SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்குன்னு புடவை கட்டலாம் !!

2019-01-07@ 16:18:34

நன்றி குங்குமம் தோழி

சல்வார், ஜீன், ஸ்கர்ட் என்றால் யோசிக்காமல் டிக் அடிக்கும் இக்கால பெண்கள் புடவை என்றாலே ஏதோ மலையைப  புரட்டச் சொன்ன ரியாக் ஷன்களை வீசுகிறார்கள். பிளவுஸ், இன்ஸ்கர்ட் என ஏகப்பட்ட வஸ்துகள் இந்த ஒரு புடவையை கச்சிதமாக கட்ட.  அதிலும் இந்த இன்ஸ்கர்ட் சரியான அளவில் சரியான உயரத்தில் வேண்டுமானால் ‘பாகுபலி‘ அளவிற்கு போரே நடத்தியாக வேண்டும்.  அதற்கு தீர்வாகத்தான் மார்க்கெட்டில் களமிறங்கியுள்ளன சேலை ஷேப்வேர்கள். உடலை ஒட்டிய,  அதேசமயம் இடைப்பகுதி முதல்  கால்கள் வரை அழகிய வடிவத்துடன் காட்டும் இந்த ஷேப்வேர்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும்? எப்படி அணிய வேண்டும்? ஃபேஷன்  டிசைனர் & ஸ்டைலிஸ்ட் ரேகா ராகுல் விளக்குகிறார்.

‘‘புடவைக்கு இந்த ஷேப்வேர் பயன்படுதோ இல்லையோ ஆனால் நிறைய செலிபிரிட்டி பெண்கள் இதை பார்ட்டி கவுன்கள், ஃபிஷ்டெயில்  ஸ்கர்ட் மற்றும் கவுன்களுக்கு இன்னரா பயன்படுத்துறாங்க. இடைப்பகுதி ஆரம்பிச்சு , கணுக்கால் வரை அழகான ஷேப் கொடுக்கறது  மட்டும் இல்லாம உடலை ஒட்டி எந்தவித இடையூறும் இல்லாம போட்டுக்கலாம். இன்ஸ்கர்ட்ல இப்பவும் நிறைய பிரச்னைகள் இருக்கு.  பருமனான பெண்களுக்கு கொஞ்சம் அளவு பெரிசா வாங்கினா அதுல உயரமும் அதிகமா இருக்கும். ஒல்லியான பெண்கள் அளவு குறைவா  வாங்கினா உயரம் ரொம்பக் குறைவாகிடுது. சரி உயரத்துக்காக அளவு அதிகமா வாங்கினா சுருக்க சுருக்கமா இடைப்பகுதியில இன்ஸ்கர்ட்  பெரிசா நிக்கும். அதுல புடவைக் கட்டினா இன்னும் இடுப்பை பெரிதா காமிச்சு ஒரு ஷேப்பே இல்லாம சீராவும் இல்லாத லுக் கொடுக்கும்.  சரி அளவு சின்னதா வாங்கலாம்னு யோசிச்சா கால்களை தடுக்கி விடுற அளவுக்கு இறுக்கமா புடிச்சிக்கும். இதுக்கெல்லாம் தீர்வாதான்  இந்த ஷேப்வேர் வந்திருக்கு.

மார்க்கெட்டுக்கு புதுசு என்கிறதால சில பெண்களுக்கு இந்த ஷேப்வேர்கள் மேல பெரிதா ஈடுபாடு இல்லை. பனியன் மாதிரியான எலாஸ்டிக்  மெட்டீரியல், இதுல புடவையை செருகினா எங்கே சுருண்டு சங்கடமாகிடுமோங்கற கேள்வி வேற. இதுக்கெல்லாம் பயமோ அல்லது  தயக்கமோ தேவையில்லை.  நல்ல பிராண்டட் கடைகள்ல போயி போட்டுப் பார்த்து வாங்குங்க. சில ஷேப்வேர்கள்ல இடுப்புல கட்டிக்கிற  மாதிரி நாடாக்கள் கூட வரும். இல்லைன்னா நாமளே லெக்கிங்ஸ்களுக்கு நாடா கோர்க்குற மாதிரி கோர்த்தும் பயன்படுத்தலாம். எடுத்த  உடனே ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி இந்த ஷேப்வேர் வாங்காதீங்க. உங்க உடல் அளவுக்கான சரியான சைஸ் தெரிஞ்சதுக்கு அப்பறம் கூட  நீங்க ஆன்லைன்ல வாங்கலாம்.

அடுத்து நல்ல பிராண்டட்களை பற்றிய குறிப்பு படிச்ச பிறகு வாங்குங்க. நான் என்னுடைய மாடல்கள், மணப்பெண்களுக்கே இப்போ  ஷேப்வேர் தான் போட்டுக்க சொல்லி ஆலோசனைக் கொடுக்கறேன். இந்த ஷேப் வேர் அப்படியே உடல் கூட ஒட்டி இருக்கறதால  புடவையும் உடலுடைய வளைவுகள்ல அப்படியே பொருந்தி ரொம்ப அழகான ஷேப் கொடுக்கும். மேலும் சில நல்ல பிராண்டட்ல முட்டி  வரைக்கும் கொஞ்சம் இறுக்கி, முட்டியில இருந்து லூசா இறங்கும். மேலும் பருமனான பெண்களுக்காக டபுள் ஸ்லிட் , சிங்கிள் ஸ்லிட்  இப்படியும் சைட்ல கொடுத்து நடக்க சுலபமான வசதியும் இந்த ஷேப்வேர்கள்ல இருக்கும்.  

இதனால புடவையும் இடைப்பகுதியில பருத்து முட்டி வரை குறுகி, அப்படியே விரிஞ்சு புரபசனல் தோற்றம் கொடுக்கும். அதிலும் பட்டு,  காட்டன், லினென் மாதிரியான கனமான புடவைகளுக்கு இன்ஸ்கர்ட் போடும் போது ஹெவியா இருக்கும். ஆனால் இந்த ஷேப்வேர்கள்ல  அந்த பிரச்னை இல்லை. சினா கிரேப், இந்தியன் காட்டன் , சாட்டின் இப்படியான துணிகள்ல இந்த ஷேப்வேர்கள் வருது. வெறும் ஒன்றரை  மீட்டர் துணி இருந்தாலே இந்த ஷேப்வேர்களை டிசைன் செய்துக்கலாம். முன்னாடி ரூ.1500 ஆரம்பிச்சு ரூ.3000 வரை விற்பனை  செய்தாங்க. இப்போ விலை ரூ. 400 ஆரம்பிச்சு தரம் பொருத்து ரூ.1000 வரை விற்பனை ஆகுது. இன்ஸ்கர்ட் அளவுக்கு தேவை  அதிகரிக்கும் போது இதனுடைய விலை இன்னும் குறையும். மேலும் லெக்கிங்ஸ் மாதிரி நிறைய கம்பெனிகள் களத்துல இறங்கினாலும்  விலை குறையும்.

-ஷாலினி நியூட்டன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-09-2019

  15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-09-2019

  14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • indo_fire_poison1

  இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

 • TrainDerailCongo50

  காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

 • unavu_mudhalvar1

  மதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்