SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரு விரலில் வீடு தேடி வரும் கார் சர்வீஸ்!

2020-03-03@ 17:30:28

நன்றி குங்குமம் தோழி

இப்போது எல்லாருடைய வீட்டிலும் சின்னதாக ஒரு கார் என்பது வழக்கமாகிவிட்டது. குடும்பமாக ஒன்றாக வெளியே செல்வதற்காகவே கார் வசதி என்பதால் அத்தியாவசிய பொருளாக மாறிவருகிறது. இதனால்  வெளியூர்களுக்கு மட்டும் அல்லாமல், குடும்பத்துடன் ஒரு நாள் அவுட்டிங் செல்வது எளிதாக சென்று வரலாம். வெயிலில் அலைய வேண்டாம். பஸ் நெருக்கடியில் அவதிப்படவேண்டாம். ஆனால் அதே சமயம் இதில் ஒரு சின்ன பிரச்னை வந்தாலும், செலவு நம் கையை பெரிய அளவில் கடித்துவிடும். அது மட்டும் இல்லை சாலையில் செல்லும் போது திடீரென்று நடு நோட்டில் நின்று விட்டால், அதை பைக் போல் மெக்கானிக் கடை வரை நகர்த்திக் கொண்டு போக முடியாது. அதற்குரிய மெக்கானிக் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

சில சமயம் நாம் பயணிக்கும் வழியில் எந்த ஒரு சர்வீஸ் மையங்களும் இருக்காது. இதற்கான தீர்வுகளை பல ஆப்கள் வழங்கி வருகின்றன. நாம் எங்கு இருந்தாலும் நம்மை தேடி வந்து பழுது பார்க்கும் வசதியினை இந்த ஆப்கள் வழிகாட்டுகிறது. அபாயகர நேரம் மட்டும் இல்லாமல் மற்ற சாதாரண நேரங்களில் கூட நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து கார்களை அவர்களே எடுத்துச் சென்று பழுது பார்த்து கொடுக்கிறார்கள். இனி இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ஒரு பட்டன் மூலம் நமக்கான சேவையை பெற முடியும்.

கோமெக்கானிக் (GoMechanic)


இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் கார் சர்வீஸ் மையம்தான் கோமெக்கானிக் ஆப். 2000த்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட இந்த சர்வீஸ் சென்டர் பெங்களூரூ, மும்பை, பூனா, நவி மும்பை, தானே, ஹைதராபாத், தில்லி, சென்னை, நொய்டா, பரிதாபாத், குர்கான், ஜெய்ப்பூர், சண்டிகர் போன்ற நகரங்களில் செயல்பட்டு வருகிறது.  பல ஆப்கள் இருந்தும் இதனை தேர்வு செய்ய முக்கிய காரணம், 24 மணி நேர சர்வீஸ், கார்களின் உதிரி பாகங்களை தரமாக மாற்றுவது, நியாயமான விலை, 35% உங்கள் பணத்தை சேமிக்கலாம் இது போன்ற பல வசதிகள் உள்ளது. முதலில் இந்த ஆப்பினை உங்கள் செல்போனில் டவுண்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் உங்களுக்கு என்ன சேவை
வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.  

* சாதாரணமாக கார்களை சர்வீஸ் செய்ய வேண்டும் என்றால் அதற்கான கட்டணம் ரூ.1999/ முதல் துவங்கும். இந்த தொகை பிரச்னைகள் குறித்து மாறுபடும்.

* சில சமயம் காரை எங்கேயாவது தெரியாமல் மோதிவிடுவோம். அந்த இடத்தில் சின்னதாக பள்ளம் போல் ஏற்பட்டு இருக்கும். அதை சரி செய்து, மறுபடியும் பெயின்ட் அடிக்க, அதற்கான கட்டணம் ரூ.1800/ முதல் துவங்கும்.

* கார்களின் சக்கரம் மையப்படுத்துதல், கார் சக்கரம் சரியாக சுற்றுகிறதா, சக்கரம் நிலையாக உள்ளதா போன்ற சேவைகளும் உள்ளது.

* கார்களுக்கு பாலிஷ் அடிப்பது மற்றும் அதில் உங்களுக்கு தேவையான அனைத்துவிதமான சேவைகளும் உள்ளன.

* கார் என்ஜின் ரிப்பேர், ஏ.சி ரிப்பேர், என்ஜின் ஆயில் மாற்றுவது, பிரேக் ஆயில் மாற்றுவது, பிரேக் பேட்களை சுத்தம் செய்வது இன்னும் பல சேவைகளும் அடங்கும்.

* அனைத்து ரக கார்களும் சர்வீஸ் செய்யப்படும்.

* கட்டணத்தை நேரடியாகவோ ஆன்லைன் முறையிலோ செலுத்தும் வசதி உள்ளது.


சர்வீஸ் மை கார் (Service My Car)

உங்கள் காருக்கு தேவையான 360 டிகிரி சர்வீஸ் அனைத்தும் சர்வீஸ் மை கார் மூலம் செய்யலாம். வாரத்தில் உள்ள ஏழு நாட்களும் 24 மணி நேரம் இவர்களின் சேவைகள் இயங்கி வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் உங்களின் காருக்கு பிரச்னை ஏற்பட்டாலும், இந்த ஆப்பில் பதிவு செய்தால் போதும், உங்க காருக்கான டாக்டர் நீங்க இருக்கும் இடம் தேடி வருவார். எந்த வகை கார்களாக இருந்தாலும் இங்கு சர்வீஸ் செய்து தரப்படும். சிலரின் காரில் சின்ன சின்ன பழுது இருக்கும். அவர்கள் முழுமையாக காரினை சர்வீஸ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களின் பிரச்னை என்னவோ அதற்கான தீர்வு மட்டுமே கையாளலாம்.

ஆட்டோசாங் (Autozang)

அனைத்து  நகரங்களில் உள்ள ஒர்க்‌ஷாப் குறித்த விவரங்கள் இந்த ஆட்டோசாங் ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில் கார் மட்டும் இல்லை இரண்டு சக்கர வாகனங்கள் குறித்த வர்க்‌ஷாப் பற்றிய விவரங்களும் அடங்கும். தொழில்நுட்பம் சார்ந்து செயல்படுவதால், நீங்கள் இருக்கும் இடத்தை பற்றி குறிப்பிட்டால் போதும்,  வண்டியினை எடுத்துச் சென்று பழுது பார்த்து திரும்ப கொண்டு வந்து தரப்படும். அவ்வாறு தரும் போது அதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும். இதனால் நீங்கள் தனிப்பட்ட நேரம் ஒதுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் அலுவலக ேவலையும் தடைபடாது, அதே சமயம் காரும் பழுது பார்க்கப்படும்.

ஓஎக்ஸ்ஓ கேர் (OXO Care)

உங்கள் அருகாமையில் உள்ள சிறந்த வர்க்‌ஷாப் எது என்று இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப்பினை பயன்படுத்துவது மிகவும் சுலபம். உங்களுக்கு என்ன சேவை வேண்டும் என்று முதலில் தேர்வு செய்யுங்கள். அடுத்து உங்களுடைய காரின் மாடல் கடைசியாக உங்கள் அருகே இருக்கும் மெக்கானிக் கடையினை தேர்வு செய்தால் போதும். நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு இருக்கும் இடத்திற்கு வந்து உங்களின் காரினை சரி செய்ய சிறப்பு மெக்கானிக்குகள் வருவார்கள்.

விலையும் நியாயமாக இருப்பதால், ஒவ்வொரு முறை இதன் மூலம் உங்கள் காரினை பழுது பார்க்கும் போது, அதற்கான சலுகைகளும் கிடைக்கும். இதற்கான கட்டணத்தை நேரடியாகவும் செலுத்தலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் கட்டலாம். காரினை கழுவுவது மட்டும் அல்லாமல், அனைத்து விதமான பழுதுகளும் பார்க்கப்படும். உங்களின் கார் சர்வீஸ் செய்ய வேண்டும் என்றால், அதனை நீங்கள் முன்கூட்டியே பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

கோபம்பர் (GoBumper)

கார் மட்டும் இல்லை பைக் சர்வீசும் இந்த ஆப் மூலம் செய்யலாம். கோபம்பர் சென்னை, பெங்களூரூ, ஐதராபாத் மற்றும் புனே போன்ற இடங்களில் மட்டும் செயல்பட்டு வருகிறது. ஆப் மூலம் உங்களுக்கு தேவையான சர்வீஸ் எது என்று தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு சர்வீசுக்கு ஏற்ப விலையும் மாறுபடும்.

* உங்கள் காரை முழுமையாக சர்வீஸ் செய்து, கேஸ் நிரப்பிக் கொடுத்தல்.

* எக்ஸ்பிரஸ் சர்வீஸ். அதாவது காரின் முக்கிய 24 பகுதியினை மட்டும் சர்வீஸ் செய்யப்பட்டு கார்வாஷும் செய்யப்படும்.

* சின்ன கீறலை நீக்கி பாலிஷ் மற்றும் கார்வாஷ்.

* காரின் உள்ளமைப்பை சுத்தம் செய்தல்.

* காரில் டெண்ட் ஏற்பட்டு அதனால் மறுபடியும் பெயின்ட் அடித்து புதிய கார் போல் மாற்றி அமைப்பது. உங்களின் கார் அல்லது பைக் இரண்டும் சர்வீஸ் செய்ய வேண்டும் என்றால், ஆப் மூலம் அதற்கான நேரத்தை குறிப்பிட வேண்டும். நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து காரை எடுத்து சென்று சர்வீஸ் செய்து விட்டு மறுபடியும் கொண்டு வந்து கொடுத்திடுவார்கள்.

மை கார் மெயின்டெனன்ஸ் சர்வீஸ் (My Car Maintenance Service)

எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்து இயங்குவதால், இந்த துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. நீங்கள் உங்கள் காரை வாங்கியவுடன் இந்த ஆப்புடன் அது பற்றிய விவரங்களை இணைத்துவிட வேண்டும். அவ்வளவு தான் மற்ற விஷயங்கள் இந்த ஆப் பார்த்துக் கொள்ளும். அதாவது எப்போது கார் சர்வீஸ் செய்ய வேண்டும். கார் என்ஜின் ஆயிலை மாற்ற வேண்டிய நேரம், பிரேக் பேட்களை சீர் செய்வது, ஸ்பார்க் பிளக், பேட்டரி, டயர்கள்... என கார்களின் ஒவ்வொரு பாகங்கள் குறித்து நமக்கு அறிவிப்பு வரும். இதன் மூலம் உங்களின் கார் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்ப உங்கள் வசதியான நேரத்தை குறித்து நீங்கள் காரினை சர்வீஸ் செய்யலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

 • chinacrob23

  சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்