SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2019-11-27@ 16:00:31

நன்றி குங்கும் தோழி

* பலகாரங்கள் நமுத்துப் போகாமலிருக்க அவை வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அடியில் உப்பு பொட்டலம் ஒன்றை போட்டு வைக்கவும்.

* வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் அதிலுள்ள கசப்பு சுவை நீங்கிவிடும்.

* வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் உப்பு தூளை தடவிக் கொண்டால் கைகளில் பிசுபிசுப்பும், கரையும் வராது.

* வெண்பொங்கல் செய்யும்பொழுது பயத்தம் பருப்போடு ஒரு கப் பால் விட்டு செய்தால் (மணக்கும் தேங்காய்ப்பால் கூட விடலாம்) வெண்பொங்கல் சுவையாக இருக்கும்.

* வறுவல் தயாரிக்கும்போது ஒவ்வொரு தடவையும் ஒரு துளி சமையல் சோடா உப்பைக் கலந்து வறுத்தால் கொழுப்புச்சத்து குறையும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

 சின்ன வெங்காயத்தை சமைக்கும் முன்பு சிறிது நேரம் பாலில் ஊற வைத்து பயன்படுத்தினால் சத்தும், சுவையும் அதிகரிக்கும்.
 - எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.

* ஏலக்காய் நமத்துப்போய் விட்டால் அதை சூடான வாணலியில் புரட்டி விட்டு பின் பொடித்தால் நைசாக பவுடர் கிடைக்கும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* வற்றல் மிளகாய், சீரகம், தனியா, பெருங்காயம், பொட்டுக்கடலை ஆகியவற்றைப் பச்சையாக மிக்ஸியில் பொடித்து கொத்தவரை, காராமணிப் பொரியலுக்குப் போட்டு வதக்கினால் மிகவும் ருசி கொடுக்கும்.

* வெங்காயப்பச்சடி செய்யும்போது புதினா இலைகளை நறுக்கிச் சேர்த்தால் பச்சடி சுவையாக இருக்கும்.

* பஜ்ஜி செய்வதற்காக நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய், உருளைக்கிழங்கு வில்லைகளில் மிளகாய்ப்பொடி, உப்பு இரண்டையும் சேர்த்து கலந்து அரைமணி நேரம் கழித்து இவ்வில்லைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்ய காரமாய், சுவையாய் இருப்பதோடு உள்ளிருக்கும் காயும், உப்பும் காரமுமாக நன்றாக இருக்கும்.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

சுவையான பாலக் பனீர்!

ஒரு பிரஷர் குக்கரில் பாலக் கீரை, ஒரு கப் தண்ணீரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து மிக்சியில் அரைத்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணை சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும். வதக்கிய பொருட்களை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அரைத்த கலவையை சேர்த்து உப்பு, மிளகாய் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ப்ரஷ் க்ரீம் சேர்த்து வேக விடவும். இதனுடன் அரைத்துள்ள பாலக்கீரை கலவையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மிளகாய் வாசனை போனதும் நறுக்கிய பனீரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சப்பாத்தி மற்றும் பூரிக்கு ஏற்றது.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

கண் எரிச்சலை போக்கும் மஞ்சள்

* வசம்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தடுப்பதோடு மேனி அழகும் பெறும்.

* காய்ந்த மஞ்சளை பொடி செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்துவர கண் எரிச்சல் வராது.

* முருங்கை இலைச்சாற்றுடன் உப்பு கலந்து தினமும் 2 வேளை கரும்படை மீது பூசி வர படை மறையும்.

* தூள் உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் வராது.

- ந.செண்பகவல்லி, பாளையங்கோட்டை.

தீப்புண்ணை ஆற்றும் பீட்ரூட்

* பீட்ரூட்டைப் பிழிந்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய் குணமாகும்.

* பீட்ரூட் சாருடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

* பீட்ரூட்டை கூட்டு செய்து சாப்பிட்டால் ரத்த சோகை நீங்கும். மலச்சிக்கலை நீக்கும்.

* பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து உடலில் புதியதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.

* பீட்ரூட் சாறை தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சலுக்கு மேல் பூசிவர பிரச்னை தீரும்.

* தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால் தீப்புண் விரைவில் ஆறும்.

- சு.கண்ணகி, மிட்டூர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்