SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரும எழிலுக்கு பாதாம்

2019-08-22@ 12:01:47

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் நாற்பது வயதை கடந்தவுடன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறையும். இதனால் சருமம் வறண்டு, தோலில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். சரும எழிலை பாதுகாக்க பாதாம் சிறந்தது.

* தினமும் 4 பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து, ஒரு கப் பாலில் கலந்து சாப்பிட மேனி சருமம் மிருதுவாக மாறும்.

* கை, கால்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு, வறட்சியாகும் போது, தலா 25 கிராம் கசகசா, வெள்ளரி விதையுடன் 10 கிராம் பாதாம் பருப்பைச் சேர்த்து அரைத்து விழுதினை 1/4 கிராம் நல்லெண்ணையில் காய்ச்சி, உடம்பில் தினமும் தடவி வர, இழந்த பொலிவினை மீண்டும் பெறலாம்.

* வைட்டமின் ஈ குறைபாட்டினால் கண்களுக்கு கீழ் கருமை படரலாம். எண்ணெய் பசை குறைந்து கண் இமைகளுக்கு நடுவில் நிறைய சுருக்கங்கள் தோன்றலாம். இதை நீக்க பாதாம் ஆயிலுடன், கசகசாவை அரைத்து சேர்த்து தடவி வர நாளடைவில் கருமை மறையும்.

* தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் சம அளவு எடுத்து குளிக்கும் முன் உடலில் பூசி, பின் குளிக்க சருமம் ஃப்ரெஷ்ஷாகவும் மென்மையாகவும் இருக்கும்.

* பாதாம் பாலை அடிக்கடி குடித்து வர சரும வறட்சி நீங்கி, தோல் மினுமினுப்பாக இருக்கும்.

* பாதாம் ஆயிலை பஞ்சில் தொட்டு கேசத்தில் தடவி, ஊறவிட்டு பின் குளிக்க, பொடுகு நீங்குவதோடு, முடி கொட்டுவது கட்டுப்படும்.

* பாதாம் பருப்பு கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால் இதய நோயிலிருந்து நம்மை பாதுகாப்பதோடு மேனியும் எழிலாகும்.
 
- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

பச்சைப் பட்டாணி மகத்துவம்

காய்கறிகளிலேயே பச்சைப் பட்டாணியில் தான் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது. அதன் சிறப்பு என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

* நூறு கிராம் பச்சைப் பட்டாணியிலிருந்து 103 கலோரி வெப்பமும், உலர்ந்த பட்டாணியிலிருந்து 365 கலோரி வெப்பமும் நம்முடைய உடலுக்குக் கிட்டுகின்றன.

* பச்சைப் பட்டாணியில் புரதச் சத்தும், மாவுச்  சத்தும் அதிகமாக உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எப்போதும் இளமையான தோற்றத்துடனும், ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கலாம்.

* பச்சைப் பட்டாணியைச் சமைத்து தான் சாப்பிட வேண்டும். இருதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலத்தைக் கொடுக்கக் கூடிய சக்தி அதற்கு உண்டு. அதைத் துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

* பச்சைப் பட்டாணியில் வைட்டமின்‘ சி’ இருப்பதால் உடல்வலி, தலைவலி போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. எலும்பு,
பற்கள் போன்றவை உறுதியாக இருக்க உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின்கள் உடலின் உட்புற உறுப்புகளை வலிமைப்படுத்தும். வாய் புண் ஏற்படாமல் பாதுகாக்கும்.

* நரம்புத்தளர்ச்சி, பசியின்மை, உடல் பலவீனம், தூக்கமின்மை ஏற்படாமல் தடுக்கும். தினமும் மற்ற காய்கறிகளுடன் கொஞ்சமாகப் பச்சைப் பட்டாணியையும் சமைத்துச் சாப்பிடலாம்.

- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்