SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழைய பட்டுப் புடவையில் ரீ ஸ்டைலிங்

2018-12-27@ 16:55:53

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு, வளைகாப்பு என விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை ஆயிரக் கணக்கில் பணத்தை  செலவழித்து எடுத்து, ஒருசில மணி நேரங்கள் மட்டுமே பயன்படுத்திவிட்டு, அப்படியே மடித்து அலமாரிகளில் நிறைத்து வைத்திருப்பார்கள்.  குழந்தைகள் பிறந்த பிறகு பெண்கள் பெரும்பாலும் பட்டுப்புடவைகளை உடுத்துவதில்லை. அதுவும் வேலைக்குச் செல்லும் பெண்களாக  இருந்தால் பட்டுப் புடவைகள் பயன்பாட்டில் இல்லாமல் அப்படியே  இருக்கும். புடவைகள் பார்க்க புதுசாகவும் இருக்கும், பயன்படுத்த  முடியாத நிலையில் என்ன செய்வதென்று யோசிப்பார்கள். அதே நேரம் தங்கள் பட்டுப் புடவைகளை இழக்கவும் பெண்களுக்கு மனம் வராது.

திருமணம் மற்றும் நிச்சயதார்த்தப் புடவைகளை என்ன செய்யலாம் எனக் கேட்பவர்களுக்காவே, அம்மா பொண்ணு இருவருக்குமான ‘மாம்  அண்ட் டாட்டர் கான்செப்ட்’  உடைகளை ஒரே பட்டுப்புடவையில், அம்மா-பொண்ணு இருவருக்கும் ஒரே மாதிரி, ஆனால் மிகவும்  வித்தியாசமாக வடிவமைத்து தருகிறார் ஃபேஷன் டிசைனர் ரம்யா சேகர்.அதாவது பழைய பட்டுப் புடவையை இப்போதைய டிரெண்டிற்கு  ஏற்ப மிகவும் புதிதாக வடிவமைத்து, அனார்கலி, லெகெங்கா, ஷார்ட் மற்றும் லாங் குர்தா, லாங் கவுன் போன்றவைகளாக மாற்றி  ரொம்பவே நவீனமாக்கித் தருகிறார். பட்டுச் சேலையில் இருக்கும் பள்ளு, பார்டர், பட்டுச் சேலைக்காக  தைக்கப்பட்ட ஜாக்கெட் என  எதையும் இவர் வீணடிப்பதில்லை. தனது டிசைனிங் அனுபவத்தால் அனைத்தையும் முழுதும் பயன்படுத்தி, புதியரக நவீன ஆடைகளை  அழகாக வடிவமைத்து, ரொம்பவே நம்மைப் பரவசப் படுத்துகிறார் இவர்.

பட்டுப்புடவைகளையும் இழக்காமல், அதை அப்படியே வேறுவடிவத்தில் மாற்றி பயன்படுத்தும்போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவே  இருக்கும். அதே நேரம் அம்மாவும் பெண்ணுமாக ஒரே மாதிரியான உடையில் நிகழ்ச்சியில் வலம் வந்தால், காண்போரின் கண்களெல்லாம்  உங்கள் மீதுதானே எனவும் சிரிக்கிறார் இவர்.சிலவகைப் புடவைகள் மிகவும் பழைய டிசைனாக இருந்தாலும் அதற்கென ஒரு  நம்பகத்தன்மை (authentic look) இருக்கும். அந்த மாதிரிப் புடவைகளையும் வீணடிக்காமல், அதில் ஒரு சில பேட்ச் வேலைகளைச் செய்து,   வண்ணங்களை வேறுபடுத்தி டிசைன் செய்து கொடுத்துவிடுவேன். ஒரே கலர் புடவையாக இருந்தால்  ஷாட் டாப், லாங்க ஸ்கெட்  அத்தோடு டார்க் கலர் துப்பட்டா என விருப்பத்திற்கு கான்ட்ராஸ்ட் செய்து அணியலாம்.

அனைத்து பட்டுச் சேலைகளையும் ஒரே மாதிரியாக வடிவமைக்கவும் முடியாது. சேலையின் டிசைன் மற்றும் வண்ணத்திற்கு ஏற்ப   உடைகளை வடிவமைப்பதில்தான் உள்ளது, அதன் அழகு வெளிப்படும் விதம். பள்ளுவில் இருப்பதை எல்லாம் வீணாக்காமல் எடுத்து  எங்காவது ஒரு இடத்தில் பொருத்தி, மிகவும் மேட்சிங்காக, அதே நேரம் கலை உணர்வோடு தயாரித்துக் கொடுத்து விடுவேன். நமது கிரியேட்டிவிட்டி என்பது தயாரிப்பில் மட்டும் இல்லை, இந்த உடையினை அணிபவர்களுக்கு அது பொருத்தமாக இருக்குமா  என்பதிலும் சேர்த்தே இருக்கிறது. இந்த உடையை அணியப் போகிறவருக்கு இது எந்த அளவிற்குப் பொருந்தும் என்பதிலும் மிகவும் கவனம்  செலுத்துவேன்.

சிலவகை பட்டு சேலையினை மாற்றி வடிவமைக்கும்போது, உடைக்கு ஏற்ப சேலையின் தலைப்பில், ஓவர் கோட் மாதிரி செய்து  உடையோடு இணைப்பேன். அதை பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அது பார்ப்பதற்கு இன்னும் கொஞ்சம் ரிச்சான லுக்கைத் தருகிறது. பத்து பதினைந்து வருடத்திற்கு முன்புவரை ஃபேஷனுக்கான சென்ஸ் என்பது மிகமிகக் கம்மி. ஆனால் இப்போது நிலைமை வேறு.  ஃபேஷன் துறை ரொம்பவே வளர்ச்சி கண்டிருக்கிறது. இங்கே பெண்கள் பெரிதும் விரும்பி உடுத்தும் சேலைக்கு என ஒரு தனி அழகு  எப்போதும் இருக்கிறது. அதை இன்னும் எப்படி எல்லாம் மாற்றி கூடுதல் அழகாக்கலாம் என்பதே இதில் மேலும் நம்மை அழகாய்  வெளிப்படுத்தும் என முடித்தார்.

டிப்ஸ்

கான்சப்ட் திருமணங்கள் உடையலங்காரத்தில் கலை கட்டத் தொடங்கி இருக்கும் வேளையில், உங்கள் இல்லத்தின் முக்கியமான  திருமணத்திற்கு புதிதாக உடை எடுக்கும் எண்ணம் இருக்கிறதா…? இதோ அதற்கான டிப்ஸையும் ரம்யாவே தருகிறார்.ரொம்ப சிம்பிள் 2500  ரூபாய்க்கு அபூர்வா சில்க் அழகழகாய் கடைகளில் பலவிதமான டிசைன்களில் ஏராளமாய் கிடைக்கும். அதில் ஒன்றை எடுத்துக் கொடுத்து  விட்டால் போதும். தனியாக பார்டர், பிளையின் மெட்டீரியல் என மேட்சிங்கிற்காக தேடி அலையாமல் புடவையில் உள்ளவற்றை  தனித்தனியாக எடுத்து, விருப்பத்திற்கு மாற்றி அமைத்து அம்மா-பொண்ணு இருவருக்குமான கான்சப்ட் உடையை ஒரே மாதிரியாக மிகவும்  அழகாகவே வடிவமைக்கலாம். பார்க்கவும் ரிச் லுக்கைத் தரும். உடைக்காக ஆகும் செலவும் மிகவும் குறைவு.

ரம்யா சேகர் - ஃபேஷன் டிசைனர், டிசைன் ஸ்டுடியோ.

அடிப்படையில் நான் சாஃப்ட்வேர் இஞ்சினியர். சிஸ்டம் இஞ்சினியராகப் பணியில் இருந்தேன். எனக்கான விருப்பம்(passion) இந்த ஃபேஷன்  டிசைனிங். பொறியியல் படிப்பை முடித்ததும், என் விருப்பத்திற்காக ஃபேஷன் டிசைனிங்கில் ஓராண்டு டிப்ளமோ பயின்றேன். டிசைனிங்  வாய்ப்பு எதுவாக இருந்தாலும் ஆர்வமாக செய்யத் தொடங்கினேன். இந்த ஃபீல்டுக்கு வந்து 11 வருடம் கடந்தாச்சு. எனக்குன்னு தனியாக  ஒரு யூனிட் வைத்திருக்கிறேன். என்னோடு இணைந்து எம்ராய்டர்ஸ், டெய்லர்ஸ் எல்லாம் என் யூனிட்டில் இருக்காங்க.2006ல் மிஸ்  சென்னை வாய்ப்பு வந்தது. ஒரு மாடலுக்கான உடைகளை நானே டிசைன் செய்தேன். ஹோட்டல் லீ மெரீடியன்ல நடந்த சென்னை  இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக்(CIFW), ஃபேஷன் மீட்ல ஆண்களின் உடைகளை டிசைன் செய்தேன்.

ஃபேஷன் ஷோ, மகேந்திரா, சத்தியம், அப்பல்லோ மருத்துவமனை என கார்ப்பரேட் ஷோக்களுக்கான உடைகளை தொடர்ந்து டிசைன்  செய்து கொடுத்திருக்கிறேன்.ஆர்ட் ஃபிலிம்களுக்கான காஸ்டியூம் டிசைன் செய்யும் வாய்ப்புகளும் எனக்குக் கிடைத்தது. அடுத்த கட்டமாக  தியேட்டர் ஒர்க் கான்சப்ட் டிசைன் செய்தேன். ஒரு சில படங்களிலும் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி இருக்கிறேன். இயக்குநர்  சசிக்குமார் சார் இயக்கத்தில் அடுத்த படத்திற்குக் கமிட்டாகி இருக்கேன்.6 மற்றும் 7ம் நூற்றாண்டில் நிகழும் தேவதாசி கதையினைச்  சொல்லும், ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்குத் தயாராகும், பீரியட் ஃபிலிம் ஒன்றில் ஃபேஷன் டிசைனராக கமிட்டாகி இருக்கேன். பாண்டிய நாடு,  சோழநாடு இவையெல்லாம் அந்தக் கதையில் வருவதால் அதற்கான உடை மற்றும் அணிகலன்களுக்கான ஆராய்ச்சியிலும் இறங்கி  இருக்கிறேன்.

தோழி அந்தரங்கம்

ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்னைகள். வெளியில் தெரிவது கொஞ்சம். உள்ளுக்குள் வைத்து மருகுவது அதிகம். எல்லாவற்றையும்  எல்லோருடனும் பகிர்ந்துக் கொள்ள முடியாது. அதிலும் ‘அந்தரங்கம்’ என்றால்... கேட்கவே வேண்டாம். சொன்னால் ‘நம்மை பற்றி என்ன  நினைப்பார்கள்’ என்ற தயக்கம் ஒருபுறம். மற்றவர்களிடம் சொல்லிவிடுவார்களோ என்ற பயம் மறுபக்கம். இந்நிலை இனி வேண்டாம்.  ‘அந்தரங்க’ பிரச்னையை நினைத்து மருகி மருகி உங்கள் வாழ்க்கையை தொலைக்க வேண்டாம். நம்பிக்கைக்குரிய தோழியாக, உங்கள் நலம்  விரும்பும் உயிராக, பிரச்னையிலிருந்து உங்களை விடுவிக்கும் நட்பாக இதோ ‘குங்குமம் தோழி’ உங்கள் இரு கரங்களையும் அன்புடன்  பற்றிக் கொள்கிறாள்.அச்சம் வேண்டாம். நிச்சயம் இவள் ரகசியம் காப்பாள். ஆறுதலாக இருப்பாள். நம்பிக்கை அளிப்பாள். காப்பாற்றி கரை  சேர்ப்பாள்.பாலியல் பிரச்னைகள் தொடங்கி குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் வரை அனைத்துக் குழப்பங்களில் இருந்தும் உங்களை  விடுவிக்க காத்திருக்கிறாள்.

தயக்கமில்லாமல் உங்கள் கேள்விகளை -

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
எண்: 229, கச்சேரி சாலை
மயிலாப்பூர்,
சென்னை - 600 004

என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என அவசியமில்லை. தேவை  பிரச்னைக்கு தீர்வுத் தானே தவிர அடையாளங்கள் இல்லையே...கரம் கோர்த்து தலை வருட உங்களுக்காக தோழி காத்திருக்கிறாள்!

-மகேஸ்வரி
படங்கள்: ஏ.டி. தமிழ்வாணன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்