SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எழுதும்போது பிபி அதிகமாகுது! ரமணிசந்திரன்

2012-07-31@ 15:50:32

ஒரு நடிகருக்கும் ரசிகருக்குமான உறவு தற்காலிகமானது. மார்க்கெட்டில் இருக்கும் நடிகர்களைப் பொறுத்தே ரசிகர்களின் மன சிம்மாசனத்தில் அந்த நட்சத்திரத்துக்கு இடம்! எழுத்தாளருக்கும் வாசகருக்குமான உறவு அத்தகையதல்ல. எழுதுபவர் ஆணா, பெண்ணா? இளையவரா, மூத்தவரா? இப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஒவ்வொரு படைப்பு வெளியாகும் போதும் பலப்படும் அந்த உறவு.

42 வருட எழுத்து அனுபவத்தில் ஆயிரக்கணக்கான வாசகர்களை சம்பாதித்து, சீரியல் மோகத்தையும் மீறி, அவர்களைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் ரமணிசந்திரன்.

ரமணிசந்திரனின் எழுத்து பரிச்சயமான அளவுக்கு, அவரது முகம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்தக் கட்டத்திலும் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள விரும்பாத ரமணி சந்திரன், தோழிக்காகப் பேச சம்மதித்தார். ரமணிசந்திரன் படைப்புகளை பி.ஹெச்டியே பண்ணும் அளவுக்கு படித்திருந்தார்கள் அவரது படு தீவிர வாசகிகள் கொடுங்கையூரைச் சேர்ந்த சாந்தி மோகனும், சந்திரா மணிவாசகமும். எழுத்தாளரையும், வாசகிகளையும் சந்திக்க வைத்தால்..?

ஒரு இனிய மாலைப்பொழுதில் ரமணிசந்திரனின் இல்லத்தில் நிகழ்ந்த உணர்வுபூர்வமான அந்த உரையாடலிலிருந்து... ‘‘மேடம்.... எங்களால நம்பவே முடியலீங்க... உங்க கதைகளை ஒண்ணு விடாம படிச்சிருக்கோம். உங்களை சந்திக்க இப்படியொரு வாய்ப்பு வரும்னு நினைக்கலை. ரொம்ப சந்தோஷம் மேடம்... தோழிக்கும் தேங்க்ஸ்!’’  முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்துடன் சாந்தி.

‘‘எங்களோட மிகப்பெரிய பொழுதுபோக்குன்னா, உங்க நாவல்கள் படிக்கிறதுதான் மேடம்... புத்தகத்தைக் கையில எடுத்தா, முழுமூச்சா படிச்சு முடிச்சிட்டுத்தான் அடுத்த வேலையே... உங்க எழுத்துகள் அவ்வளவு அன்யோன்யத்தைக் கொடுக்கும்...’’

 பரவசத்தை பகிர்ந்து கொண்ட சந்திரா, ‘‘நீங்க எழுத்தாளரானது எப்படிங்க மேடம்...?’’ முதல் கேள்வியை முன் வைத்தார்.

‘‘அது திட்டமிட்டு நடந்ததெல்லாம் இல்லை. கோயம்புத்தூர்ல இருந்த என் சகோதரிக்கு நிறைய கடிதங்கள் எழுதுவேன். அவங்களோட கணவர் ஒரு வாரப்பத்திரிகையில ஆசிரியரா இருந்தார். என்னோட கடிதங்களைப் படிச்சிட்டு, ‘உங்க எழுத்து நடை நல்லாருக்கே... நீங்க ஏன் கதை எழுத முயற்சி பண்ணக்கூடாதுன்னு, அவர் கேட்டார். நானாவது, எழுதறதாவதுன்னு அப்பவும் நான் அலட்சியமாத்தான் இருந்தேன். எனக்கே தெரியாம, அவங்க பத்திரிகையில என் கதைக்கான அறிவிப்பையும் வச்சிட்டார் அவர். அதனால எழுத வேண்டிய கட்டாயத்துல ஆரம்பிச்சதுதான். என்னோட முதல் நாவல் ‘ஜோடிப் புறாக்கள்.’ அதுக்கான வரவேற்பும் பாராட்டுக்களும்தான் என்னைத் தொடர்ந்து எழுத வச்சது. 1970லேருந்து எழுதறேன்...’’

சிறு புன்னகையுடன் ரமணிசந்திரன் பதில் சொல்ல... ‘‘பத்திரிகை பேட்டி, டி.வின்னு மீடியாவுலேருந்து ஒதுங்கியே இருக்கீங்களே... ஏன் மேடம்?’’  பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வருத்தத்தை அவர்களின் சார்பாக, கேள்வியாக முன் வைத்தார் சந்திரா.

‘‘நான் வளர்ந்த விதமே அப்படித்தாம்மா... பெரிசா சிரிக்கிறது, சத்தம் போட்டுப் பேசறது, எந்த உணர்ச்சிகளையும் அதிகமா வெளிப்படுத்தறது... இதெல்லாம் எங்கப்பாவுக்குப் பிடிக்காது. வேற பெரிய காரணங்கள் இல்லம்மா...’’  வெகு இயல்பாக பதிலுரைக்கிறார் ரமணிசந்திரன்.

‘‘அந்தப் பிரதிபலிப்பை உங்க கதைகள்ல வர்ற கேரக்டர்கள்ல பார்க்க முடியுது மேடம். அது சரி மேடம்... உங்க கதைகள்ல பெரும்பாலும் எல்லாரும் நல்லவங்களாவே இருக்காங்களே... ஏன்?’’  பதிலையேகேள்வியாக்கினார் சாந்தி.

‘‘நம்மைச் சுத்தி நிறைய நல்லவங்கதாம்மா இருக்காங்க. நூத்துல ஒருத்தரோ, ரெண்டு பேரோ தப்பிப் போகலாம். அவங்களைப் பத்தி ஏன் பேசிக்கிட்டு..? நான் சந்திச்ச, சந்திக்கிற நல்லவங்களைத்தான் என் கதையோட கேரக்டர்களாக்கறேன்...’’

‘‘உங்க கதைகளைப் படிக்கிறப்ப ஒரு சுகம் என்னன்னா, கல்யாணக் காட்சியை விவரிச்சீங்கன்னா, ஒரு கல்யாணத்தையே நேர்ல பார்த்த மாதிரி இருக்கும். புதுசா கல்யாணமானவங்களுக்கு சமையல் குறிப்பு இருக்கும். தெரியாத புது விஷயங்களைத் தெரிஞ்சுக்குவோம். அந்த ஸ்டைலை நீங்க எடுத்துக்க ஏதாவது காரணமுண்டா மேடம்..?’’  இது சந்திரா.

‘‘எந்தத் துறையைப் பத்தி எழுதினாலும், அதைப் பத்தி முழுமையா தெரிஞ்சுக்கிட்டுத்தான் எழுதுவேன். ‘ஆசை ஆசை ஆசை’ கதையோட நாயகி, விதம்விதமான பூச்செண்டு செய்வா. அப்படிப் பண்றவங்களை நேர்ல பார்த்து, தகவல்கள் சேகரிச்சு எழுதினப்ப, இவ்ளோ விஷயமிருக்கான்னு நிறைய வாசகர்கள் கேட்டாங்க.

நாங்க அக்கா, தங்கச்சிங்க அஞ்சு பேர். லீவு விட்டாங்கன்னா, திருச்செந்தூர்ல அம்மா வீட்ல எல்லாரும் ஒண்ணா சேருவோம். எங்களோட ஒரே பொழுதுபோக்கு அங்க உள்ள கடலில் சங்கும் சிப்பியும் பொறுக்கறது. அப்ப ஒரு தடவை கடல் தண்ணீர்ல கலர் கலரான ஜெல்லி மீன்களைப் பார்த்தோம். அதை சேலையில பிடிச்சா, உருவம் சிதைஞ்சு, அப்படியே தண்ணீரா வழிஞ்சு ஓடறதைப் பார்க்க வியப்பா இருக்கும். அதுலயே சில மீன்கள் படுபயங்கரமான விஷத்தன்மை கொண்டதாம். எங்களுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் வேற யாருக்காவது நேரலாம். அதுக்கான ஒரு முன்னெச்சரிக்கையாதான் நான் பார்த்த, கேள்விப்பட்ட இந்த விஷயங்களை ‘எனக்காகவே நீ’ என்ற கதை மூலமா பகிர்ந்துக்கிட்டேன். இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்...’’  ரமணிசந்திரன் நிறுத்த, நீண்ட நேரமாகக் கேட்கத் துடித்துக் கொண்டிருந்த விஷயத்தைக் கேள்வியாக்கினார் சாந்தி.

‘‘உங்க கதைகளோட கிளைமாக்ஸ் எப்போதும் சுபமாகவே இருக்கே மேடம்..?’’

‘‘நான் பேனா பிடிக்க ஆரம்பிச்ச காலத்துலேயே, எனக்குள்ள உறுதி எடுத்துக்கிட்ட விஷயம் இது. நான் எழுதறது என் வாசகர்களுக்குப் பிடிக்கணும். படிச்சு முடிச்சதும் சந்தோஷத்தைக் கொடுக்கணும். ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில எத்தனையோ துயரங்கள் இருக்கு. கதைகள்லேயும் அது எதுக்கு? ‘கிளைமாக்ஸுக்காகவே உங்க கதைகளைப் படிக்கிறோம்’னு என்கிட்டயே எத்தனையோ வாசகர்கள் சொல்லியிருக்காங்க.

‘வெண்மையில் எத்தனை நிறங்கள்’ல கொஞ்சம் அழுகாச்சி கலந்திருச்சு. நானே அதை அழுதுகிட்டேதான் எழுதினேன். அப்புறம் அப்படி எழுதறதைத் தவிர்த்திட்டேன்.

எழுத்துல சில வரையறைகள் வச்சிருக்கேன். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ங்கிற கொள்கையின் மேல அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு எனக்கு. என் கதையில வரும் பெண்கள் ரெண்டாவது கல்யாணம் பண்றாங்கன்னா, அதன் பின்னணியில அழுத்தமான, தவிர்க்க முடியாத ஒரு காரணம் இருக்கும். மரணத்தை உண்டாக்கற நோய்களைப் பத்தி எழுத மாட்டேன். சாதியைப் பிரதிபலிக்கிற பேச்சோ, பெயர்களோ இருக்காது. வட்டார வழக்கைக்கூடத் தவிர்த்துடுவேன்.’’

ரமணிசந்திரனின் பேச்சில் வியந்து போன சந்திராவின் அடுத்த கேள்வி இது...

‘‘சிறுகதை, தொடர்கதைகள் அதிகம் எழுதறதில்லையே... இதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?’’

‘‘சிறுகதை, தொடர்கதைகளை விட, நாவல் எழுதறதுதான் எனக்குச் சுலபம். ரெண்டே பக்கங்களில், அத்தனை கேரக்டர்களையும் கொண்டு வந்து, அதுக்கொரு பன்ச் வச்சு, கிளைமாக்சும் சொல்ற சிறுகதைகள் எழுத, எனக்கு அதிக நேரம் எடுக்குது. தொடர்கதைன்னா, வாரம் ஒரு கிளைமாக்ஸ் தேடணும். அதுக்கான தேடல், யோசனைகள்ல எனக்கு பிபி அதிகமாகுது. ‘நீங்க எழுதாம இருக்கிறது நல்லது’ன்னு டாக்டர்ஸ் அட்வைஸ் பண்ற அளவுக்கு எனக்கு உடம்பு மோசமாயிடுச்சு. அந்த படபடப்பும் அழுத்தமும் வேணாம்னுதான் தொடர்கதைகள் எழுதறதில்லை...’’  சொல்லிவிட்டு புன்முறுவல் பூக்கிறார் ரமணிசந்திரன்.

‘‘உங்களுக்குப் பிடிச்ச எழுத்தாளர்கள்?’’  அவசியக் கேள்வியை அவசரமாகக்கேட்டவர் சாந்தி.

‘‘அனுத்தமாவோட சில படைப்புகள் பிடிக்கும். அனுராதா ரமணனோட எழுத்து ரொம்பப் பிடிக்கும். இங்கிலீஷ்ல ஜெஃப்ரி ஆர்ச்சர்.’’

‘‘உங்க லட்சியப் படைப்பு மேடம்..?’’

 சேர்ந்து கேட்டார்கள் வாசகத் தோழிகள்.

‘‘சுதந்திரப் போராட்ட காலத்தைப் பத்தின ஒரு நாவலை எழுத ஆரம்பிச்சு, வெறும் 40 பக்கங்களோட நின்னுட்டிருக்கு. அதுக்கான குறிப்புகளைத் தேடற வேலையை பல வருடங்களா பண்ணிட்டிருக்கேன். எப்போ வெளிவரும்னு சொல்ல முடியாது. நிச்சயம் என் வாழ்நாள்ல அது ரொம்ப முக்கியமான ஒரு படைப்பா இருக்கும்!’’

ரமணிசந்திரன் சொல்ல, ‘‘அதைப் படிக்கணுங்கிற ஆர்வம் இப்பவே அதிகமாயிடுச்சு மேடம்!’’ என்கிறார்கள் சாந்தியும், சந்திராவும்.. ‘‘உங்களுக்காகவாவது சீக்கிரமே அதை முடிக்கப் பாக்குறேன்!’’

சினேகச் சிரிப்புடன் விடை கொடுக்கிறார் ரமணிசந்திரன் என்கிற எழுத்தரசியான அந்த இல்லத்தரசி.

abortion laws by state pro abortion facts period after abortion
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments do abortions hurt second trimester abortion
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
kamagra uk kamagra uk kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons free printable cialis coupons coupon prescription
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
feldene precio feldene d feldene gel precio
discount coupons best site for coupons discount code
abortions facts free abortion pill free abortion pill
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
amoxicilline amoxicilline amoxicillin al 1000
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
the cost of abortion abortion price how to get an abortion pill
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra helyett viagra cena
viagra pret viagra viagra cena
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
priligy keskustelu blog.aids2014.org priligy resepti
priligy keskustelu priligy keskustelu priligy resepti
feldene flas feldene feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
crestor rosuvastatin 10mg price crestor tablets price buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret vermox prospect vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
abortion procedure abortion pill prices home abortion pill methods
viagra helyett viagra pret viagra torta
neurontin 400 f6finserve.com neurontin
priligy thailand priligy hinta priligy 30 mg
abortions facts 2nd trimester abortion pill where to get an abortion pill
lamisil crema lamisil pastillas lamisil
dilation and curettage hysteroscopy nyc abortion clinics when is it too late to get an abortion
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
naltrexone for alcohol cravings link naltrexone pain management
where to get naltrexone implant site stopping ldn
low dose naltrexone side effects autism naltrexone side effects low dose dr bihari ldn
naltrexone injections click stopping ldn
alcohol naltrexone charamin.com naltrexone uk

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்