SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

377
21/10/2020

அசாம் மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த தேசிய பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த அஸாம் காசிரங்கா தேசிய பூங்கா இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. இந்தியாவில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் மற்றும் புலிகளுக்கு பெயர் போன பூங்காக்களில் ஒன்றாக அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா இருந்து வருகிறது. இந்த பூங்கா கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த ஜூன் மாத காலகட்டங்களில் பெய்த மழை காரணமாக பூங்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒன்றை கொம்பு காண்டாமிருகம் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உயிரிழந்தன. இந்நிலையில் அங்குள்ள பிரபலமான காசிரங்கா தேசியப்பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தை முதல்வர் சார்பானந்தா சோனோவால் முறைப்படி இன்று திறந்து வைக்கிறார். அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. பூங்கா மீண்டும் திறக்கப்பட்ட முதல் சில நாட்களில் யானை சஃபாரிகள் செயல்பட அனுமதிக்கப்படாது என்றும் நவம்பர் முதல் மீண்டும் தொடங்கலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 300kg11

    பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்