SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோழி சாய்ஸ்

2019-08-29@ 10:58:50

நன்றி குங்குமம் தோழி

காஞ்சிப்பட்டு

எத்தனைக் காலங்கள் கடந்தாலும் இதன் அழகே தனிதான். எவ்வளவு ஃபேஷன் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், எத்தனை மாடர்ன் யுகங்கள் கடந்தாலும் காஞ்சிப்பட்டிற்கு மட்டும் இருக்கும் அழகும் அம்சமும் வேறு எந்த உடைக்கும் இல்லை என்றே சொல்லலாம். அதிலும் ரூ.2000 என்றாலும் கூட ஒரு குர்தா, சல்வார் என யோசிக்கும் இந்தியக் குடும்பங்கள் ரூ.20000 என்றாலும் யோசிக்காமல் வாங்கும் தரமும், அந்தஸ்தும் காஞ்சிபுரம் பட்டிற்கு மட்டுமே. இதன் காரணமாகவே இந்திய அரசு காஞ்சிப் பட்டை புவியியல் குறியீடு என அறிவித்திருக்கிறது.

இதோ சுந்தரி சில்க்ஸில் ஆடி வரவாக இளம் பெண்களைக் கவரக்கூடிய வகையில் சில வெரைட்டியான காஞ்சிபுரம் சில்க்ஸ் பட்டுகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதாவது  பட்டு தங்க நிறம் அதிகம் தெரியாமல் ராயல் லுக் கொடுக்கும் பட்டுகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதீத ஜரிகையை இப்போதைய பெண்கள் தங்கள் திருமணத்தில் மட்டுமே கட்டுகிறார்கள். பெரும்பாலும் எப்போதுமான பட்டுத் தேர்வு ஜரிகை குறைந்த கேஷுவல் பட்டுகள்தான். ரூ.7000 துவங்கி அதிகமாக ரூ.29,000 வரை சுந்தரி சில்க்ஸில் விற்பனைக்கு உள்ளன.

மதுரம் மற்றும் நலினா பட்டுகள்

பிரசாந்தி டிரெடிஷன் ஃபார் ஜெனரேஷன் அறிமுகம் செய்திருக்கும் பட்டு வகைகள். பெரும்பாலும் கருப்பு நிறத்தில் உடைகளே வாங்க மாட்டோம் என்னும் மனநிலை மாறி இப்போது பட்டுப் புடவைகளே வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள் இக்கால பெண்கள். அவர்களை மனதில் வைத்தே டிரெண்டி ரகமாக கருப்பு நிறம் அதனுடன் கலந்த வெரைட்டி கலர்கள் சகிதமாக புடவைகள் களம் இறங்கியுள்ளன. அதே போல் உடல் முழுக்க கட்டம் போட்ட பட்டுப் புடவைகளுக்கு அப்போதும் இப்போதும் மவுசு அதிகம்தான்.

இந்த கட்டம் டிசைன்கள் எந்தப் பெண்ணுக்கும் எடுப்பான அழகைக் கொடுக்கும். சாதாரண காட்டன் வெரைட்டிகளிலேயே கட்டங்கள் போட்ட டிசைன் ஆசையைத் தூண்டும்... பட்டுப் புடவைகளில் கேட்க வெண்டுமா? நகைகள் மட்டும் டிரெடிஷனல் டெம்பிள் கலெக்‌ஷன் நகைகள் பயன்படுத்தினால் சிலை போன்ற அழகுக் கிடைக்கும். இவைகள் முறையே மதுரம் மற்றும் நலினா பட்டு டிசைன்களாக பிரசாந்தி அறிமுகம் செய்துள்ளது.

குட்டிகளின் பட்டு

நம் வீட்டு சுட்டிகளுக்கு அசத்தல் ரகமான டிரெண்டி பட்டுப் பாவாடை, சட்டை ரகங்கள். அதிலும் ரதி சில்க்ஸ், பட்டுப்பாவாடை சட்டைகளில் எம்பிராய்டரி கலந்த கண்ணாடி பொருத்தப்பட்ட டிசைன்களாக களம் இறக்கியுள்ளனர். மேலும் குட்டிகளுக்கும் கியூட் சேலைகள், லெஹெங்காக்கள் என கண்கவர் நிறங்களில், வியக்க வைக்கும் டிசைன்களில் இந்த ஆடிக்கு குழந்தைகளை மையமாகக் கொண்டு பல வெரைட்டிகளை அடுக்கி வைத்துள்ளனர்.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு மென்மையான பட்டு துணிகளின் பாவாடை, சட்டைகள் என அணிவிப்பதே நல்லது. அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்காது. அதைக் கருத்தில் கொண்டே சாஃப்ட் சில்க்கில் உடைகளை அதிகம் கொண்டு வந்திருக்கிறார்கள். குழந்தைகளுக்காக இவை அனைத்தும் ரெடிமேடிலும் கிடைக்கிறது.

கைத்தறி பட்டுகள்

கைகளால் நெய்யப்படும் பட்டுகளுக்கு நம் ஊர் பெண்கள் எப்போதும் டிக் அடிப்பார்கள். காரணம் அதன் தரம் மற்றும் உழைக்கும் காலம் அதிகம். இதை மனதில் வைத்தே நாஞ்சில் கைத்தறிப்பட்டு இரண்டு வார்ப்பு கைத்தறி பட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. சிம்பிள் டிசைன், சில்வர் பட்டு நூல் சகிதமாக இந்தப் புடவைகள் திருமணம் போன்ற விழாக்களுக்கு சிறந்த தேர்வு.

உடன் கவரிங் அல்லது கள் நகைகள் மேட்ச் செய்தால் கூடுதல் அழகு கிடைக்கும். சில வகைகளில் சில எதிர்மறை வண்ணங்களையும் கலந்து எந்த பிளவுஸுடனும் இணைத்துக் கட்டிக்கொள்ளும் வகைகளாக நாஞ்சில் கைத்தறிப்பட்டு அறிமுகம் செய்திருக்கும் பட்டுகள் இவை.

ஷாலினி நியூட்டன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sabarimalai-3

  பக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்!: புகைப்படங்கள்

 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்