SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2019-12-16@ 17:38:01

நன்றி குங்குமம் தோழி

*மோர்க்குழம்பு செய்யும்போது மிளகாய் வற்றலை வறுத்து அரைத்து சேர்க்கவும். அவ்வாறு செய்தால் குழம்பு வெள்ளையாக இருக்கும்.

*வெங்காயப் பக்கோடா கமகமவென்று இருக்க வேண்டுமா? பக்கோடா செய்யும்போது பாதி வெங்காயத்தையும் இஞ்சியையும் மிக்ஸியில் விழுதாய் அரைத்து எடுத்து அதை மாவில் கலந்து பக்கோடா செய்யுங்கள். படு பிரமாதமாய் இருக்கும்.

*டபுள் பீன்ஸை உப்பு சேர்த்து வேக வைத்து வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக்கொண்டு பஜ்ஜி மாவு, போண்டா மாவு மற்றும் பக்கோடா மாவில் கலந்து பக்கோடாவாக செய்யலாம். மாறுதலான சுவையுடன் நன்றாக இருக்கும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

*பாயசத்திற்கு பால் குறைவாக இருந்தால் ஹார்லிக்ஸ், வீவா போன்றவற்றைக் கரைத்துவிட பாயசம் மிகவும் சுவையாக இருக்கும்.

*பலகாரங்கள் செய்யும்போது எண்ணெய் பொங்காமலிருக்க இரண்டு சொட்டு வினிகர் விட்டால் போதும். அதன்பிறகு அது பொங்காது.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*கூட்டு, குருமா செய்யும்போது அத்துடன் ஒரு கைப்பிடி முளை கட்டிய பயிரைச் சேர்த்துச் சமைக்கவும். சுவையும் கூடும். புரதச்சத்தும் பல மடங்கு அதிகமாகக் கிடைக்கும்.

*அப்பளம், வடாம் போன்றவற்றை வறுத்தவுடன் சூட்டோடு மூடிவிடக் கூடாது. நமுத்துப்போய் விடும். ஆறிய பிறகு மூடி வைத்தால் மொர மொரப்புடன் இருக்கும்.

*இட்லி மாவை மிக்ஸியில் அரைக்கும் போது, ஐஸ் வாட்டர் சேர்த்து அரையுங்கள். சீக்கிரம் புளித்து போகாமல் இருக்கும்.
- அமுதா அசோக்ராஜா, திருச்சி.

*பொடி சேர்த்து செய்யும் கத்தரிக்காய் கறிபோல் குடை மிளகாயையும் பொடி சேர்த்து செய்ய மணமும், சுவையும் அருமையாக இருக்கும்.

*பஜ்ஜி செய்யும்போது ஒரு மாறுதலுக்காக பிஸ்கெட்டைத் தோய்த்துச் செய்தால் மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.

*முளைக்கீரைத் தண்டுகளை பொடியாக நறுக்கி பொரியல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். ஊளைச்சதையையும் குறைக்கும்.
- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால், அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெயில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
- கே.முத்துலட்சுமி, ராமநாதபுரம்.

*சாமை அரிசி வடித்த கஞ்சியில் ரசம் வைத்தால் சுவையாக இருக்கும். சாமை அரிசியில் கேசரி செய்தாலும் சாப்பிட சுவையாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும்.

*அவரைப்பருப்பை வேக வைத்து அதில் முருங்கைக்காய் போட்டு சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
- சு.கண்ணகி, வேலூர்.

கேக் செய்யும் போது இதை பின்பற்றலாம்!

*கேக் ‘பேக்’ செய்யும் ஓவனின் சூடு மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். கேக் ‘பேக்’ செய்வதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பே ஓவனை சூடாக்கிவிட வேண்டும்.

*கேக் ‘பேக்’ செய்யும் டின்னில் இரண்டடுக்கு பிரவுன் பேப்பரை அளவுக்கு தக்கபடி வெட்டி எடுத்து வெண்ணெய் பூசி வைக்க வேண்டும். டின்னின் முக்கால் பகுதி அளவுக்கே கேக் கலவையை ஊற்ற வேண்டும்.

*கேக் ‘பேக்’ செய்யும் போது ஓவனைத் திறந்து மூடக் கூடாது. திறந்து மூடினால் கேக்கின் மென்மைத்தன்மை பாதிக்கப்படும்.

*‘கேக்’கில் சேர்க்கும் வெண்ணெயில் உப்பு சேர்க்கக் கூடாது. அப்படி உப்புச் சேர்க்கப்பட்ட வெண்ணை பயன்படுத்தினால் கேக் மாவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

*ஃபுரூட் கேக் தயாரிக்கும்போது பழங்களின் விதைகளை நீக்கி விட்டு சிறிதாக நறுக்கி கேக்கின் மேல் பாலில் முக்கி பதிக்க
வேண்டும்.

*முட்டை சேர்க்காமலே சுவையான கேக் செய்ய வேண்டுமானால் ஒரு கப் மைதா மாவிற்கு ஒரு ஆரஞ்சு பழச்சாறு என்ற
கணக்கில் சேர்க்க வேண்டும்.

*கேக் அதிக மென்மையாக இருக்க வேண்டுமானால் அதில் சிறிதளவு தேன் சேருங்கள்.

*கேக் மேலே கலர் தேங்காய் துருவல், கேரட் துருவல், வெள்ளரி துருவல் என வித்தியாசமாகத் தூவி செய்யலாம்.

*கேக் மேலே முந்திரி, பாதாம், கற்கண்டு போன்றவற்றை தேனில் முக்கி பதித்துவிட்டால் நன்றாகவும், சுவையாகவும் இருக்கும்.

*கேக் செய்யும்போது கருகாமல் இருக்க சூடு பண்ணும் நேரத்தை சரியாக கணக்கிட்டு வைக்க வேண்டும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்