SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிப்ஸ்... டிப்ஸ்...

2018-05-28@ 15:22:55

நன்றி குங்குமம் தோழி

டபீள் பீன்ஸை உப்பு சேர்த்து வேகவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த டபீள் பீன்ஸை பஜ்ஜி மாவு, போண்டா  மாவு மற்றும் பக்கோடா மாவில் கலந்து பக்கோடாவாக செய்யலாம். மாறுதலான சுவையுடன் நன்றாக இருக்கும்.

பலாப்பழ விதையை நீளவாக்கில் சிறிதாக நறுக்கி, காய்ந்த இறால், பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், புளி சேர்த்து வேகவைத்து கூட்டு  தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து சேர்க்க சுவையாக இருக்கும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

பூண்டுடன் கொஞ்சம் கேழ்வரகை சேர்த்து வைத்தால் பூண்டு நீண்ட நாட்கள் வரை புழுக்காது.
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

மோர் மிளகாயை வறுக்கும் போது கொஞ்சம் வெந்தயத்தை ஊறவைத்து மோருடன் கலந்து மிளகாயை வறுத்தால் காரம் குறைந்து ருசியாகவும்,  வாசனையாகவும் இருக்கும்.

ஒரு கப் உளுத்தம்பருப்புக்கு 2½ கப் பச்சரிசியை கருகாமல் வறுத்து ஊறவைத்து பிறகு அரைக்க வேண்டும். இட்லி பஞ்சு போல இருக்கும்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

அல்வா மிக்சுடன் ஜவ்வரிசியை கொஞ்சம் ஊறவைத்து அரைத்து கலந்தால் அல்வா நிறையவும், கண்ணாடி போல் மின்னவும் செய்யும்.

ரவா அல்லது சேமியா கிச்சடி எதுவாக இருந்தாலும் சரி கிளறி இறக்கும் முன் மிகப் பொடியாக அரிந்த தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி  1 நிமிடம் மூடி பரிமாற கிச்சடி நிறம் மாறாமலும் தக்காளி சற்றே மெத்தென்றும் இருக்கும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

தோசைக்கு ஊறவைக்கும் போது அரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றுடன் அவல், சிறிதளவு கொள்ளு, ஒரு கைப்பிடி சோயா இவற்றையும் சேர்த்து  ஊறவைத்து அரைத்து தோசை வார்த்தால் சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
- வத்சலா சதாசிவன், சென்னை-64.

மைதா பர்பி, தேங்காய் பர்பி போன்றவற்றை செய்யும் போது பதம் வந்து தாம்பாளத்தில் கொட்டி துண்டுகள் போடும் முன் டூட்டி ஃப்ரூட்டியைத்  தூவினால் ரத்ன கல் பதித்தது போல் கண்ணைக் கவரும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.

தேனீர் செய்யும் பொழுது இஞ்சி அல்லது சுக்கு அதனுடன் 2 ஏலக்காய், 2 கிராம்பு, 1 பட்டை, தேவையான அளவு பனை வெல்லம் இவைகளை  போட்டு செய்தால் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு சர்க்கரையின் அளவு மெல்ல மெல்ல குறையும்.
- வீ.சுமதி ராகவன், வேலூர்.

தேவையான அளவு சப்போட்டா பழங்களை எடுத்து தோல் விதை நீக்கி, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல், தேவையான அளவு வெல்லம்,  ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைத்து வடிகட்டி ஜூஸாக கொடுக்க வித்தியாசமான சுவையில் இருக்கும்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

குழிப்பணியாரம் செய்ய வெந்தயம், அரிசி, உளுந்து  இவற்றுடன் ஜவ்வரிசியையும் சேர்த்து ஊறவைத்து அரைத்து பணியாரம் செய்தால் மிருதுவாக  இருக்கும்.
- கவிதா சரவணன், திருச்சி.

குளிர்ந்த நீரில் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து அதில் உலர்ந்த கறிகாய்களை ஒரு மணி நேரம் போட்டு வைத்தால் கறிகாய்கள் புதிது போல் ஆகி விடும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

புட்டு ஆவியிலிருந்து இறக்கி சூட்டிலேயே உதிர்த்து, வெல்லத்தூள் அல்லது சர்க்கரை, ஏலத்தூள் போட்டு, காய்ச்சிய ஆறிய பாலை தெளித்து,  காய்ச்சிய நெய் 2 டீஸ்பூன் விட்டுக் கிளறி தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி வேறு பாத்திரத்திற்கு மாற்றினால் வறண்டு போகாமல் இருக்கும்.
- சு.கெளரிபாய், பொன்னேரி.

ரவா இட்லி, சேமியா இட்லி மிக்ஸ் வாங்கி மீந்து விட்டால் அதனுடன் கொஞ்சம் சோள மாவு, அரிசி மாவு, வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை,  கொத்தமல்லி கலந்து போண்டா பதத்தில் உருட்டி பொரித்து எடுக்க மொறுமொறு போண்டா ரெடி.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • carbomb28

  ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

 • molave28

  வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

 • biharele28

  கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்