொதுக்கழிவறை பெண்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதாக இருந்து வந்தது. பிங்க் கழிவறை எனப்படும் 'டி சுவாச் தக்ருகா’ பொதுக்கழிவறை அறிமுகம் ஆகும் வரை. இப்போது அந்த பிங்க் நிற பஸ்சை கண்டதும் புனே ஏழை பெண்கள் முகம் சுழிப்பதில்லை. இதற்காக தானே காத்திருந்தேன் என்பது போல் அதை வரவேற்கின்றனர்.

மொபைல் ஏ.டி.எம் போன்ற இந்த மொபைல் பஸ் தான் இப்போது புனே ஏழை பெண்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இங்குள்ள சாம்பஜி கார்டன் பகுதியில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும். அப்போது அங்கு குவியும் பெண்களுக்கும் இந்த பஸ் கழிவறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கண்டம் செய்யப்பட்ட மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் தான் இவ்வாறு கழிவறைகளாக உருவெடுத்துள்ளது. இப்போதெல்லாம் பெண்கள் 5 ரூபாய் கொடுத்தோமா நிம்மதியா காலைக் கடனை கழித்தோமா என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

மொபைல் பஸ்சில் 4 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3 இந்திய கழிவறை ஒன்று வெஸ்டர்ன் ஸ்டைல். முகம் பார்க்க கண்ணாடி, பொழுது போக்க தொலைக்காட்சி, முகத்தை கழுவ 2 வாஷ் பேஷன்கள் என  களை கட்டுகிறது பஸ். ‘அவள் கழிவறை’ என அடைமொழியிட்டே இந்த பஸ் கழிவறை அழைக்கப்படுகிறது. 2016ல் பெண்களுக்கான  கழிவறை அமைப்பது தொடர்பாக புதுமையான கருத்துக்களை தெரிவிக்க அழைப்பு விடுத்தது புனே மாநகராட்சி. அப்போது  சானிட்டரி வேர்  வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ராஜிவ் கேர் என்ற வியாபாரி ஷானவிர் வாடா பகுதியில் இதை தொடங்கினார். தற்போது  புனே நகரில் சாம்பஜி கார்டன் உள்பட 13 இடங்களில் இந்த கழிவறை பஸ்களின் ஆதிக்கம் உள்ளது.  

இந்த பஸ்சில் நாப்கின்களும் விற்பனை செய்யப்படுவதால்  அந்த 3 நாட்கள் பற்றி கவலையில்லை. தவிர மினி டிபன் கடையும் இந்த பஸ்சிலேயே செயல் படுகிறது.  சாம்பஜி கார்டன் பகுதியில் தினசரி 250க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பஸ்சை பயன்படுத்துகின்றனர். விரைவில் பெண்களுக்கான பியூட்டி பார்லரை இந்த பஸ்சில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

 • india-jappan28

  வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

 • soldier28

  தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

 • balaji28

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

 • ukraine28

  உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்