SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரபலமாகும் அழகு சிகிச்சை

2020-02-12@ 14:28:01

நன்றி குங்குமம் டாக்டர்

அழகு கொஞ்சும் திரை நட்சத்திரங்கள் மேற்கொள்ளும் ஓர் ஆரோக்கிய சிகிச்சை Dry Brushing.  உடலின் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு இது சிறந்த முறையாக பிரபலமாகி வருகிறது. மேலும் சருமத்துக்கு அடியில் ஆங்காங்கே திரண்டிருக்கும் ‘செல்லுலைட்’ என்று சொல்லப்படும் கொழுப்புக் கட்டிகளைக் குறைப்பதற்கும் அழகுக்கலை நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது இச்சிகிச்சை. Dry Brushing-ல் அப்படி என்ன விசேஷம்?! சாதாரணமாக உலர்ந்த சருமத்தில் மெல்லிய இழைகளால் ஆன பிரஷால் தேய்ப்பதால் சருமத்திற்கு மட்டுமல்ல, முழு உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள்.

உலர்ந்த செல்களை நீக்குகிறது

மெல்லிழைகளாலான பிரஷ் கொண்டு சருமத்தை தேய்ப்பதால், மேற்புறம் படிந்துள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை பளபளக்கச் செய்கிறது. வெந்நீரில் குளிக்கும்போது, பிரஷ் செய்வதால் சருமத்தின் ஈரப்பதம் போய்விடும் என்ற தவறான எண்ணம் நம்மிடம் இருக்கிறது. உண்மையில், குளிக்கும் போது சருமத்தை பிரஷ் செய்வதால், இறந்த செல்கள் அகற்றப்படுகின்றன.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

Dry brushing-ல் உள்ள சிறப்பம்சமே ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், சருமத்திற்கு அதிகப்படியான நன்மை கிடைக்கிறது. உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது.

பதற்றத்தை தணிக்கிறது

இன்றைய தலைமுறையினருக்கு பதற்றத்தை குறைப்பது அவசியமான தேவையாக இருக்கிறது. மசாஜைப் போலவே இவர்கள் Dry brushing செய்வதால் மனதை அமைதியடையச் செய்து நிச்சயமாக மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை தணித்துக் கொள்ளலாம்.

ஆற்றலை அதிகரிக்கிறது

உள்மனம் அமைதியாக உணர்ந்தால் தானாகவே ஆற்றல் கிடைத்துவிடும். நம்முடைய தனிப்பட்ட மன உறுதியை உயர்த்துவதற்கு சிறந்த வழியாக கருதப்படும் Dry Brushing டெக்னிக்கை தினமும் பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல மன உணர்வை பெற முடியும்.

நச்சுக்களை வெளியேற்றுகிறது

உடலின் நிணநீர் அமைப்புகளே உடல் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுபவை. சருமத்தின் வழியாக  செல்லும் திரவங்கள் நிணநீர் முனையங்களால் வடிகட்டி உடலினுள் அனுப்பப்படுகின்றன. நோய்வாய்ப்பட்டிருக்கும் போதோ அல்லது உடலிலிருந்து நச்சுக்கள் வெளியேறும்போது இந்த நிணநீர் அமைப்பில் அடைப்பு ஏற்படும். அப்போது உள்ளிருந்து நச்சுக்கள் வெளியேறுவது தடைபடும். Dry Brushing செய்வதால், பிரஷின் முட்கள் சருமத் துவாரங்களில் உள்ள அடைப்புகளை நீக்கும். இது வியர்வை மூலம் நச்சுக்கள் வெளியேறுவதை எளிதாக்குகிறது. அதுமட்டுமல்ல, துவாரங்கள் திறக்கப்படுவதால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எளிதில் கிரகித்துக் கொள்ள முடியும்.

செல்லுலைட்டை அகற்றுகிறது

செல்லுலைட் என்னும் சருமப்பாதிப்பு பெரும்பாலான பெண்களை பாதிக்கும் ஒன்றாக இருக்கிறது. ‘பெண்களின் தொடை மற்றும் பின்புறங்களில் வரக்கூடிய இந்த செல்லுலைட் கட்டிகள் ஒரு ஆரஞ்சுப்பழத்தின் தோலைப் போன்ற தோற்றத்தில் இருப்பவை. இவர்கள் Dry Brushing தினமும் செய்வதால், நாளடைவில் இந்தக் கட்டிகள் மறைந்து வழுவழுப்பான சருமத்தை பெற முடியும்.

தொகுப்பு: இந்துமதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • formars29

  வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

 • coronadeath29

  கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

 • thee29

  பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

 • vadothara29

  குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்