SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தன்னம்பிக்கைக்கும் திமிருக்கும் ஒரு மெல்லிய கோடுதான் வித்தியாசம்!

2014-11-12@ 12:15:42

சிறப்புப் பேட்டி: சிவசங்கரி

60களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய சிவசங்கரி, ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு மேலாக எழுதிக் குவித்தவர். எழுத்தாளராக மட்டுமின்றி, சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சிவசங்கரி. அவரது கிளாசிக் பேட்டி இந்த இதழிலும் தொடர்கிறது.

பரதமும் சங்கீதமும் கற்றவராச்சே நீங்க... எழுத்துக்குப் பதில் அந்தத் துறைகள்ல கவனம் செலுத்தியிருக்கலாமோனு என்னிக்காவது நினைச்சதுண்டா?

‘‘இல்லை. என்னோட 59வது வயசுல என் குரு கே.ஜே. சரஸாவோட டான்ஸ் ஸ்கூலோட 50வது வருஷக் கொண்டாட்டத்துல அவங்களோட முதல் ஸ்டூடன்ட்டுங்கிற முறையில நாரதகான சபாவுல 1 மணி நேரம் டான்ஸ் பண்ணினேன். இப்பவும் என்னால அபிநயங்கள் பண்ண முடியும். பாடறதுண்டு. பாட்டு கேட்கறதுண்டு. மத்தபடி வருத்தங்களோ, விரக்தியோ எதுவுமே இல்லை.‘‘  

எல்லாக் காலங்கள்லயும் பெண் என்பவள் தன் லட்சியங்களை அடைய நிறைய போராட வேண்டியிருக்கு. தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கு. உங்க காலத்திலும் அந்த சவால் இருந்ததா? எப்படி சமாளிச்சீங்க?

‘‘என்னோட பாட்டி, அம்மா காலத்துல இருந்த நிலைமை என் காலத்துல இல்லை. என் பீரியட்ல கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெறுவதுல பெரிய பிரச்னைகள் இல்லை. இன்னிக்கு நிலைமை இன்னும் முன்னேறியிருக்கு. நகரத்துப் பெண்கள் மட்டுமில்லாம, கிராமத்துப் பெண்கள்கிட்டயும் நிறைய தன்னம்பிக்கையையும் முற்போக்கு சிந்தனையையும் பார்க்கறேன். இதெல்லாம் சந்தோஷமான மாற்றங்களா இருந்தாலும் அவளை பெண்ணாகப் பார்க்கிற பார்வை மாறணும். என்னிக்கு சமுதாயத்துல பெண் மதிக்கப்படறாளோ, அன்னிக்குத்தான் பெண் விடுதலை கிடைச்சதா அர்த்தம். அதுக்கு அவ சுயமரியாதையோட இருக்கணும். தன்னம்பிக்கையோட இருக்கணும். தன்னம்பிக்கைக்கும் திமிருக்கும் ஒரு மெல்லிய கோடுதான் வித்தியாசம். என்னால முடியும்னா அது தன்னம்பிக்கை. என்னால மட்டும்தான் முடியும்னா அது திமிரு. திமிரு இல்லாத சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம்.”

உங்களுடைய ஆரம்ப காலத்துல... பத்திரிகைகளின் பார்வை உங்க மீது எப்படி இருந்தது? பெண் எழுத்தாளர் என்ற பார்வை இருந்ததா?

‘‘நிறைய கஷ்டங்கள் இருந்திருக்கு. 68ல நான் எழுத ஆரம்பிச்சேன். 70ல ‘எதற்காக’னு என்னோட முதல் நாவல் வந்தது. கணவன், மனைவியை ‘ஹாய்’, ‘டார்லிங்’னு பேசறதெல்லாம் அப்ப இல்லை. நானும், என் கணவரும் அப்படிப் பேசிக்கிட்டோம். அதை வச்சு அப்படியே எழுதினேன். அதையே கேள்வி கேட்டாங்க. 71ல என்னோட முதல் பயணக்கதையில ஹோமோசெக்ஷுவல்ஸ் பத்தி எழுதினப்ப, ‘ஒரு பொம்பிளை எப்படி இப்படியெல்லாம் எழுதலாம்?’னு கண்டனம் எழுப்பினாங்க. இன்னும் நான் பார்த்த திருமணம் தாண்டின தகாத உறவு பத்தி, திருமணமாகாமலேயே குழந்தை பெத்தவங்களுக்கான ஹோம் பத்தியெல்லாம் எழுதினப்ப, ‘அவளே அப்படித்தான் போல... மோசமான கேரக்டர் போல...’னு விமர்சனங்கள் வந்திருக்கு.

சாவி மாதிரியான பத்திரிகை ஆசிரியர்கள் காலத்துல இளம் பெண் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தற விதமா எங்களோட படங்களை அட்டையில போடற ட்ரெண்ட் இருந்தது. அட்டையில படத்தைப் போட்டுக்கிட்டு, இளமையையும் பெண்மையையும் காட்டி பேரெடுக்கிறதாகக்கூட விமர்சனங்கள் வந்திருக்கு. 75க்குப் பிறகு என் மீதான விமர்சனங்கள் குறைய ஆரம்பிச்சது. எல்லா பத்திரிகை ஆசிரியர்களும் எனக்கு நல்ல மேடை போட்டுக் கொடுத்தாங்க. அதனாலதான் என்னால துணிஞ்சு எழுத முடிஞ்சது.’’

பெண்ணியம், முற்போக்கு என்ற பெயர்ல, இன்றைய பெண் எழுத்தாளர்கள் பெண் உறுப்புகளைப் பத்தி பகிரங்கமாகப் பேசறதையும் எழுதறதையும் எப்படிப் பார்க்கறீங்க? நீங்க அப்படி எழுதுவீங்களா?

‘‘நான் அப்படி எழுத மாட்டேன். அவர்கள் அப்படி எழுத அவங்களுக்குனு சில காரணங்கள் இருக்கலாம். அப்படி எழுதறது மூலமா அவங்க ஏதோ சொல்ல நினைக்கிறாங்க. அதை சரியா, தப்பானு தீர்ப்பு சொல்ல நாம யாரு?  ஏன் அப்படி எழுதறாங்க, எதை எதிர்பார்த்து அப்படி எழுதறாங்கனு அவங்களைத்தான் கேட்கணும்.’’

இப்போதுள்ள எழுத்தாளர்கள்ல உங்களைக் கவர்ந்தவர்னு யாரை சொல்வீங்க?

‘‘கையில எது கிடைச்சாலும் படிக்கிற டைப் நான். இப்ப நான் அதிகம் படிக்கிறது ஆன்மிகப் புத்தகங்களைத்தான். எல்லா எழுத்தாளர்களையும் படிக்காம நான் கருத்து சொல்றது சரியா இருக்காது. எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்னு நிறைய பேர் நல்லா எழுதறாங்க.’’

எழுத்து எப்போதாவது உங்களை சலிப்படைய வச்சிருக்கா?

‘‘இல்லவே இல்லை. அப்படின்னா என்னிக்கோ எழுதறதை நிறுத்தியிருப்பேன். நான் எந்த ஆதாயத்தையும் எதிர்பார்த்து எழுதலை. மக்கள் என் எழுத்தை ஏத்துக்கிட்டாங்க. எழுதினேன். எழுதினது போதும்னு தோணினதால இப்ப எழுதாம இருக்கேன். இன்னும் 2, 3 வருஷம் கழிச்சு பிரமாதமா ஒரு கரு கிடைச்சா மறுபடி எழுதுவேனோ என்னவோ...’’

எழுத்து உங்களுக்கு என்ன கொடுத்திருக்கு? உங்கக் கிட்டருந்து எதைப் பறிச்சிருக்கு?

‘‘மனுஷி சிவசங்கரி, எழுத்தாளர் சிவசங்கரியை எப்போதும் வளப்படுத்தியிருக்கா. எழுத்தாளர் சிவசங்கரிக்கு அகோரப் பசி. பிராஸ்டிட்யூஷன் நடக்கிற இடம், சிறைச்சாலைனு மனுஷியாப் போக முடியாத பல இடங்களுக்கும் எழுத்தாளர் சிவசங்கரியால ஈஸியா போக முடிஞ்சது. எழுத்துக்காக எத்தனையோ இடங்களுக்குப் போக முடிஞ்சது. இந்த நூற்றாண்டோட மிகச்சிறந்த அறிவுஜீவிகளை சந்திக்க முடிஞ்சது. எழுத்தாளர் சிவசங்கரி, மனுஷி சிவசங்கரிக்கு எப்போதும் அடங்கியே இருந்திருக்கா. ஸோ... எழுத்துங்கிறது எனக்கு நிறைய வளங்களைத்தான் கொடுத்திருக்கே தவிர,அதனால நான் எதையும் இழக்கலை.”

இப்ப என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?

‘‘இத்தனை வருஷமா செய்யாம விட்ட பர்சனல் விஷயங்களுக்கு இப்பதான் நேரம் கிடைச்சிருக்கு. என்னோட சாரிட்டி ஒர்க்ல இப்ப இன்னும் முனைப்போட இயங்க முடியுது. சிவசங்கரி சந்திரசேகரன் சாரிட்டி மூலமா குழந்தைகளோட படிப்புக்கும் ஹெல்த்துக்கும் நிறைய விஷயங்கள் பண்றேன். அதைப் பத்தி விவரமா பேசி, விளம்பரப்படுத்திக்க விரும்பலை. நிறைய பேரை சந்திக்கிறேன். வாழ்க்கை ரொம்ப திருப்தியா, அமைதியாப் போயிட்டிருக்கு.’’

உங்களுடைய ஒருநாள் பொழுது எப்படியிருக்கும்?

‘‘காலையில 5:15க்கு எழுந்திருப்பேன். காபி குடிச்சிட்டு 45 நிமிஷம் நடைப் பயிற்சி. 2 மாசத்துக்கு முன்ன வரைக்கும் ஜிம் போயிட்டிருந்தேன். இப்ப முதுகுவலி காரணமா நிறுத்தி வச்சிருக்கேன். குளிச்சு முடிச்சு ஒரு மணி நேரம் பூஜை, பிரேயர். கடவுள்கிட்ட எனக்கு பயமே கிடையாது. அவர் மேல எனக்கு அன்புதான். எனக்குத் தோணற எல்லாத்தையும் அவருக்குச் செய்வேன். 10 மணிக்கு சாப்பாடு. அப்புறம் 1 மணி நேரம் இமெயில் பார்க்கிறது, கேம்ஸ் விளையாடறதுனு போகும். 11 மணிலேருந்து 6:30 மணி வரைக்கும் ஆபீஸ் வேலை. 6:30 டூ 7:45 ‘தெய்வமகள்’, ‘நாதஸ்வரம்’னு சீரியல் டைம். 8:30க்கு டின்னர். அப்புறம் கொஞ்ச நேரம் இங்கிலீஷ் நியூஸ் சேனல்ஸ் பார்ப்பேன். 9:45க்கு தூக்கம்...’’

உங்களுடைய அடுத்த படைப்பை எப்ப எதிர்பார்க்கலாம்?

‘‘அடுத்து எப்ப எழுதப் போறீங்கனு கேட்கறவங்களுக்கு என்னோட கேள்வி ஒண்ணுதான். என்னோட 130 படைப்புகளையும் படிச்சிட்டீங்களா? இல்லைன்னா முதல்ல அதையெல்லாம் தேடிப் பிடிச்சுப் படிங்கனு சொல்வேன். எழுதறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. ஆனா, இப்ப சில விஷயங்களைச் செய்ய வேண்டாம்னு தோணுது. செய்யாம இருக்கேன். வயிறு நிறைஞ்ச பிறகு எப்படி சாப்பிடமுடியும்? அதுக்காக இனி நான் எழுதவே மாட்டேன்னு சொல்லலை. இப்ப போதும்னுதான் சொல்றேன்.’’

உங்களுடைய இலக்கியம் மூலம் இந்திய இணைப்புத் திட்டம் பத்திச் சொல்லுங்களேன்...

‘‘18 மொழிகள்... கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குனு நாலு பிராந்தியங்கள். இந்தியாவை குறுக்கேயும் நெடுக்கேயும் ஒரு மூலை, முடுக்கு விடாமப் பார்த்திருக்கேன். கிட்டத்தட்ட 120 இலக்கிய ஜாம்பவான்களை சந்திச்சேன். இந்த முயற்சியை ஆரம்பிக்கும் போது 6 வருஷத்துல முடிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா 18 வருடங்கள் தொடர்ந்தது. என்னோட பயண அனுபவம், அந்தந்த மொழி எழுத்தாளரோட பேட்டி, அவங்களோட கதை அல்லது கவிதையோட மொழிபெயர்ப்பு, அவங்களோட மொழியைப் பத்தின விளக்கம்னு இதை நாலு பகுதிகளா பிரிச்சுக்கிட்டேன். 4 தொகுதிகளா வெளிவந்திருக்கு. பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிதான் அட்டையை டிசைன் பண்ணினார். இந்தியருக்கு இந்தியரை அறிமுகப்படுத்தற இந்த முயற்சி எனக்கு ரொம்பவே திருப்தியாஅமைஞ்சது...’’  

இந்திரா காந்தியோட நெருக்கமாகப் பழகினவர் நீங்க. அவருடனான மறக்க முடியாத அனுபவங்கள் சிலதைப் பகிர்ந்துக்க முடியுமா?

 ‘‘71ல பங்களாதேஷ் டிக்ளேர் பண்ணினபோது, நானும், என் கணவரும் விழுப்புரத்துல இருந்தோம். சும்மா விளையாட்டா என் கணவர்கிட்ட இந்திரா காந்தி எப்படிப்பட்ட மனுஷி, எப்படிப்பட்ட பெண், எப்படிப்பட்ட மருமகள், எப்படிப்பட்ட பாட்டி, அத்தைனு அவங்களோட பலவிதமான பரிமாணங்களைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கிறதா சொன்னேன். நான் எழுத ஆரம்பிச்சு அப்பதான் 3 வருஷமாகியிருந்தது. ‘ஃப்ளைட்டை பிடிச்சு டெல்லிக்கு போ... ட்ரை பண்ணு‘னு சொன்னார் என் ஹஸ்பெண்ட். நானும் கிளம்பிட்டேன். இந்திரா காந்தியோட பிரைவேட் செகரட்டரி சேஷனை எங்கப்பாவுக்குத் தெரியும். அந்த அறிமுகத்துல அவரை சந்திச்சேன். ‘சூரி பொண்ணா நீ... அவங்க ரொம்ப பிஸியா இருக்காங்களே’னு சொல்லி எனக்கு ஒரு பாஸ் கொடுத்தார்.

அதை வச்சுக்கிட்டு இந்திரா காந்தி சம்பந்தப்பட்ட எல்லா ஃபைல்களையும் படிக்கவும் அவங்க வீட்டு நாய்க்குட்டியோட விளையாடவும் அவங்க மகன் சஞ்சய் கூட டீ குடிக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைச்சது. ஆனாலும் எனக்கு இந்திரா காந்தியை நேர்ல பார்த்துப் பேசணும்னு ரொம்ப ஆசை. 5 நிமிஷமாவது டைம் வாங்கிக் கொடுங்கனு கேட்டேன். 80 நிமிஷம் என்கிட்ட பேசினாங்க. அலாதியான அனுபவம் அது. பேசிக்கிட்டே இருப்பாங்க. எதிர்ல உள்ள ஃப்ளவர் வாஷ் சரியில்லாட்டி அட்ஜஸ்ட் பண்ணுவாங்க. மிதியடி கோணலா இருந்தா அவங்களே சரி பண்ணுவாங்க. திடீர்னு சமையக்காரரைக் கூப்பிட்டு, தான் படிச்ச ஒரு ரெசிபியை பத்தி சொல்லி, அதை ட்ரை பண்ணச் சொல்வாங்க.

‘சிவசங்கரி... நீங்க கட்டியிருக்கிற புடவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு‘னு சொல்வாங்க. பேசும் போது நம்மளையே கவனிப்பாங்க. எனக்கு அப்ப 28 வயசுதான். என்கிட்ட அவங்க காட்டின மரியாதையும் அன்பும் மறக்க முடியாதது. அதை வச்சுதான் ‘இந்திராவின் கதை’யும், ‘இந்திராவுடன் ஒரு நாளும்’ எழுதினேன். ரெண்டு முறை ராஜீவ் காந்தியை இன்டர்வியூ பண்ணியிருக்கேன். தானே கார் ஓட்டுவார். பேசிட்டிருக்கும் போது அவங்க அம்மாவை போல நம்மையே கவனிப்பார். எழுந்து போய் கூல் ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வந்து கொடுத்தார். அந்த அன்பையும் இதத்தையும் அம்மா - மகன் ரெண்டு பேர்கிட்டயும் பார்த்தேன்.’’

உங்களோட நீண்டகால நட்பு பத்தி  சொல்லுங்களேன்?

‘‘பவானினு ஒரு ஃப்ரெண்ட். செகண்ட் ஃபார்ம்லேருந்து எனக்கு ஃப்ரெண்ட். கிட்டத்தட்ட 60 வருஷ நட்பு. ரிசர்வ் பேங்க்ல வேலை பார்த்து ரிட்டயர்டு ஆனவங்க. பாடகி வாணி ஜெயராமும் நானும் 30 வருஷமா ஃப்ரெண்ட்ஸ். ஏ.வி.எம். சரவணனும் அவரோட மனைவியும் நல்ல நண்பர்கள். 20 வருஷ தோழியான ப்ரியா நாராயணனும் நானும்தான் எப்போதும் ஒண்ணா டிராவல் பண்ணுவோம். நட்போ, உறவோ ஒருத்தருக்கொருத்தர் உண்மையா இருக்கிறதும் ஒருத்தரை அவங்களோட நிறை, குறைகளோட அப்படியே ஏத்துக்கிறதும்தான் அதைத் தக்க வைக்கும். முகமூடி போட்டுக்கிட்டா கொஞ்ச நேரத்துல மூச்சுத் திணறும். அதை எடுத்தா எதிர்ல உள்ளவங்க பயந்துடுவாங்க.’’

abortion laws by state pro abortion facts period after abortion
abortion laws by state pro abortion facts period after abortion
abortion laws by state pro abortion facts period after abortion
abortion laws by state what is the abortion pill period after abortion
coupons cialis cialis coupon codes new prescription coupon
abortion at 16 weeks open terminating a pregnancy
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
estrace 2mg estrace strass
concord neo concordia concord neo
concord neo concorde concord neo
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
abortion arguments cheap abortions second trimester abortion
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
discount coupons best site for coupons discount code
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis
lamisil 1 lamisil lamisil pastillas
viagra naturel viagra femme viagra femme
viagra naturel viagra effet viagra femme
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston cijena bez recepta duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
duphaston cijena bez recepta duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
third trimester abortion pill types of abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
addiyan chuk chuk addyi menopause addyi fda
lamisil crema lamisil lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
abortion pill procedures price of an abortion pill free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
voltaren voltaren ampul voltaren ampul
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
addyi fda blog.plazacutlery.com addyi review
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill abortion pill price abortion pill side effects
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis coupons free achrom.be lilly coupons for cialis
cialis cialis nedir cialis tablet
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
abortion procedure abortion pill prices home abortion pill methods
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy 60 mg priligy 30 mg
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
third trimester abortion clinics multibiorytm.pl abortion research paper
against abortion number of abortions per year abortion videos
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill
medical abortion clinics women pregnant abortion cost
naltrexone for alcohol cravings go naltrexone pain management
naltrexone alcohol low dose naltrexone depression implant for opiate addiction
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
buy naltrexone how does naltrexone make you feel ldn naltrexone

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

 • chinacrob23

  சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

 • singapore-robo23

  கொரோனா பரிசோதனைக்கும் வந்துவிட்டது ரோபோ!: சிங்கப்பூரில் மூச்சுக் குழாயிலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் ரோபோக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்