SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோழி சாய்ஸ்

2019-09-24@ 14:52:44

நன்றி குங்குமம் தோழி

பட்டு ஹேண்ட்பேக்குகள்

பட்டு உடைகள், பட்டுப் புடவைகளுக்கு மேட்சிங்காக நகைகள், செருப்புகள் என அத்தனையும் இருக்கின்றன. ஆனால் எத்தனை செலவு செய்தாலும் ஹேண்ட்பேக்குகள் மட்டும் பட்டு உடைகளுக்கு மேட்சிங்கான வகைகள் கிடைப்பதே இல்லை. அதை பூர்த்தி செய்யவே நேஹாஸ் ஹேண்ட்பேக்குகள் நிறைய வகைகளில். அதிலும் பட்டு மெட்டீரியலில் ஹேண்ட்பேக்குகள் எனில் சொல்லவா வேண்டும். கிராண்ட் லுக் சுலபமாக கிடைத்துவிடும்.

வெள்ளை ஹேண்ட்பேக்

ஓணம் புடவை, வெண்பட்டு, கோல்டன் நிற பட்டு உடைகள் மற்றும் கிராண்ட் லுக் அனார்கலி சல்வார்களுக்கு அணியலாம். நேஹாஸ் ஹேண்ட்பேக் தளத்திலும் இதை வாங்கலாம்.

புராடெக்ட் கோட்: WOODEN HANDLE NHSW 001
விலை: ரூ.1390

நெஸ்ட்  பர்ஸ்

பெரும்பாலும் பர்சை ஒரு அலங்காரப் பொருளாக வெறும் மொபைல், ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்டுகள் மட்டுமே வைக்கும் பேர்வழி எனில் இந்த பர்ஸ்கள் புடவைகளுக்கு பக்கா பொருத்தமாக இருக்கும். காரணம் கிராண்ட் உடைகள், புடவைகள் எப்போதும் கொஞ்சம் மெனெக்கெடும் வகைகள்தான். அதில் பெரிய ஹேண்ட்பேக்குகள் இன்னும் இடையூறாக இருக்கும். அந்த வகையில் இந்த சில்க் நெஸ்ட் பர்ஸ். அதில் பின்க் நிற ரோஜா வேலைப்பாடு கூடுதல் அழகாகத் தெரியும்.

புராடெக்ட் கோட்: PURSE NHSP 004
விலை: ரூ.1190

பீட் ஹேண்ட்பேக்

முத்து அல்லது பாசி வேலைப்பாடுகள் கொண்ட உடைகளுடன் கலருக்கு ஏற்ப இந்த பீட் கைப்பிடி ஹேண்ட்பேக்குகள் பயன்படுத்தலாம்.

புராடெக்ட் கோட்: BEAD HANDLE NHSB 009
விலை: ரூ.1290

மஞ்சள் நிற கிளட்ச் பர்ஸ்

எந்த புடவைக்கும் சரியான மேட்ச் எனில் அவை கிளட்ச் வகை பர்ஸ்கள்தான். கையில் சிம்பிளாக அதே சமயம் ஸ்டைலான தோற்றம் கொடுப்பதில் கிளட்ச் பர்ஸ்கள் புடவைகளுக்கு சிறப்பான மேட்ச்.

புராடெக்ட் கோட்: PURSE NHSP 029
விலை: ரூ.1090

கேன் கைப்பிடி பேக்குகள்

மரத்தால் ஆன கேன்களின் கைப்பிடி வகை பைகள். இவைகள் பெரும்பாலும் பேக்கு பெரிதாகவும், கைப்பிடி சின்னதாக இருப்பதால் பேக்கின் டிசைன்களும், கைப்பிடிகளும் ஹைலைட்டாக இருக்கும். எனவே சரியான புடவை, உடைகளுக்கு மேட்சிங்கான கலரில் இந்த பேக்குகள் தேர்வு இருக்க வேண்டும். குறைந்தது 1200 துவங்கி அதன் டிசைனுக்கு ஏற்ப விலை மாறுபடும்.

நெஹாஸ் ஹேண்ட்பேக்ஸ் குறைந்தது ரூ.1000 துவங்கி அதிகபட்சமாக ரூ.2000 வரை விற்பனைக்கு உள்ளன. அத்தனையும் சில்க் வெரைட்டிகள். திருநெல்வேலி மற்றும் கொடைக்கானலில் நேரிலும் மற்ற நகரத்து மக்கள் ஆன்லைனில் சில்க் ஹேண்ட்பேக்குகள் வாங்கலாம்.

ஷாலினி நியூட்டன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்