SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நயன்தாரா மாதிரி கெத்து காட்டலாம்!

2018-05-21@ 14:54:17

சிம்பிள். ஆனால், கெத்து லுக் என பெண்களின் ஃபேஷன் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாராவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் அவருடைய கலர்ஃபுல் லினென் சேலைகள்தான்.

பெரும்பாலும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஸ்டைலாகக் கட்டிக்கொண்டு வந்து ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் மயக்கி வருகிறார். அப்படி என்ன ஸ்பெஷல் இந்த லினென் சேலைகளில்? லினென், நற்சணல் செடியிலிருந்து கிடைக்கும் ஒருவகை இயற்கையான துணி. வழக்கம்  போல் நாகரிகத்தின் மூதாதையர்களான எகிப்தியர்கள் பல வருடங்களுக்கு முன்பு புனித ஆடையாக மதச்சடங்கின் போது இதை அதிகம்  பயன்படுத்தியிருக்கிறார்கள். தவிர, மத குருமார்களின் உடைகளும் இந்த லினெனில்தான் இருக்கும்.

இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் சமீபகாலமாக லினென் தனக்கென தனி இடம் பிடித்து வருகிறது. அதன் ஒரு வகைதான் லினென் புடவைகள்.  இதை உடுத்தினால் எப்படியிருக்கும் என இங்கு காண்பித்திருப்பவர் வேறு யாருமல்ல, ‘நாதஸ்வரம்’, ‘குலதெய்வம்’ சீரியல் நாயகி ஸ்ரீதிகாதான். ரைட்.  என்ன ஸ்டைல், எப்படி கட்டலாம்? சொல்கிறார் டிசைனர் பிரியா. “லினென் கொஞ்சம் லைட் வெயிட் புடவை. எப்படி வேண்டுமானாலும் யார்  வேண்டுமானாலும் கட்டலாம்.

சிங்கிள் ப்ளீட் விட்டு, ப்ளவுஸ் டிசைன்ல கொஞ்சம் ஆர்வம் காட்டி, க்ளோஸ் நெக் கொடுத்தா ஹெச்.ஆர்., எம்.டி. தோற்றம் கிடைக்கும்! அதே லோ  நெக், ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் மேட்ச் செஞ்சா வயசு குறைச்சலா தெரியும்! இந்த லினென் புடவைகளோட சிறப்பே எந்த கலர் ப்ளவுஸுக்கும்  உடுத்தலாம் என்பதுதான். ஒல்லியான பெண்கள் சிங்கிள் ப்ளீட்; பருமனான பெண்கள் கொஞ்சம் மடிப்பு வைச்சு 3/4 நீள கை டிசைன்ல ப்ளவுஸை  மேட்ச் செய்துக்கலாம்.

முடிஞ்சவரை புடவைக்கும், ப்ளவுசுக்கும் சம்பந்தமே இல்லாம பார்த்துக்கறது நல்லது! லினெனைப் பொறுத்தவரை ஒல்லியான பெண்கள்  நயன்தாராவையும், பருமனான பெண்கள் வித்யா பாலனையும் பின்பற்றலாம். நாங்க இங்க லினென் சேலைல சில ஜர்தோஸி, ஆரி வேலைப்பாடுகள்  செஞ்சு  கிராண்ட் லுக் கொடுத்திருக்கோம். அதாவது நீல நிற சேலைக்கு சிவப்பு நிற ஜமிக்கி வேலைப்பாடு. ஜமிக்கி கலர்ல ப்ளவுஸ். அதே மாதிரி  பிங்க் நிற சேலைல டார்க் நீல நிற ஜமிக்கி வேலைப்பாடு செஞ்சு அதுக்கு மேட்ச்சா ப்ளவுஸ்.

ரூ.1500ல ஆரம்பிச்சு குவாலிட்டிய பொறுத்து இல்லைனா பட்டு சேர்த்து ரூ.25 ஆயிரம் வரை லினென் சேலைகள் கிடைக்குது...’’ என ப்ரியா முடிக்க,  எப்படிப்பட்ட நகைகள் அணியலாம் என பட்டியலிட்டார் ‘ஃபைன் ஷைன் ஜுவல்லர்ஸ்’ அனில் கோத்தாரி. “லினென் பெரும்பாலும் ப்ரைட்  கலர்கள்லதான் வரும். ஸோ, ஃபேன்ஸி அல்லது ஆக்ஸிடைஸ்ட் நகைகள் போட்டா ரிச் லுக் கொடுக்கும்.

தங்கம், கவரிங் மாதிரியான நகைகள் லினென் புடவைக்கு செட் ஆகாது. பீட்ஸ், கற்கள் மாதிரியான நகைகள் ஸ்பெஷலா இருக்கும். முத்து, பவள  நகைகளும் தேர்வு செய்யலாம். சின்னதோ பெரிதோ முடிஞ்சவரை ஒரே ஒரு நெக் நகை மட்டும் போட்டுக்கறது நல்லது. இல்லைனா தோடு மட்டும்  கிராண்டா மாட்டி கழுத்துல சின்ன டாலர் செயினோ, நகையே அணியாமலோ விட்டுடலாம்...’’ என்கிறார் அனில் கோத்தாரி.  

உடைகள்: Mabia @ivalinmabia
Makeup & Hair Stylist: ஷுவானா ஃபையஸ், அனிகேத் ஜெயின் (Credit: ஷிவ்).   

ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gurunanak30

  குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

 • bushfire30

  ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

 • thiruvannamalai30

  அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!: புகைப்படங்கள்

 • vivasayigal30

  நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்!: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்