SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2019-05-27@ 15:44:50

நன்றி குங்குமம் தோழி

*மழை நாட்களில் பொரித்த அப்பளம் சீக்கிரம் நமத்துவிடும். அப்பளம் பொரித்து சூடு ஆறியவுடன் ஒரு ஸ்டீல் டப்பாவில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் இரண்டு நாட்கள் கழித்து எடுத்தாலும் கரகரப்பாக இருக்கும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

*துவரம்பருப்பு - 250 கிராம், கறிவேப்பிலை - 50 கிராம், சுக்கு - 10 கிராம், உப்பு- தேவையான அளவு. கறிவேப்பிலையை நெய்யில் வறுக்கவும். துவரம்பருப்பு மற்றும் சுக்கினை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். பிறகு அனைத்தையும் மிக்சியில் நைசாக அரைக்கவும். இந்த பொடியை சூடாக சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர, கல்லீரலில் சேரும் கொழுப்பைக் குறைக்கும், பசியைத் தூண்டி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

*தேங்காய் சட்னி அரைக்கும்போது பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை எண்ணெயில் வதக்கி பிறகு அரைத்தால் சுவையாக இருக்கும்.
- நா.செண்பகா நாராயணன், பாளையங்கோட்டை.

*சாதம் அடிப்பிடிக்காமலிருக்க சாதம் செய்யும்போது பாத்திரத்தின் உள்பக்கத்தில் சிறிது எண்ணெய் தடவினால் போதும்.

* வாழைப்பூ ஆயும்போது உப்பைக் கையில் தடவிக்கொண்டால் கை பிசுபிசுப்பில்லாமல் இருக்கும்.
- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

*வாழைக்காய், கத்தரிக்காய், சேனைக்கிழங்கை மெல்லியதாய் நறுக்கி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோள மாவு அனைத்தையும் நீர் தெளித்துக் கலக்கி, பிறகு நறுக்கிய காய்களைக் கலவையில் போட்டுப் பிசறி எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான பக்கோடா ரெடி.
- இல.வள்ளிமயில், மதுரை.

*வெங்காய சாம்பார் காரமாகி விட்டதா? கவலை ஏன்? ஐந்தாறு சின்ன வெங்காயங்களை நல்லெண்ணெயில் லேசாக வதக்கி, 1 டீஸ்பூன் தேங்காய் துருவல் வைத்து அரைத்துவிட சாம்பாரில் உள்ள காரம் மறைந்து போய்விடும்.
* மோர் குழம்பு செய்யும்போது 4 சின்ன வெங்காயத்தை அரைத்து அதில் ேசர்த்தால் குழம்பு மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
* அரைமணியில் சமைக்கணுமா? தக்காளியையும், ஊறவைத்த துவரம்பருப்பு, புளிக்கரைசல், சீரகம், மிளகு, கறிவேப்பிலையை மிக்ஸியில் ஓட விட்டு நீர் சேர்த்து கொதித்ததும் நெய்யில் கடுகு, சீரகம் தாளியுங்கள். சுவையான சூப்பரான ரசம் தயார்.
- சுகன்யா தேவி, சென்னை.

*வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி உப்பு தூவி கலந்து 10 நிமிடம் கழித்துப் பார்த்தால் சிறிது நீர் விட்டிருக்கும். அதில் பயத்தம் மாவையும், சோள மாவையும் சிறிது கலந்து பிசைந்து பக்கோடா செய்தால் மொறு மொறு பக்கோடா ரெடி.
* மஞ்சள் கிழங்கு, குங்குமம் முதலியவை கெடாமலிருக்க காய்ந்த துளசி இலையை டப்பாவில் போட்டு வைத்தால் வண்டு, பூச்சிகள் வராது.
- நளினி சுந்தரராஜன், பள்ளிக்கரணை.

* வடகம் போடும் போது உளுந்து, சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றோடு பட்டை, மிளகாய்ப் பொடி சிறிது கலந்து பிடித்து வைத்தால் மணமும் சுவையும் அபாரமாக இருக்கும்.
* சூப் தயாரிக்கும் போது கார்ன் பிளேக்ஸ்க்கு பதில் இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி வெண்ணெயில் பொரித்துப் போட்டால்
சுவையாக இருக்கும்.
*சாம்பாரில் தக்காளியை நறுக்கி போடுவதை விட மிக்சியில் அரைத்துப் போட்டால் தனி ருசியாக தெரியும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* பஜ்ஜி செய்யும் போது கடலை மாவு, அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்தால் பஜ்ஜியின் சுவையே அலாதி.
* அடை மாவுடன் கார்ன் பிளேக்ைச பொடித்து சேர்த்து அடை சுட்டால் மிருதுவாகவும்
சுவையாகவும் இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
 
* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் செய்யும் போது கொஞ்சம் பொட்டுக்கடலையை வறுத்துக் கொட்டினால் சுவையாக இருக்கும்.                   
- க.நாகமுத்து, திண்டுக்கல்.

* பால் உறைக்கு ஊற்றும் போது வெதுவெதுப்பாக இருந்தால் தான் தயிர் நன்கு உறையும். சூடாகவோ அல்லது ஆறியதாகவோ இருந்தால் தயிர் சரியாக உறையாது.
* டால்டா, நெய் போன்றவை கெட்டியாக இருக்கும் போது பாத்திரத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருக்கும். ஸ்பூனை சூடாக்கிக் கொண்டு
எடுத்தால் சுலபமாக இருக்கும்.
- ஆர்.பூஜா, சென்னை.

* இளம் முள்ளங்கியை இடித்து பிழிந்த ரசம் ஒரு அவுன்ஸ் முதல் இரண்டு அவுன்ஸ் வரையில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரிலுள்ள அல்புமின் என்ற மாவுச் சத்து குறைந்து விடும்!
- ச.லெட்சுமி, செங்கோட்டை.

* உளுத்தம் பருப்பை வடைக்கு அரைக்கும் போது பச்சரிசியையும் கொஞ்சம் சேர்த்து அரைத்தால் வடை மொறு மொறுவென்று இருக்கும். அதே ேபால் வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமானால் சிறிது பச்சரிசி மாவினை சேர்த்தால் கெட்டியாகிவிடும்.
- எஸ்.சுமதி, கரூர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்