SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆங்கிலத்தில் அசத்தும் பாட்டி

2020-03-18@ 15:01:41

நன்றி குங்குமம் தோழி

சமீபத்தில் ஆங்கிலம் பேசும் மூதாட்டி பற்றிய வீடியோ ஒன்று வெளியானது. 36 செகண்ட்கள் ஓடும் அந்த வீடியோவில் மூதாட்டி ஒருவர் தேசத்தந்தை காந்தியை பற்றி அச்சரம் பிசகாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். உலகின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர் மகாத்மா காந்தி. இந்தியாவின் தந்தை என அழைக்கப்படும் அவர் மிக எளிமையான மனிதராக வாழ்ந்தார். அவரது அகிம்சை இந்தியாவை ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றுத் தந்தது’’ என அந்த உரை நீள்கிறது. ஐ.பி.எஸ் அதிகாரி அருண் போத்ரா என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகியுள்ளது. மிக சரளமாக ஆங்கிலம் பேசும் காங்கிரஸ் எம்.பியான சசி தரூருக்கு சவால் விடுவதாக அமைந்துள்ள அந்த வீடியோவை இதுவரை 3 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கில் அவரை ஊக்கப்படுத்தி கருத்துக்களும் பதிவிடப்பட்டுள்ளன. அந்த குரலுக்கு சொந்தக்காரர் ராஜஸ்தான் மாநிலம், ஜுன்குனு மாவட்டத்தை சேர்ந்த பக்வானி தேவி என்ற மூதாட்டி. வெள்ளை சட்டையும் சிவப்பு மேலாடையும் அணிந்துள்ள அந்த பாட்டி தனது பொக்கை வாயால் பேசும் ஆங்கிலம் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் மகளிருக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது. அந்த  வீடியோவின் கீழே பாட்டிக்கு எத்தனை மதிப்பெண்கள் போடலாம் என கேட்டுள்ளார். அத்துடன் தன் பங்குக்கு 10க்கு 10 மதிப்பெண்கள் போட்டு ஐ.பி.எஸ் அதிகாரி போத்ரா அந்த மூதாட்டியை ஊக்கப்படுத்தியுள்ளார். இத்தனைக்கும் அந்த பாட்டி பள்ளி படிப்பை மட்டும் முடித்தவராம். பாலைவனத்தில் ஒரு ரோஜாவாக மிளிர்கிறார் பக்வானி தேவி.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaiheavy29

    வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!!

  • carbomb28

    ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

  • molave28

    வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

  • haryana28

    மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

  • water28

    தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்