SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோழி சாய்ஸ்

2019-09-17@ 14:40:14

நன்றி குங்குமம் தோழி

கல்யாண ஸ்பெஷல்


ஆடி போய் ஆவணி வந்தாலே கல்யாண சீசன்தான். கல்யாணம் என்றாலே நகைகள்தான் முதலிடம் பெறும். இதோ இந்த கல்யாண சீசனில் என்னவெல்லாம் புது கலெக்‌ஷன் வந்திருக்கின்றன என சென்னை உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்(VBJ), அண்ணா சாலையில் களமிறங்கி விற்பனையாளரிடம் காட்டச் செய்தோம். வைரம், மாணிக்கம், தங்கம் என வரிசையாக அடுக்கினர். அதில் நம்மைக் கவர்ந்த சில டிரெண்டி
நகைகள் தோழி சாய்சில்.

மாங்கா ஹாரம் செட்

கல்யாண பெண்ணின் லெஹெங்கா அல்லது சிம்பிள் சேலையுடன் அடுத்தடுத்து உறவினர்கள், நண்பர்கள் விருந்துகளில் கலந்துகொள்ள ஏதுவாக மாங்கா ஆரம் நெக்லெஸ், மேட்சிங்காக காதணி. நெக்லெஸ் எடை: 230.130 கிராம் காதணி எடை: 60.370 கிராம்

ரூபி நெக்லெஸ் காதணி செட்  

மணப்பெண் தங்கை அழகான தாவணி அல்லது லெஹெங்கா சோலியுடன் இதை மேட்ச் செய்தால் பார்க்க பளிச் லுக் கொடுக்கும் வகை இந்த ரூபி செட்.நெக்லெஸ் எடை: 73.030 கிராம்
காதணி எடை : 38.790 கிராம்

அரும்பு வைர நெக்லெஸ் செட்

நெக்லெஸ் எடை: 2.790 கிராம்
காதணி எடை: 24.710 கிராம்

ஆன்டிக் மயில் நெக்லெஸ் செட்

ஆன்டிக் மயில் நெக்லெஸ் செட்... அதீத நகை போட்ட லுக் வேண்டாம், சிம்பிள் லுக் வேண்டும் என விரும்பும் டிரெண்டி பெண்களின் சாய்ஸ். டிசைனர் புடவைகள், காட்டன் புடவைகளுடன் மேட்ச் செய்யலாம்.
நெக்லெஸ் எடை: 68.710 கிராம்
காதணி எடை: 23.560 கிராம்

முத்து டாலர் வைர நெக்லெஸ் செட்

மாடர்ன் கவுன், பார்ட்டி உடைகள், மாலை டீ விருந்து இதற்கெல்லாம் நகைகள் இல்லையா என்றால் அடுக்கினார் வைரத்தில் சிம்பிள் ஆனால், ராயல் ரேஞ்ச் நெக்லெஸ்களை. மாடர்னாகவும், அதே சமயம் காண்போரை சற்றே ஈர்க்கும் ரகமாகவும் மின்னின இரண்டு சோக்கர் வைர நெக்லெஸ்கள்.
நெக்லெஸ் எடை: 24.093 கிராம்
காதணி  எடை: 9.290 கிராம்

ஆன்டிக் நெக்லெஸ் காதணி செட்

லெஹெங்கா, அனார்கலி சல்வார், சோலி, தாவணி என டீன் பெண்களின் சாய்ஸாக ஆன்டிக் நெக்லெஸ் காதணி செட். பார்க்க குந்தன் ஃபேன்சி நகை போன்ற லுக் கொடுப்பதால் எந்த விழாவுக்கும் அணியலாம்.
நெக்லெஸ் எடை: 83.930 கிராம்
காதணி எடை: 10.610 கிராம்

- ஷாலினி நியூட்டன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்